புணர்ச்சிப் பரவசநிலையின்மை
Appearance
புணர்ச்சிப் பரவசநிலையின்மை | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | உளநோய் மருத்துவம், counselling, மருத்துவச் சிகிச்சை உளவியல், மகளிர் நலவியல் |
ஐ.சி.டி.-10 | F52.3 |
ஐ.சி.டி.-9 | 302.73, 302.74 |
நோய்களின் தரவுத்தளம் | 23879 |
ஈமெடிசின் | article/295376 article/295379 |
புணர்ச்சிப் பரவச நிலையின்மை (Anorgasmia) என்பது போதுமான தூண்டல் தரப்பட்டும் புணர்ச்சியின் போது பரவசநிலையை எய்த இயலாமை ஆகும். இது மனநல நோய்களுள் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டாலும் பெரும்பாலும் இது மருத்துவ காரணங்களாலேயே (medical causes) உண்டாகிறது.[1][2][3]
முதல் நிலை பரவசமின்மை
[தொகு]வாழ்நாளில் ஒரு முறை கூட உச்ச கட்டமாகிய பரவச நிலையை எய்தாதவர்கள். பெண்களில் அதிகம் காணப்படும் இது ஆண்களில் அதுவும் இளம் ஆண்களில் மிக அரிதான ஒன்று.
இரண்டாம் நிலை பரவசமின்மை
[தொகு]இவர்கள் முன்னம் பரவசநிலை அனுபவித்தவர்கள். சில காரணங்களால் தற்போது அனுபவிக்க இயலாதவர்கள்.
காரணங்கள்
[தொகு]- மதுப்பழக்கம்
- மன அழுத்தம் (depression)
- இடுப்பெலும்பு பாதிக்கப்பட்ட நிலை (Pelvic surgery)
- மாதவிடாய் நிறுத்தம் - மாதவிடாய் முடிந்த நிலை (menopause)
- சுக்கிலத்தை அகற்றும் அறுவைச் சிகிச்சை (Prostate Removal) (ஆண்குறிக்குச் செல்லும் நரம்புகளும் அகற்றப்படுவதால்)
- சர்க்கரை நோயால் விளைந்த நரம்பு பாதிப்பு (Diabetic Neuropathy)
- முள்ளந்தண்டுவட பாதிப்பு (Spinal cord lesions)
- உறுப்பழிவு (Genital mutilation)
சூழ்நிலை பரவசமின்மை
[தொகு]இவர்கள் சில குறிப்பிட்ட சூழல்களில் (situational) மட்டும் பரவசமெய்த இயலாதவர்கள். எடுத்துக்காட்டாக சில ஆண்கள் (quad honc) மனைவியைத் தவிர பிற பெண்களிடம் பரவசமெய்துவார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nolen-Hoeksema, Susan (2014). Abnormal Psychology Sixth Edition. New York, NY: McGraw-Hill Education. p. 368. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-803538-8.
- ↑ "Sexual Effects of Parkinson's | APDA". American Parkinson Disease Association (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 28 November 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-12-31.
- ↑ For Women Only, Revised Edition: A Revolutionary Guide to Reclaiming Your Sex Life by Berman, J. Bumiller, E. and Berman L. (2005), Owl Books, NY. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8050-7883-1