கே. பி. எஸ். மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமார பத்ம மூத்த சிவசங்கர மேனன்
வெளியுறவுச் செயலர்
பதவியில்
1948–1952
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்
முன்னையவர்சர் ஹியூக் வெயிட்மேன்
பின்னவர்ஆர். கே. நேரு
முன்னையவர்சர் ஓலப் கரே
முன்னையவர்தாமசு ஜாசகம்ப் கட்டன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
குமார பத்ம மூத்த சிவசங்கர மேனன்

(1898-10-18)18 அக்டோபர் 1898
திருவிதாங்கூர், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (now Kerala, India )
இறப்பு22 நவம்பர் 1982(1982-11-22) (அகவை 84)
ஒற்றப்பாலம், கேரளம், இந்தியா
துணைவர்சரசுவதி அம்மா
வேலைஇராஜதந்திரி

குமார பத்ம மூத்த சிவசங்கர மேனன் (1898 அக்டோபர் 18   - 1982 நவம்பர் 22) பொதுவாக கே. பி. எஸ். மேனன் என்று அழைக்கப்படும் இவர் ஓர் இராஜதந்திரியும், நாட்காட்டியாளரும், இந்திய ஆட்சிப்பணியில் அலுவலருமாவார். இவர் சுதந்திர இந்தியாவின் முதல் வெளியுறவுச் செயலாளராக நியமிக்கப்பட்டு, 1948 முதல் 1952 வரை பணியாற்றினார்.

இவர் பரத்பூர் மாநிலத்தின் திவானாகவும், 1952 முதல் 1961 வரை சோவியத் ஒன்றியத்திற்கான இந்திய தூதராகவும், இறுதியாக சீன மக்கள் குடியரசின் தூதராகவும் இருந்தார். 1948 ஆம் ஆண்டில், கொரியப் போரின் முந்தைய நிகழ்வுகளுக்கு முன்னர், ஐக்கிய நாடுகள் சபை இவரை கொரியா தொடர்பான ஐ.நா ஆணையத்தின் தலைவராக நியமித்தது.[1]

இரண்டாம் உலகப் போரின்போது இமயமலை, காரகோரம், பாமிர்கள் முழுவதும் தில்லியில் இருந்து சோங்கிங்கிற்கு சென்ற மேனனின் நிலப்பரப்பு பயணம் இவரது தில்லி-சோங்கிங்: எ டிராவல் டைரி (1947) என்ற புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.[2] இவர் ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்தில் இந்தியா சார்பில் கையெழுத்திட்டவர். இவர் பேரரசின் மத்திய ஆசியச் சங்கத்தின் உறுப்பினராக இருந்தார்.[3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கே. பி. எஸ். மேனன் 1898 இல் பிரித்தானியாவின் இந்தியாவின் திருவிதாங்கூரில் (இன்றைய கேரளா) ஒரு புகழ்பெற்ற பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை குமார மேனன் ஒற்றப்பாலத்தைச் சேர்ந்த வழக்கறிஞராக இருந்தார். இவரது தாயார் ஜானகி அம்மா திருவிதாங்கூரில் திருவனந்தபுரம் அருகே உள்ள வெள்ளயணியைச் சேர்ந்தவர். கண்டமத்தைச் சேர்ந்த கேசவ பிள்ளையின் மருமகளும், நெய்யாற்றிங்கரை என். கே. பத்மநாப பிள்ளையின் உறவினரும் ஆவார். இவர் சென்னைக் கிறித்துவக் கல்லூரியிலும் பின்னர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் கிறித்து தேவாலயப் பள்ளியிலும் பயின்றார்.[4] அங்கு இவர் வருங்கால பிரதமர் அந்தோணி ஈடனின் சமகாலத்தவராக இருந்தார். அங்கு, இருவரும் ஆசிய சங்கத்தின் இணை அதிகாரிகளாக பணியாற்றினர். ஆக்சுபோர்டு மஜ்லிசு ஆசியச் சங்கத்தின் தலைவராக பணியாற்றினார்.[5]

பொதுச் சேவை வாழ்க்கை[தொகு]

1922 ஆம் ஆண்டில், மேனன் ஒருங்கிணைந்த ஆட்சிப் பணித் தேர்வில் முதல் இடத்தைப் பெற்றார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரின் துணை ஆட்சியராகவும், பின்னர் திருச்சியில் மாவட்ட நீதிபதியாகவும், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் மற்றும் இலங்கையில் இந்திய அரசின் முகவராகவும், பின்னர் ஐதராபாத் மாநிலத்தில் இந்தியாவின் அரசப் பிரதிநிதியாகவும் பணியாற்றினார். 1934 ஆம் ஆண்டில், சான்சிபார், கென்யா, உகாண்டாவிலுள்ள இந்தியர்களின் நிலையை விசாரிக்க அவர் அரசப் பிரதிநிதியாக அனுப்பப்பட்டார். பரத்பூர் மாநிலத்தின் திவான் என்ற முறையில், இவர் 1943 ஆம் ஆண்டின் புத்தாண்டு கௌரவங்களில் இந்தியப் பேரரசின் ஒழுங்கின் தோழராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு, 1948 முதல் 1952 வரை இந்தியாவின் முதல் வெளியுறவுச் செயலாளராகவும், பின்னர் சோவியத் ஒன்றியம், அங்கேரி மற்றும் போலந்திற்கான இந்திய தூதராகவும், 1952 முதல் 1961 வரை சீனாவின் தூதராகவும் இருந்தார்.[6][7]

இவர் சி.சங்கரன் நாயரின் மகள் சரஸ்வதி அம்மாவை மணந்தார்.[8] இவரதுப் பெயரையேக் கொண்ட இவரது மகன், சீனாவின் தூதராக பணியாற்றினார். இவரது தாய்வழி பேரன் சிவசங்கர் மேனன் வெளியுறவு செயலாளராகவும் பின்னர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இருந்தார்.[6][9]

மேனனுக்கு 1958 ஆம் ஆண்டில் பத்ம பூசண்[10] மற்றும் லெனின் அமைதி பரிசு வழங்கப்பட்டது.[4]

குறிப்புகள்[தொகு]

  1. http://www.unmultimedia.org/s/photo/detail/187/0187646.html
  2. Menon, K. P. S. (1947). Delhi Chungking. https://books.google.co.uk/books/about/Delhi_Chungking.html?id=x-cbnQsGjRgC. 
  3. Menon, K. P. S.. Many Worlds. https://books.google.co.uk/books?id=jyZ-lwEACAAJ. 
  4. 4.0 4.1 "K. P. S. Menon". Mahatma Gandhi University. Archived from the original on 2011-10-24.
  5. Menon in Many World Revisited, Bhavan, Bombay,1981
  6. 6.0 6.1 "Menon is next NSA". The Hindu. 21 January 2010. http://www.thehindu.com/news/national/article84408.ece. பார்த்த நாள்: 2011-11-29. 
  7. See Introduction in Patel Memorial Lectures, Publications Division Government of India March 1963
  8. "Succession of diplomats from Palat family". The Hindu. 1 September 2006 இம் மூலத்தில் இருந்து 2008-10-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081025092018/http://www.hindu.com/2006/09/01/stories/2006090114250400.htm. பார்த்த நாள்: 2011-11-30. 
  9. "S S Menon, who served in Israel, China and Pak, is new Foreign Secy". Indian Express. 1 September 2006. http://www.indianexpress.com/news/s-s-menon-who-served-in-israel-china-and-pak-is-new-foreign-secy/11789/0. பார்த்த நாள்: 2011-11-30. 
  10. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பி._எஸ்._மேனன்&oldid=3845115" இலிருந்து மீள்விக்கப்பட்டது