உள்ளடக்கத்துக்குச் செல்

புனித ஆரோக்கியநாதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித ஆரோக்கியநாதர்
புனித ஆரோக்கியநாதர்
Pilgrim
பிறப்புc. 1348 அல்லது 1295
மொன்ட் பெலியர், மஜோர்க்கா பேரரசு
இறப்பு15/16 ஆகஸ்ட் 1376/79
வொக்ஹெரா, சவோய்
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம்
புனிதர் பட்டம்உரோமை புனிதர்கள் பட்டியலில் திருத்தந்தை பதினான்காம் கிரகோரியால் சேர்க்கப்பட்டது (1590–1591)
முக்கிய திருத்தலங்கள்புனித ஆரோக்கியநாதர் ஆலயம், வெனிசு, இத்தாலி
திருவிழாஆகஸ்ட் 16, (பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையினரால்: ஆகஸ்ட் 17)
சித்தரிக்கப்படும் வகைதொடையில் காயத்தோடு, அப்பத்துண்டை கவ்விய நாயோடு
பாதுகாவல்போதேன்சா, இத்தாலி. மேலும் வாந்திபேதி, கொள்ளைநோய், மூட்டு வலி, கொள்ளைநோய் தோல் நோய்களினால் பாதிக்கப்பட்டோர். மேலும் திருமணமாகாதோர், நய்கள், தவறாகக்குற்றம் சாட்டப்பட்டோர், அறுவை சிகிச்சைமருத்துவர்கள்,[1] சவக்குழி தோண்டுவோர், திருப்பயணியர்கள், மருந்தகர்கள்
வெனிஸ் உள்ள புனித Roch கல்லறையை.

புனித ஆரோக்கியநாதர் அல்லது புனித ரோச் அல்லது புனித ராக் (அண். 1348 – 15/16 ஆகஸ்ட் 1376/79 (மரபுப்படி அண். 1295 – 16 ஆகஸ்ட் 1327[2]) என்பவர் ஒரு கிறித்தவப் புனிதர் ஆவார். இவரின் விழா நாள் 16 ஆகஸ்ட் ஆகும். ஆங்கிலத்தில் இவரை ராக் என்றும் கிளாஸ்கோ, இசுக்கொட்லாந்தில் ரோலோக்ஸ் என்றும் அழைப்பர்.[3] இவர் குறிப்பாக கறுப்புச் சாவுக்கு எதிராகப்பாதுகாவல் அளிப்பவராக நம்பப்படுகின்றார். மேலும் இவர் நாய்களுக்கும், தவறாகக்குற்றம் சாட்டப்பட்டோருக்கும் பாதுகாவலராவார்.

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]
புனித ஆரோக்கியநாதர் ஆலயம், வாவத்துறை, கன்னியாகுமரி

இவர் மஜோர்க்கா பேரரசின் மொன்ட் பெலியரில் சுமார் 1295இல் பிறந்திருக்கக்கூடும். இவரின் தந்தை அந்த நகரின் ஆளுனராவார். இவரின் பிறப்பின்போது இவரின் மார்பில் ஒரு சிலுவை வடிவில் சிவப்பு நிற மச்சம் இருந்ததாக நம்பப்படுகின்றது. இவரின் இருபதாம் அகவைக்குள் இவரின் பெற்றோர் இருவரும் இறந்தனர். இவரின் தந்தை, தாம் இறப்பதற்கு முன், இவரை நகரின் ஆளுனராக்கினார். ஆயினும் தந்தையின் இறப்புக்குப்பின்பு தன் சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு அளித்தார். தனது ஆளுனர் பதவியினை தன் மாமாவுக்கு அளித்துவிட்டு இத்தாலிக்கு திருப்பயணம் மேற்கொண்டார். அச்சமையம் இத்தாலி கறுப்புச் சாவினால் பாதிக்கப்பட்டிருந்தது. அங்கே பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இவர் பணிபுரிந்தார். பலரை அச்சமயத்தில் சிலுவை அடையாளம் வரைந்து குணமாக்கினார் என்பர். இத்தாலியினை சுற்றியுள்ள பல ஊர்களில் இவர் சேவை செய்தார்.

பியாசென்சா என்னும் ஊரில் பணியாற்றியபோது இவருக்கு அந்த நோய் பிடித்தது. இதனால் இவர் ஊருக்கு வெளியே காட்டில் வனவாசியாக வாழ்ந்தார். ஒரு புதுமையால் இவரின் வசிப்பிடத்தை அறிந்த காத்ஹார்ட் என்பவர் இவருக்கு உதவினார். நலமடைந்தப்பின்னர், தன் சொந்த ஊர் திரும்பினார். அங்கே தாம் யார் என வெளிப்படுத்தாததால் அவரை ஒற்றர் என தவறாகக் கருதிய அவரின் மாமா இவரை சிறையிலடைத்தார். அச்சிறையிலேயே ஐந்தாண்டுகளுக்குப்பின்னர் இவர் இறந்தார். இவரின் மார்பில் இருந்த மச்சமும், இவரிடம் இருந்த ஒரு ஆவணமும் இவரை நகர மக்களுக்கு அடையாளம் காட்டியது. இவரின் அடக்கச்சடங்கு பொதுநிகழ்வாக நடத்தப்பட்டது. இவரின் இறப்புக்குப்பின்பு பல புதுமைகள் இவரின் பெயரால் நிகழ்ந்தன என்பர்.

1414இல் காண்ஸ்தான்சு பொதுச்சங்கம் கூடியபோது கொள்ளைநோய் அந்த நகரினை தாக்கியது. அதனால் அச்சங்கத்தினர் மக்கள் அனைவரும் இவரை நோக்கி மன்றாடப்பணித்தனர். இதனால் விரைவாக நோய் நீங்கியது என்பர். 1485இல் இவரின் மீப்பொருட்கள் வெனிசு நகருக்கு கொணரப்பட்டது. அங்கேயே அவை இன்றளவும் உள்ளது.

இவர் பொதுவாக பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையின் உறுப்பினர் எனக்கருதப்பட்டாலும், அதனை நிருவ எவ்வகைச்சான்றும் இல்லை. உரோமை புனிதர்கள் பட்டியலில் இவரின் பெயர் திருத்தந்தை பதினான்காம் கிரகோரியால் சேர்க்கப்பட்டது. திருத்தந்தை எட்டாம் அர்பன் 16 ஆகஸ்டுக்கான திருப்புகழ்மாலையில் இவருக்குறியப்பகுதிக்கு அனுமதியளித்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Patron Saints Index: Saint Roch". Saints.sqpn.com. Archived from the original on 2013-11-05. பார்க்கப்பட்ட நாள் 2012-02-22.
  2. The date was offered by Francesco Diedo, Vita Sancti Rochi 1478.
  3. "St.Roch". Strochs-garngad.org.uk. பார்க்கப்பட்ட நாள் 2012-02-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனித_ஆரோக்கியநாதர்&oldid=4142966" இலிருந்து மீள்விக்கப்பட்டது