பீஷ்மர் கோயில், குருசேத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருவறையில் உள்ள சிலைகள்
பீஷ்ம குண்ட் குளம்

பீஷ்மர் கோயில் என்பது இந்தியாவின், அரியானாவின் குருச்சேத்திரத்தில் நரகாதரி என்ற இடத்தில் பீஷ்மருக்கு அமைக்கபட்டுள்ள ஒரு கோயில் ஆகும்.

கதை[தொகு]

போரில் யாராலும் வெல்ல முடியாதவர் பீஷ்மர். குருச்சேத்திரப் போரில் கௌரவர்களின் வெற்றிக்காக அவர்கள் பக்கம் இருந்து பாண்டவர்களை எதிர்த்து பீஷ்மர் போர் புரிந்தார். அவரை எதிர்கொள்ள முடியாமல் அருச்சுனன் திணறினான். கிருட்டிணனின் ஆலோசனையின் பேரில் சிகண்டியை அர்சுணனின் முன் நிறுத்தி அவரின் பின்னால் இருந்து அர்சுணன் பீஷ்மருடன் போர் புரிந்தான். காரணம் சிகண்டிக்கு எதிராக பீஷ்மர் போரிடமாட்டார் என்பதால் ஆகும். அவ்வாறே அர்ஜுணன் போர் புரிந்து பீஷ்மர் மீது அம்மு மழை பொழிந்து அவரை அம்புப் படுக்கையில் வீழ்தினான். விரும்பும்போது மரணத்தை தழுவும் வரம் பெற்றவரான பீஷ்மர் அம்பு படுக்கையில் இருந்தவாறே தருமனுக்கு விஷ்ணு சகசரநாமத்தை போதித்தார். குருச்சேத்திரப் போர் முடிந்த பிறகு வந்த முழுநிலவு நாளில் பீஷ்மர் உயிர் துறந்தார்.

கோயில்[தொகு]

பீஷ்மர் அம்பு படுக்கையில் இருந்த இடம் குருச்சேதிரத்தில் உள்ள நரகதாரி என்ற இடம் என்று கருதப்படுகிறது. அங்கு பீஷ்மருக்கு கோயில் கட்டபட்டுள்ளது. அழகிய அலங்கார வளைவைக் கடந்து உள்ளை சென்றால் கோயிலில் பீஷ்மருக்கான கருவறை உள்ளது. கருவறை வாயிலுக்கு மேலே பீஷ்மரின் வரலாறு குறித்த ஏராளமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. கருவறையில் பீஷ்மர் முள் படுக்கையில் படுத்த நிலையில் காட்சியளிக்கிறார். அவர் மீது ஏராளமான அம்புகள் தைத்த நிலையில் உள்ளன. பிஷ்ருக்கு பின்னால் கிருட்டிணன், பஞ்ச பாண்டவர், கங்கை தாய் ஆகியோரின் சிலைகள் உள்ளன. சிலைகள் அனைத்தும் வட இந்திய பாணியில் சலவைக் கல்லால் அமைக்கபட்டுள்ளன. கருவறைக்கு முன் பக்தர்கள் அமர்ந்து விஷ்ணு சகசரநாமத்தை பாராயணம் செய்கின்றனர்.[1]

கோயிலுக்கு பின்னால் பீஷ்ம குண்ட் அல்லது கங்கா குளம் என்ற படிகட்டுகளுடன் கூடிய குளம் உள்ளது. பீஷ்மர் முள் படுக்கையில் இருந்தபோது அவருக்கு தாகம் எடுத்து தண்ணீர் கேட்டபோது, அர்ஜுணன் கங்கையை வேண்டி தரையில் அம்பை செலுத்தியபோது அங்கிருந்து நீர் பீய்ச்சி அடித்து பீஷ்மரின் தாகத்தை தணித்தது எனப்படுகிறது. அந்த இடமே இந்த பீஷ்ம குண்ட் எனப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பிதாமகர் பீஷ்மருக்கு ஒரு கோயில்!". Hindu Tamil Thisai. 2023-06-01. பார்க்கப்பட்ட நாள் 2023-06-25.
  2. Aggarwal, Chandni AggarwalChandni. "Bhishma Narkatari Temple". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2023-06-25.