உள்ளடக்கத்துக்குச் செல்

பிரியங்கா தத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரியங்கா தத்
பிரியங்கா தத்
பிறப்புபிரியங்கா தத் சலசானி[1]
19 திசம்பர் 1984 (1984-12-19) (அகவை 39)
விசயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிதிரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2004–தற்போது வரை
பெற்றோர்ச. அஸ்வினி தத் (தந்தை)
வாழ்க்கைத்
துணை
நாக் அஸ்வின்
உறவினர்கள்சொப்னா தத், சிரவந்தி தத் (சகோதரிகள்)

பிரியங்கா தத் சலசானி (Priyanka Dutt Chalasani) (பிறப்பு: டிசம்பர் 19, 1984) ஓர் இந்தியத்] தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். [2] இவர் பிரபல இந்திய திரைப்பட தயாரிப்பாளரும் வைஜெயந்தி மூவீஸின் நிறுவனருமான ச. அஸ்வினி தத்தின் மகள் ஆவார். பிரியங்கா லாஸ் ஏஞ்சலஸின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் திரைப்படத் தயாரிப்பைப் படித்தார். [2] 2004 இல் பாலு என்றத் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக தனது 20 வயதில் தயாரிப்பாளராக அறிமுகமானார் [2] இவர் திரீ ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோ என்ற திரைப்பட நிறுவனத்தை நிறுவனர். இவரது நிறுவனம் தயாரித்த யாதோன் கி பாரத் என்ற குறும்படம் 2013 கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. [3]

புதிய அலை திரைப்படங்களை ஊக்குவிப்பதற்காக 2009 ஆம் ஆண்டில் பிரியங்கா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான திரீ ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோவை [4] தொடங்கினார். நிறுவனம் மூலம் பானம் (2009) என்ற படத்தைத் தயாரித்தார். இது ஒரு நக்சலைட்டின் மகனான இந்தியக் காவல் பணி அதிகாரியின் கதையை ஆராய்கிறது. இந்தப் பிரச்சனையை கையாண்ட விதத்திற்காக இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. [5] பிரியங்காவுக்கு, இத்திரைப்படம் 2009 இல் சிறந்த திரைப்படப் பிரிவில் நந்தி விருதை பெற்றுத் தந்தது. [6] தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்தியாவில் உள்ள முக்கிய பெரு நிறுவன வாடிக்கையாளர்களுக்காக படங்களையும் தயாரித்தார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "EXCLUSIVE | Dulquer Salmaan was a choice that I was hell bent on: Swapna Dutt Chalasani". Hindustan Times (in ஆங்கிலம்). 2017-12-11. பார்க்கப்பட்ட நாள் 2021-05-16.
  2. 2.0 2.1 2.2 "Priyanka takes Tollywood to Cannes". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2013-06-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130605045532/http://articles.timesofindia.indiatimes.com/2013-05-01/news-interviews/38956765_1_short-film-rd-burman-telugu. பார்த்த நாள்: 19 May 2013. 
  3. "Yaadon Ki Baraat, during its short length, tells the tale of a young R.D. Burman fan". Deccan Chronicle இம் மூலத்தில் இருந்து 2 மே 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130502231647/http://www.deccanchronicle.com/130430/entertainment-tollywood/article/tollywood-short-film-cannes. பார்த்த நாள்: 5 May 2013. 
  4. "Ashwini Dutt's daughter announces 2 projects". India Glitz. Archived from the original on 26 ஜூலை 2009. பார்க்கப்பட்ட நாள் 5 May 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Movie Review-Baanam". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 5 May 2013.
  6. "Silver Nandi award for second best Feature Film for Baanam". பார்க்கப்பட்ட நாள் 19 May 2013.
  7. "Yaadon Ki Baraat, during its short length, tells the tale of a young R.D. Burman fan". Deccan Chronicle இம் மூலத்தில் இருந்து 2 மே 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130502231647/http://www.deccanchronicle.com/130430/entertainment-tollywood/article/tollywood-short-film-cannes. பார்த்த நாள்: 5 May 2013. "Yaadon Ki Baraat, during its short length, tells the tale of a young R.D. Burman fan" பரணிடப்பட்டது 2013-05-02 at the வந்தவழி இயந்திரம்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியங்கா_தத்&oldid=4108998" இலிருந்து மீள்விக்கப்பட்டது