புளியகுளம் மாடு
Appearance
புளியகுளம் மாடு என்பது தமிழ்நாட்டின் புளியகுளம், சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை சேலம் பகுதியிலும் கர்நாடகத்தின் பெங்களூரு மாவட்டத்திலும் காணப்படும் ஒரு மாட்டினமாகும். இந்த மாடுகளை பட்டி மாடு என்ற பெயராலும் அழைப்பர். இந்த மாடுகளை நிலத்தில் பட்டி போட்டுத் தங்கவைத்தால் அதன் சாணம், சிறுநீர் ஆகியவற்றால் அந்த நிலத்திற்கு மூன்றாண்டுகளுக்கு உரம் தேவையில்லை என்ற கருத்து உள்ளது.[1]
சுறுசுறுப்பான இந்த மாடுகள், வண்டி இழுக்கப் பயன்படுபவை. அதேநேரம், வேகமாக ஓடக்கூடியவை அல்ல. இந்த மாட்டினம் மதுரை பகுதியில் சல்லிக்கட்டில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த இனத்தின் காளைகள் அடர் சாம்பல், கறுப்பு நிறத்திலும் பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்திலும் இருக்கும். மைசூர் மாட்டினங்களுக்கே உரிய வகையில் கொம்புகள் பின்பக்கமாக வளைந்திருக்கும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கம்பீரப் பார்வையும் சிலிர்த்து நிற்கும் திமிலும்: தமிழக மாட்டினங்களின் மரபும் பெருமையும்". தி இந்து. 9 சனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 17 மார்ச் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ ஆதி (31 மார்ச் 2018). "ஜல்லிக்கட்டில் சீறும் பட்டி மாடு". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 1 ஏப்ரல் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)