புகைக் கறுப்பு நெடும்பாறைத் தகைவிலான்
புகைக் கறுப்பு நெடும்பாறைத் தகைவிலான் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | பேசரிபார்மசு |
குடும்பம்: | தகைவிலான் |
பேரினம்: | Ptyonoprogne |
இனம்: | P. concolor |
இருசொற் பெயரீடு | |
Ptyonoprogne concolor (Sykes, 1832) | |
![]() | |
Approximate range
| |
வேறு பெயர்கள் | |
Hirundo concolor |
புகைக் கறுப்பு நெடும்பாறைத் தகைவிலான் (Dusky Crag-Martin, Hirundo concolor) 13 செ.மீ. புகைப் பழுப்பான இதன் வால் பிற தகைவிலான்களைப் போல நீண்டிராததாக சதுரமாக இருக்கும். மேல் உடம்பை விடமார்பும் வயிறும் பழுப்புக் குறைந்து மெல்லிதான கருப்புக் கோடுகளுடன் காணப்படும்.
காணப்படும் பகுதிகள், உணவு[தொகு]
மலைகளில் உயர்ந்து நிற்கும் செங்குத்தான பாறைகள், கோட்டைகள், பழங்காலக் கட்டிடங்கள், அணைக்கட்டுச் சுவர்கள் ஆகியவற்றில் இணையாகவோ சிறு குழுவாகவோ அலைந்து பறந்து, பறக்கும் வண்டுகளையும் சிறகுடைய பு+ச்சிகளையும் பிடித்துத் தின்னும். பறக்கும் போதும் சுவர்கள் மீது அமர்ந்து ஓய்வு கொள்ளும் போதும் சிட், சிட்,. என மென்குரலில் கத்தும்.[2]
இனப்பெருக்கம்[தொகு]

கூடு கட்டச் சேற்று மண் கிடைக்கும் பருவத்தில் சேற்றைக் கொண்டு குகைகள், தொங்கும் பாறை இடுக்குகள், பால வளைவுகள் ஆகியவற்றில் கூடமைத்து 2 முதல் 4 முட்டைகள் இடும். இமயமலைச் சாரல்களைச் சார்ந்து இனப்பெருக்கம் செய்யும் பாறைத் தகைவிலான் குளிர்காலத்தில் நீலகிரி, கொடைக்கானல் மலைப்பகுதிகளிளுக்கு வலசை வரக்காணலாம்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Species factsheet Hirundo concolor". பன்னாட்டு பறவை வாழ்க்கை. http://www.birdlife.org/datazone/species/index.html?action=SpcHTMDetails.asp&sid=7115&m=1. Retrieved 4 April 2010
- ↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:103