உள்ளடக்கத்துக்குச் செல்

பிரேசிலிய ரெயால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரேசிலிய ரெயால்
ரெயாவ் பிரேசிலீரோ (போர்த்துக்கேயம்)
100 ரெயாயிசு வங்கித்தாள்,
திசம்பர் 13, 2010இல் வெளியானது.[1][2]
ஐ.எசு.ஓ 4217
குறிBRL (எண்ணியல்: 986)
சிற்றலகு0.01
அலகு
பன்மைரெயாயிசு
குறியீடுR$
மதிப்பு
துணை அலகு
 1/100சென்டவோ
வங்கித்தாள்
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)R$2, R$5, R$10, R$20, R$50, R$100
 அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)R$1 (2006இலிருந்து நிறுத்தம்)
Coins
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும்
உலோக நாணயம்(கள்)
5, 10, 25, 50 சென்டவோசு, R$1
 அரிதாக பயன்படுத்தப்படப்படும்

உலோக நாணயம்(கள்)

1 சென்டவோ (2006இலிருந்து நிறுத்தம்)
மக்கள்தொகையியல்
பயனர்(கள்) பிரேசில்
வெளியீடு
நடுவண் வங்கிபிரேசிலிய நடுவண் வங்கி
 இணையதளம்www.bcb.gov.br
அச்சடிப்பவர்காசா டா மோடா டொ பிரேசில்
 இணையதளம்www.casadamoeda.gov.br
காசாலைகாசா டா மோடா டொ பிரேசில்
 இணையதளம்www.casadamoeda.gov.br
மதிப்பீடு
பணவீக்கம்5.84%, 2012
 ஆதாரம்பிரேசில் நடுவண் வங்கி
 முறைநுகர்வோர் விலைக் குறியீடு

ரெயால் (/rˈɑːl/; பிரேசிலிய போர்த்துக்கேயம்: ரெயாவ்; பன்மை ரெயாயிசு) பிரேசிலின் புழக்கத்திலுள்ள நாணயம் ஆகும். இதன் குறியீடு R$ மற்றும் ஐ.எசு.ஓ குறியீடு BRL ஆகும். ஒரு ரெயால் 100 சென்டவோசாக ("நூற்றிலொன்று") பகுக்கப்பட்டுள்ளது.

இப்போது புழக்கத்திலிருக்கும் ரெயால் 1994 இல் பழைய நாணயத்திற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. முப்பதாண்டுகளாக வளர்ந்து வந்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த செயல்படுத்தப்பட்ட நிதி மேலாண்மை சீர்திருத்தத்தின் அங்கமாக புதிய நாணயம் வெளியிடப்பட்டது. அமெரிக்க டாலருக்கு இணையான நாணயமாற்று வீதத்தில் (1:1) வெளியிடப்பட்ட இந்தப் புதிய நாணயம் 1999இல் 2:1 ஆகவும் 2002இல் கிட்டத்தட்ட 4:1 ஆகவும் மதிப்பிறங்கியது. பின்னர் பொருளியல் வளர்ச்சியால் 2006இல் மீளவும் 2:1 நிலையை எட்டியது. திசம்பர் 31, 2013இல் நாணய மாற்றுவீதம் ஒரு அமெரிக்க டாலருக்கு 2.36 பிரேசிலிய ரெயாலாக இருந்தது.

டாலரைப் போன்ற, இரட்டை நெடுங்கோடுகளை உடைய சிஃப்ரோ குறியீடு () மூலம் குறிக்கப்படுகிறது.[3] இருப்பினும் ஒருங்குறி இதனை எழுத்துரு வடிவத்தின் வேறுபாடாகவே கருதி தனி குறியீட்டை வழங்கவில்லை.[4]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Brazil new 50- and 100-real notes confirmed பரணிடப்பட்டது 2014-01-16 at the வந்தவழி இயந்திரம் BanknoteNews.com. Retrieved 2011-10-20.
  2. Rodrigues, Lorenna (February 3, 2010). "BC lança nova família de notas do real em tamanhos diferentes [Central Bank to launch new banknote series]" (in Portuguese). Folha de S. Paulo. http://www1.folha.uol.com.br/folha/dinheiro/ult91u688662.shtml. பார்த்த நாள்: 2010-02-03. 
  3. "Origem do Cifrão". Casa de Moeda do Brasil. Archived from the original on 2014-01-16. பார்க்கப்பட்ட நாள் 2014-06-24.
  4. "C0 Controls and Basic Latin Range: 0000–007F" (PDF). The Unicode Standard, Version 6.2. The Unicode Consortium. பார்க்கப்பட்ட நாள் 19 September 2013.Unicode 0024 DOLLAR SIGN= milréis, escudo, used for many peso currencies in Latin America and elsewhere, glyph may have one or two vertical bars
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேசிலிய_ரெயால்&oldid=3610272" இலிருந்து மீள்விக்கப்பட்டது