பிர்தௌசி காத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிர்தௌசி காத்ரி
பிறப்புமார்ச்சு 31, 1951 (1951-03-31) (அகவை 73)
தேசியம்வங்கதேசத்தவர்
துறைநோயெதிர்ப்பியல்
தடுப்பு மருந்து
நுண்ணுயிரியல்
பணியிடங்கள்வயிற்றுப்போக்கு நோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச மையம் , வங்காளதேசம்
கல்வி கற்ற இடங்கள்தாக்கா பல்கலைக்கழகம்
லிவர்பூல் பல்கலைக்கழகம்
விருதுகள்full list

பிர்தௌசி காத்ரி (Firdausi Qadri) (பிறப்பு மார்ச் 31, 1951) ஒரு வங்காளதேச அறிவியலாளரும், நோயெதிர்ப்பு, தொற்று நோய் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்றவருமாவார். இவர் வாந்திபேதி நோய்க்கான தடுப்பூசிகளின் வளர்ச்சியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.[1] மேலும், ஈ.கோலி, குடற்காய்ச்சல், எலிக்கோபேக்டர் பைலோரி, ரோட்டா வைரசு போன்ற பிற தொற்று நோய்களிலும் நிபுணத்துவம் பெற்றவர். தற்போது, இவர் வங்காளதேசத்தின் வயிற்றுப்போக்கு நோய் மற்றும் ஆராய்ச்சிக்கான சர்வதேச மையத்தின் தடுப்பூசி அறிவியல் மையத்தின் இயக்குநராக பணிபுரிகிறார். இவர் அறிவியல் மற்றும் சுகாதார முயற்சிகளை வளர்க்கும் நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.[2] நுரையீரல் நோய்த்தொற்றுகள், விப்ரியோ வயிற்றுப்போக்கு, என்டோரோடாக்சிகெனிக் எஸ்கெரிச்சியா கோலி - கடுமையான வயிற்றுப்போக்குக்கான முக்கிய காரணங்கள் உள்ளிட்ட தடுப்பூசிகளில் இவரது அறிவியல் சாதனைகள் உள்ளன. இவர் வங்காளதேசத்திலுள்ள எலிக்கோபேக்டர் பைலோரி நோய்த்தொற்று உள்ளவர்களுக்கும், குடற்காய்ச்சல் உள்ள நோயாளிகளுக்கும் தடுப்பூசி எடுத்துக் கொண்ட நோயாளிகளுக்கும் உள்ள நோயெதிர்ப்புப் பற்றி படிப்பதில் கவனம் செலுத்தியுள்ளார்.[1]

கல்வியும், தொழில்முறை தகுதியும்[தொகு]

முனைவர் காத்ரி, முறையே 1975 , 1977இல் டாக்கா பல்கலைக்கழகத்திலிருந்து உயிர் வேதியியலிலும், மூலக்கூறு உயிரியலிலும் இளம் அறிவியல் பட்டத்தையும், முதுநிலை அறிவியல் பட்டத்தையும் பெற்றார். 1980 இல், இவர் லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல்/நோயெதிர்ப்பு துறையில் முனைவர் பட்டம் பெற்றார். வங்காளதேசத்தின் வயிற்றுப்போக்கு நோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச மையத்திலிலிருந்து நோய் எதிர்ப்பியலில் தனது முதுகலை பட்டப்படிப்பை முடித்த பிறகு, இவர் 1988இல் அதே நிறுவனத்தில் இணை விஞ்ஞானியாக சேர்ந்தார். தற்போது, இவர் மூத்த விஞ்ஞானியாகவும் மையத்திலுள்ள தடுப்பூசி அறிவியல் மையத்தின் இயக்குநராகவும் உள்ளார்.

ஆராய்ச்சிப் பங்களிப்புகள்[தொகு]

காத்ரி, நுரையீரல் நோய்கள், குறிப்பாக நோயெதிர்ப்பு, மரபியல், புரோட்டியோமிக் தொழில்நுட்பமும் நோயறிதலும், தடுப்பூசி மேம்பாடு ஆகிய துறைகளில் தனது ஆராய்ச்சியில் கவனம் செலுத்தியுள்ளார். வங்காளதேசத்தில் ஒரு புதிய மலிவான வாய்வழி காலரா தடுப்பூசியை அறிமுகப்படுத்த இவர் முயன்றார்.[3] இது ஏழை மக்களுக்கு விலை உயர்ந்தாக இருந்த டியூக்கோரல் என்ற மருந்தைவிட பொது சுகாதார கருவியாக இது செலவு இல்லாதது.[4] டாக்கா மக்களிடையே சாங்கோல் தடுப்பூசியின் செயல்திறனை இவர் நிரூபித்தார். [5] பின்னர் ரோகிங்கியா அகதிகள் உட்பட[6] இதனை வங்காளதேசத்தில் ஒரு பொது சுகாதார தலையீடாக ஏற்றுக்கொள்ள வேலை செய்தார் [7]

கௌரவங்களும், விருதுகளும்[தொகு]

2012ஆம் ஆண்டில், காத்ரிக்கு தொற்று நுரையீரல் நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக வழங்கப்படும் பான்டேஷன் கிறிஸ்டோப் மற்றும் ரோடோல்ப் மெரியூக்ஸின் வருடாந்திர அறிவியல் 'கிராண்ட் பரிசு' வழங்கப்பட்டது. இது "கிரிஸ்டோப் மெரியக்ஸ் பரிசு" என்று அழைக்கப்பட்டது.[8] [9] இந்த விருது 2014இல் அறிவியல் மற்றும் சுகாதார முன்முயற்சிகளை வளர்ப்பதற்கான நிறுவனத்தை உருவாக்கியது.[10] 2014ஆம் ஆண்டில், இவர் ஒரு உயர்மட்ட குழுவின் உறுப்பினராகப் நியமிக்கப்பட்டார். இந்தக் குழு முன்மொழியப்பட்ட தொழில்நுட்ப வங்கி, அறிவியல், தொழில்நுட்பம், குறைந்தபட்சம் வளர்ந்த நாடுகளில் புத்தாக்கங்களை ஆதரிக்கும் அர்ப்பணிக்கப்பட்ட அமைப்பாகும். மேலும், இது செயல்பாட்டு அம்சங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அவைத் தலைமைக்கு ஆலோசனையும் வழங்கும். இவர் ஆசிய விஞ்ஞானி இதழ் வெளியிட்டுள்ள.[11] 'முதல் 100 ஆசிய விஞ்ஞானிகள்' பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

ஆகத்து 2021 இல், பிர்தௌசி காத்ரிக்கு ரமோன் மக்சேசே விருது வழங்கப்பட்டது.[12]

உறுப்பினர்[தொகு]

காத்ரி, வங்காளதேச நுண்ணுயிரியலாளர்கள் சங்கத்தின் நிறுவனரும் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரும் ஆவார்.[13] இவர் அமெரிக்காவின் நுண்ணுயிரியல் சங்கத்தில் வங்காளதேசத்தின் சர்வதேச தூதராக உள்ளார்.[14] மேலும், 2008ஆம் ஆண்டு முதல் வங்காளதேச அறிவியல் கழகத்தின் உறுப்பினராகவும் இருக்கிறார்.[15]

விருதுகள்[தொகு]

 • 2005இல், வங்காளதேச அறிவியல் கழகத்தின் தங்கப் பதக்க விருது.[16]
 • 2012இல் கிறிஸ்டோஃப் மெரியக்ஸ் பரிசு.[9]
 • 2013இல், அனன்னியா சிறந்த பத்து நபர்கள் விருதுகள்
 • 2013இல், வளரும் நாடுகளில் அறிவியல் முன்னேற்றத்துக்காக உலக அறிவியல் கழகத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றான சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ் விருது.[17]
 • 2020இல், லோரியல்-யுனெஸ்கோவின் அறிவியலில் பெண்களுக்கான விருதுகள்
 • 2021இல், ரமோன் மக்சேசே விருது

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Dr Firdausi Qadri". World Health Organization.
 2. "Dr. Firdausi Qadri". Institute for Developing Science and Health Initiatives. பார்க்கப்பட்ட நாள் 2019-07-16.
 3. Qadri, Firdausi; Clemens, John D.; Sarker, Abdur Razzaque; Islam, Md Taufiqul; Ali, Mohammad; Islam, Muhammad Shariful; Khan, Jahangir A. M.; Dimitrov, Dobromir T. et al. (2018-10-09). "The impact and cost-effectiveness of controlling cholera through the use of oral cholera vaccines in urban Bangladesh: A disease modeling and economic analysis" (in en). PLOS Neglected Tropical Diseases 12 (10): e0006652. doi:10.1371/journal.pntd.0006652. பன்னாட்டுத் தர தொடர் எண்:1935-2735. பப்மெட்:30300420. 
 4. Hutubessy, Raymond; Tebbens, Radboud J. Duintjer; Reyburn, Rita; Khatib, Ahmed M.; Chaignat, Claire-Lise; Ali, Said M.; Weiss, Mitchell G.; Schaetti, Christian (2012-10-04). "Costs of Illness Due to Cholera, Costs of Immunization and Cost-Effectiveness of an Oral Cholera Mass Vaccination Campaign in Zanzibar" (in en). PLOS Neglected Tropical Diseases 6 (10): e1844. doi:10.1371/journal.pntd.0001844. பன்னாட்டுத் தர தொடர் எண்:1935-2735. பப்மெட்:23056660. 
 5. Qadri, Firdausi; Wierzba, Thomas F.; Ali, Mohammad; Chowdhury, Fahima; Khan, Ashraful I.; Saha, Amit; Khan, Iqbal A.; Asaduzzaman, Muhammad et al. (2016-05-04). "Efficacy of a Single-Dose, Inactivated Oral Cholera Vaccine in Bangladesh" (in EN). New England Journal of Medicine 374 (18): 1723–1732. doi:10.1056/nejmoa1510330. பப்மெட்:27144848. 
 6. Clemens, John D.; Singh, Poonam Khetrapal; Nair, G. Balakrish; Islam, Md Taufiqul; Khan, Ashraful Islam; Flora, Meerjady Sabrina; Azad, Abul Kalam; Qadri, Firdausi (2018-05-12). "Emergency deployment of oral cholera vaccine for the Rohingya in Bangladesh" (in English). The Lancet 391 (10133): 1877–1879. doi:10.1016/S0140-6736(18)30993-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0140-6736. பப்மெட்:29781432. https://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(18)30993-0/abstract. 
 7. Khan, Iqbal Ansary; Khan, Ashraful Islam; Rahman, Anisur; Siddique, Shah Alam; Islam, Md Taufiqul; Bhuiyan, Md Amirul Islam; Chowdhury, Atique Iqbal; Saha, Nirod Chandra et al. (2019-01-01). "Organization and implementation of an oral cholera vaccination campaign in an endemic urban setting in Dhaka, Bangladesh". Global Health Action 12 (1): 1574544. doi:10.1080/16549716.2019.1574544. பன்னாட்டுத் தர தொடர் எண்:1654-9716. பப்மெட்:30764750. 
 8. "Institut de France - Accueil" (PDF).
 9. 9.0 9.1 "Institut de France's Christophe Mérieux Prize". Mérieux Foundation (in பிரெஞ்சு). 2013-09-17. பார்க்கப்பட்ட நாள் 2019-07-16.
 10. "About Us". Institute for Developing Science and Health Initiatives. பார்க்கப்பட்ட நாள் 2019-07-16.
 11. "3 Bangladeshi researchers named in Asian Scientist 100 list". The Daily Star (in ஆங்கிலம்). 2021-04-28. பார்க்கப்பட்ட நாள் 2021-05-01.
 12. "Firdausi Qadri". 31 August 2021. பார்க்கப்பட்ட நாள் 31 August 2021.
 13. "Board of Advisory". Bangladesh Society of Microbiologists. பார்க்கப்பட்ட நாள் 2019-07-16.
 14. "Contact The ASM International Ambassador in Your Country!". American Society for Microbiology. Archived from the original on 2013-11-05.
 15. "Dr. Firdausi Qadri". Bangladesh Academy of Science. Archived from the original on 2015-06-10.
 16. "Academy Gold Medal Award". Bangladesh Academy of Sciences. Archived from the original on 2015-09-26. பார்க்கப்பட்ட நாள் 2019-07-16.
 17. "Bangladeshi immunologist wins the C.N.R. Rao Prize". The World Academy of Sciences. Archived from the original on 2013-10-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிர்தௌசி_காத்ரி&oldid=3563408" இலிருந்து மீள்விக்கப்பட்டது