உள்ளடக்கத்துக்குச் செல்

பிரேம்சந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முன்சி பிரேம்சந்த்
பிறப்புதன்பத் ராய் சிறீவஸ்தவா
(1880-07-31)சூலை 31, 1880
லாமி, உத்தரப் பிரதேசம், இந்தியா
இறப்புஅக்டோபர் 8, 1936(1936-10-08) (அகவை 56)
வாரணாசி, இந்தியா.
தொழில்எழுத்தாளர், புதின எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்கொடான், ரங்பூமி, கர்மபூமி, பிரேமாசிரமம்

தன்பத் ராய் ஸ்ரீ வத்சவா என்கிற முன்சி பிரேம்சந்த் (Premchand, சூலை 31, 1880 - அக்டோபர் 8, 1936) ஒரு குறிப்பிடத்தக்க இந்தி மற்றும் உருது மொழி எழுத்தாளார். முற்போக்கு எண்ணங்களைக் கொண்டவர். இவர் உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசி என்கிற காசிக்கு அருகிலுள்ள “லாம்கி” என்ற ஊரில் 31-07-1880 ஆம் நாளில் பிறந்தார். 1919 ஆம் ஆண்டில் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இருமுறை திருமணம் செய்து கொண்ட இவர் 1895 ஆம் ஆண்டில் முதல் திருமணத்தையும், 1905 ஆம் ஆண்டில் சிவ்ராணி தேவி எனும் இளம் விதவையை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். 1899 ஆம் ஆண்டு முதல் 1923 ஆம் ஆண்டு வரை உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப்பகுதி பள்ளிகளில் ஆசிரியர் பணிகளில் இருந்தார்.[1]

இலக்கியப் பங்களிப்பு

[தொகு]

1903 ஆம் ஆண்டில் காசியிலிருந்து வெளியான உருது மொழி இதழான “ஆவாஜ் கால்ஹ்” எனும் இதழில் இவருடைய முதல் நாவலான “அஸ்ரர் - இ - மாவிட்” தொடராக வெளிவந்தது. இவரது முதல் சிறுகதை “துனியாகா அன்மோல் ரத்தன்” 1907 ஆம் ஆண்டில் வெளியானது. “படேகர் கி பேட்டி” என்னும் கதை “பிரேம்சந்த்” எனும் புனைப்பெயருடன் வெளியானது. இவரது முதல் கதைத் தொகுதி “ஸோசி - வாடன்” 1908 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

1922 ஆம் ஆண்டில் “மரியாதா” என்னும் இதழின் செயல் ஆசிரியராகவும், 1926 ஆம் ஆண்டில் “மாதுரி” எனும் இதழின் ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டார். 1930 ஆம் ஆண்டில் “ஹன்ஸ்” எனும் இதழைத் தொடங்கி வெளியிட்டார். 1934 ஆம் ஆண்டில் “சேவாசதன்” எனும் நாவல் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. இதற்கான உரையாடல்களை இவரே எழுதித் தந்தார். அதன் பிறகு “மஸ்தூர்” எனும் திரைப்படத்திற்கும் உரையாடல் எழுதிக் கொடுத்தார்.

“சேவாசதன்”, “பிரேம் பக்சி”, “ரங்பூமி”, “காயகல்ப்”, “சப்த்சுமன்”, “வர்தான்”, “நிர்மலா”, “பிரதிக்சா”, “காபான்”, “கோடன்”, “கர்மபூமி” எனும் நாவல்களை எழுதியிருக்கிறார். இது தவிர முன்னூறுக்கும் அதிகமான கதைகளை எழுதியிருக்கிறார். இவரது “ரங்பூமி” நாவல் வெளியானதும் மற்றொரு வங்கமொழி நாவலாசிரியரான சரத் சந்திரர் இவரை “உபன்யாஸ் சாம்ராட்” என்று வாழ்த்தினார்.

மறைவு

[தொகு]

இவரது ஐம்பத்தாறு வயதில் காசி நகரில் 08-10-1936 ஆம் நாளில் மரணமடைந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. MUNSHI PREMCHAND : THE GREAT NOVELIST

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேம்சந்த்&oldid=3784507" இலிருந்து மீள்விக்கப்பட்டது