பிரடெரிக் நோர்த்
Appearance
(பிரெடெரிக் நோர்த் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிரடெரிக் நோர்த் Frederick North | |
---|---|
பிறப்பு | 7 பெப்பிரவரி 1766 |
இறப்பு | 14 அக்டோபர் 1827 (அகவை 61) இலண்டன் |
படித்த இடங்கள் |
|
பணி | அரசியல்வாதி |
கையெழுத்து | |
சர் பிரடெரிக் நோர்த் (Frederick North, 5th Earl of Guilford, பெப்ரவரி 7, 1766 – அக்டோபர் 14 1827) ஒரு பிரித்தானிய அரசியவாதி மற்றும் குடியேற்றவாத நிருவாகி. இவர் ஐக்கிய இராச்சியத்தின் முடிக்குட்பட்ட நாடாக இலங்கை மாறியதன் பின்னர் முதலாவது பிரித்தானிய தேசாதிபதி ஆவார். பிரித்தானிய அரசால் அக்டோபர் 12 1798 அன்று இவர் நியமிக்கப்பட்டார்; சூலை 19 1805 வரை பதவி வகித்தார்.
முக்கிய சீர்த்திருத்தங்கள்
[தொகு]இவரால் செய்யப்பட்ட முக்கிய சீர்த்திருத்தங்களாவன:
- நிலவரிகளை வசூலிக்க மாகாண அதிகாரிகளை நியமித்தல்.
- அமிர்தார்கள் நீக்கப்பட்டு முகாந்திரம்கள் நியமனம் பெற்றமை. (இவர்களுக்கு வேதனம் வழங்கப்பட்டது)
- புதிய இலாகாக்கள் அமைக்கப்பட்டன. (உதாரணம்: தபால், கல்வி, சுகாதாரம், நில அளவை போன் இலாக்காக்கள்)
- கறுவா உற்பத்திப் பகுதிகளுக்குப் பொறுப்பாக ஒரு பிரித்தானிய அதிகாரி நியமிக்கப்பட்டார்.
- கிரிமினல் நீதிமன்றம், உயர்நீதிமன்றம் போன்றன அமைக்கப்பட்டன.
- இலங்கையின் சட்டமரபுகளையும், ஒல்லாந்த நீதிமுறைகளையும் உள்ளடக்கிய இலங்கையின் சட்டத்தொகுதியொன்று உருவாக்கப்பட்டது.
- சுதேச பாடசாலைகள் நிறுவப்பட்டு, ஆசிரியர்களுக்கு வேதனம் வழங்கப்பட்டது.
- முத்துராஜவெல திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
- அம்மைப்பால் கட்டும் முறை ஆரம்பிக்கப்பட்டது.
- அரசாங்க வர்த்தமானி அறிமுகப்படுத்தப்பட்டது.
கட்டுக்கோப்பான நிர்வாகம்
[தொகு]இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சிக்குட்பட்டிருந்த பிரதேசங்களில் ஒரு கட்டுக்கோப்பான நிர்வாகத்தை ஏற்படுத்துவதில் இவரின் பணி அளப்பரியதாகக் கொள்ளப்படுகின்றது.
உசாத்துணை
[தொகு]- மெண்டிஸ், ஜீ. ஸி. நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், முதலாம் பாகம், கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி - 1969
- பீ. எம். புன்னியாமீன். வரலாறு ஆண்டு 11 சிந்தனை வட்டம் 1998