பி. என். மேனன் (இராஜதந்திரி)
பரப்பில் நாராயண மேனன் (Parappil-Narayana Menon) (1920- 1975 சூன் 22) [1] பி. என். மேனன் என்றும் அழைக்கப்படும் இவர், இந்திய வெளியுறவுத் துறையில் பணி புரிந்த இராஜதந்திரி ஆவார். தனது மாமனாரைப் போலவே, இவரும் திபெத்தில் இந்தியாவின் ஆலோசனைத் தளபதியாகத் தனது பதவியைப் பெறுவதற்காக 1956 ஆம் ஆண்டில் சென்றும் பலமான நாதுலா கணவாய் வழியாக ஒரு பயணத்தை மேற்கொண்டார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இவர், இந்தியாவின் முதல் வெளியுறவு செயலாளர் கே. பி. எஸ். மேனனின் மகள் மாலினியை மணந்தார்.[2] இவரது மகன் சிவசங்கர் மேனன், 2011 ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார்.
அரசுப் பணி
[தொகு]பி. என். மேனன் முதன்முதலில் இந்திய வெளியுறவு சேவையில் 1947 இல் சேர்ந்தார்.[3] ஒரு கட்டத்தில், லாசாவில் இந்தியத் தூதராக பணியாற்றினார். பின்னர் 1959 திபெத்திய எழுச்சியின் போது இளம் தலாய் லாமாவின் இடைத்தரகராக பணியாற்றினார்.[4][5][6] யூகோசுலாவியாவிற்கான தூதராக பெல்கிரேடில் பணியாற்றும் போது இறந்தார்.[7]
வகித்த பதவிகள்
[தொகு]- போர் சேவை அதிகாரி, 1947
- இந்திய தூதரகம், லாசா, அக்டோபர் 1954-நவம்பர் 1956
- முதல் செயலாளர், இந்திய தூதரகம், ரோம், 1957 ஏப்ரல்-1958 மே
- இந்திய தூதரகம், திமிஷ்கு,1958 சூன்- 1959 பிப்ரவரி
- இயக்குநர் (வெளியுறவுத் துறை), 1959-62
- சான் பிரான்சிஸ்கோ, தூதரகம், 1962-65
- கம்போடியாவுக்கான தூதர், 1965-68
- இணை செயலாளர், கூடுதல் செயலாளர், செயலாளர், வெளியுறவுத் துறை. 1968-72
- யூகோஸ்லாவியா மற்றும் கிரீஸ் தூதர் -1975
குறிப்புகள்
[தொகு]- ↑ Almanac of Current World Leaders Biography & News: ii. September 1975.
- ↑ K.P.S. Menon. Many Worlds Revisited.
- ↑ Selected Works of Jawaharlal Nehru, Series II Volume 33, p. 479, footnote 16
- ↑ Roger E. McCarthy. Tears of the Lotus.
- ↑ Tséring Shakya (1999). The dragon in the land of snows: a history of modern Tibet since 1947.
- ↑ John Kenneth Knaus. Orphans of the Cold War: America and the Tibetan struggle for survival.
- ↑ K.P.S. Menon, Sr. Memories and Musings.