பிருந்தாவன தீபகேளி ஆட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிருந்தாவன தீபகேளி கோலாட்டம்
பிருந்தாவன தீபகேளி கோலாட்டாம்
பிருந்தாவன தீபகேளி கோலாட்டம்

பிருந்தாவன தீபகேளி ஆட்டம், மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம், பரமக்குடி சேலம், அய்யம்பேட்டை போன்ற ஊர்க்கோயில் திருவிழாக்களில், சௌராட்டிர சமூக ஆண்களால் நடத்தி காண்பிக்கப்படுகிறது.

தீபம் என்பதற்கு விளக்கு என்று பொருள். ‘கேளி’ என்பது கொண்டாட்டத்தை அதாவது கேளிக்கையைக் குறிக்கும். தீபத்தைச் சுற்றி மகிழ்ச்சியுடன் குதித்து ஆடி மகிழ்வது ”தீபகேளி” ஆகும்.

ஒரு தீபத்தை ஆட்ட வட்டத்திற்குள் நடுவில் வைத்து வழிபட்டு, பின் அதனைச் சுற்றி சுற்றி கோலாட்டம் ஆடுகின்றனர். இந்நிகழ்வில் தீபம் கண்ணனாகக் கொள்ளப்படுகிறது. ஆட்டக் கலைஞர்கள் தங்களை ராதையாகவும், கோபிகைப் பெண்களாக ஒப்பனை செய்து கொண்டு ஆடுகின்றனர்.

பிருந்தாவனத்தில் கிருஷ்ணர், கோபியர்களிடம் ராசகிரிடை செய்தமை ‘பிருந்தாவன தீபகேளி’ யாகும். பிருந்தாவனத்தில் கண்ணன், ராதையுடனும், கோபியர் பெண்களுடனும் சேர்ந்து ஆடுவதை இக்கோலாட்டம் பிரதிபலிக்கிறது. கண்ணனுடைய பிருந்தாவன ராசாக்கிரீடை, ஜலக்கிரீடை லீலைகளை விளக்கும் ஆட்டம் என்பதால் பிருந்தாவன தீபகேளி ஆட்டம் எனப்பட்டது. இப்புராண கால நிகழ்வே பிருந்தாவன தீபகேளி ஆட்டத்தின் அடிப்படையாகும்.

மேற்கோள்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]