புரோமின் நீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோமின் நீர், Br 2

புரோமின் நீர் (Bromine water) என்பது ஈரணு புரோமின் நீரில் கரைந்துள்ள ஓரு கரைசலாகும். அதிகமான ஆக்சிசனேற்றம் செய்யும் பண்பைக் கொண்ட இக்கரைசல் அடர்த்தியான பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. புரோமின் நீரின் மூலக்கூறு எடை 159.81, மற்றும் இதன் அடர்த்தி அடர்த்தி 1.307 கிராம்/மிலி ஆகும். புரோமின் வாயு மற்றும் நீராவியை நேரடியாக கலந்து வேதியியல் ஆய்வகத்தில் புரோமின் நீர் கரைசலை தயாரிக்கலாம். ஆனால் இது பாதுகாப்பான முறையல்ல என்பதால், நீர்த்த சோடியம் ஐப்போகுளோரைட்டு மற்றும் ஐதரோகுளோரிக் அமிலம் (HCl) முன்னிலையில் சோடியம் புரோமைடை (NaBr) சிதைத்து  புரோமின் நீர் கரைசலை தயாரிப்பது  மிகவும் வசதியான முறையாகும். [1]

ஆலசனேற்றும் பொறிமுறையுடன் நீரிய சூழலில் புரோமினுடன் வினைபுரியும் பொருட்களுக்கான அங்கீகாரத்தின் வேதியியல் மதிப்பீடுகளில் இது பெரும்பாலும் ஒரு வினைப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக 1 அல்லது அதற்கு மேற்பட்ட இரட்டை அல்லது மூன்று பிணைப்புகள் கொண்ட நிறைவுறாத கார்பன் சேர்மங்கள் புரோமினுடன் வினைபுரியும் பொருட்களாகும். புரோமின் நீருடன் நன்றாக வினைபுரியும் பொதுவான சேர்மங்கள் பீனால்கள், அல்கீன்கள், ஈனால்கள், அசிட்டைல் குழு, அனிலின் மற்றும் குளுக்கோசு முதலிஅனவாகும். கூடுதலாக, புரோமின் நீர் பொதுவாக இரட்டை சகபிணைப்பைக் கொண்ட ஆல்கீன் இருப்பதைச் சோதிக்கப் பயன்படுகிறது, புரோமின் நீருடன் வினைபுரிந்து, அதன் நிறத்தை தீவிர மஞ்சள் நிறத்தில் இருந்து நிறமற்ற கரைசலாக மாற்றுகிறது. சேர்மங்களில் ஆல்டிகைடு குழு இருப்பதைச் சரிபார்க்க புரோமின் நீர் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த வினையில், புரோமின் நீரின் நிறம் நிறமற்ற (ஆக்சிசனேற்ற செயல்முறை) மஞ்சள் நிறமாக மாற்றப்படுகிறது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bruce Mattson, Creighton University. "Microscale Gas Chemistry: Preparing Bromine Water".

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமின்_நீர்&oldid=3846386" இலிருந்து மீள்விக்கப்பட்டது