உள்ளடக்கத்துக்குச் செல்

சரத்சந்திர சட்டோபாத்யாயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சரத் சந்திரர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சரத்சந்திர சட்டோபாத்யாயா
Sarat Chandra Chattopadhyay
பிறப்புசரத்சந்திர சட்டோபாத்யாயா
(1876-09-15)15 செப்டம்பர் 1876
தேவானந்தபூர், ஊக்லி, மேற்கு வங்காளம்
இறப்பு16 சனவரி 1938(1938-01-16) (அகவை 61)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
புனைபெயர்அனிலா தேவி
தொழில்எழுத்தாளர்
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியர்
காலம்19ம் நூற்றாண்டு-20ம் நூற்றாண்டு
வகைபுதின இலக்கியம்
இலக்கிய இயக்கம்வங்காள மறுமலர்ச்சி
துணைவர்சாந்தி தேவி, (பர்மாவில் இறப்பு), ஹிரோன்மயி தேவி
பிள்ளைகள்ஒரு ஆண் (பர்மாவில் இறப்பு)

சரத்சந்திர சட்டோபாத்யாயா (Sarat Chandra Chattopadhyay [1], வங்காளம்: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়) அல்லது சரத்சந்திர சட்டர்ஜீ (Sarat Chandra Chatterjee, 15 செப்டம்பர் 1876 – 16 சனவரி 1938) இருபதாம் நூற்றாண்டின் வங்காள மொழி இலக்கியத்தில் ஒரு மாபெரும் அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். விளிம்புநிலை மக்களின் இலக்கியங்களை படைத்ததற்காக ரபீந்திரநாத் தாகூரால் பெரிதும் பாராட்டப் பெற்றார். சரத்சந்திரர் ஏழையாகப் பிறந்தார். இவர் எளிமையானவராகவும், விருந்தோம்பும் பண்புடையவராகவும், அடக்கமானவராகவும் இருந்தார். சரத்சந்திரர் மகாத்மா காந்தியை விமர்சித்துக் கொண்டிருந்த போதும் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து, ஹவுரா மாவட்டக் காங்கிரஸ் இயக்கத் தலைவராகவும் ஆனார். அவருடைய பதேர் தோபி(வழி வேண்டுவோர்) அக்கால புரட்சியாளர்களின் வேதப் புத்தகமாக கருதப்பட்டது. ஆங்கிலேய அரசால் இப்புத்தகம் தடை செய்யப்பட்டது.

தேவதாஸ்

[தொகு]

’தேவதாஸ்’ எனும் கதையைப் பதினேழு வயதில் எழுதினார். இக்கதை பல மொழிகளிலும் மீண்டும் திரைவடிவம் பெற்றுவந்தது.

இவற்றையும் பார்க்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. alternatively spelt as Sarat Chandra Chatterjee

உசாத்துணை

[தொகு]
  • Ganguly, Swagato. "Introduction." In Parineeta by Saratchandra Chattopadhyay. New Delhi: Penguin Books, 2005. (English translation)
  • Guha, Sreejata. "Introduction." In Devdas by Saratchandra Chattopadhyay. New Delhi: Penguin Books, 2002. (English translation)
  • Roy, Gopalchandra. Saratchandra, Ananda Publishers Pvt. Ltd., கொல்கத்தா
  • Sarat Rachanabali, Ananda Publishers Pvt. Ltd., கொல்கத்தா
  • Prithwindra Mukherjee. "Introduction" in Mahesh et autres nouvelles by Saratchandra Chatterji. Paris: Unesco/Gallimard, 1978. (French translation of Mahesh, Bindur chhele and Mejdidi by Prithwindra Mukherjee. Foreword by Jean Filliozat)
  • Dutt, A. K. and Dhussa, R. "Novelist Sarat Chandra's perception of his Bengali home region: a literary geographic study." Springer Link
  • Sil, Narasingha Prasad. "The life of Sharatchandra Chattopadhyay : drifter and dreamer" Fairleigh Dickinson University Press, 2012

வெளி இணைப்புக்கள்

[தொகு]