ச. அஸ்வினி தத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ச. அஸ்வினி தத்
2023 இல் தத்
பிறப்புசலசானி அஸ்வினி தத்
15 செப்டம்பர் 1950
விசயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
தேசியம் இந்தியா
பணி
  • திரைப்படத் தயாரிப்பாளர்
  • திரைப்பட விநியோகத்தர்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
பிள்ளைகள்3 (சொப்னா தத் , பிரியங்கா தத், சிரவந்தி தத்)

சலசானி அஸ்வினி தத் (Chalasani Aswani Dutt) (அஸ்வினி தத் என்றும் உச்சரிக்கப்படுகிறது; பிறப்பு 15 செப்டம்பர் 1950) தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றியதற்காக அறியப்பட்ட ஒரு இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். [1] [2] இவர் 1974 இல் வைஜெயந்தி மூவிஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார். இது தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். ஏறக்குறைய ஐந்து தசாப்தகால வாழ்க்கையில், இவர் 40 க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். அவற்றில் பெரும்பாலானவை தெலுங்கிலும், சில பாலிவுட் மற்றும் தமிழ் மொழிகளிலும் தயாரிக்கப்பட்டன. [3] [4] [5] ஆடம்பரமான தயாரிப்பு மதிப்புகளைக் கொண்ட பிரபலமான நடிகர்களைக் கொண்டு அதிகப் பொருட்செலவிலான படங்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்றவர். [6]

ஆரம்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சலசானி அஸ்வினி தத் ஆந்திரப் பிரதேசத்தின் விசயவாடாவில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஒரு ஒப்பந்ததாரராக இருந்தார். அவர் பல ஆண்டுகளாக மாநிலத்தில் கலிங்கா பைப்ஸின் ஒரே விநியோகஸ்தராக இருந்தார். இந்தியத் திரைக்கதை எழுத்தாளரும், இயக்குனரும், நடிகருமான சந்தியாலா, இவருக்கு இளமைக்காலம் முதலே நண்பராவார். [7]

இவருக்கு பிரியங்கா தத், சொப்னா தத் மற்றும் சிரவந்தி தத் என மூன்று மகள்கள் உள்ளனர். [6] பிரியங்கா, வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் வெளியான எவடே சுப்ரமணியம் (2015) படத்தை இயக்கிய திரைப்பட இயக்குனர் நாக் அஸ்வினை திருமணம் செய்து கொண்டார். [8]

அரசியல் ஆர்வம்[தொகு]

2004 ஆம் ஆண்டு நடந்த இந்தியப் பொதுத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக விஜயவாடா மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Jonnalagedda, Pranita (2016-12-19). "Dil Raju, Ashwini Dutt for Mahesh Babu". பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.
  2. "Director Vamshi Paidipally lands in soup for Mahesh Babu's next". 2016-12-30. பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.
  3. "Aswini Dutt - Producer of Vyjayanthi banner - Interview by Jeevi". 2 December 2004. பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.
  4. "Interview of Producer C Ashwini Dutt about Sita Ramam". பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.
  5. "Interview with Aswini Dutt by Jeevi". 17 August 2002. பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.
  6. 6.0 6.1 Mary, S. B. Vijaya (2020-05-07). "Celebrating 30 years of the Chiranjeevi-Sridevi Telugu blockbuster ‘Jagadeka Veerudu Athiloka Sundari’". The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/celebrating-30-years-of-the-chiranjeevi-sridevi-telugu-blockbuster-jagadeka-veerudu-athiloka-sundari/article31524731.ece. பார்த்த நாள்: 2022-09-03. 
  7. Producer C. Aswani Dutt || Cheppalani Vundhi | 18th September 2021 (in ஆங்கிலம்), archived from the original on 3 August 2022, பார்க்கப்பட்ட நாள் 2022-09-03 From 2:05 to 3:02
  8. "Ashwini Dutt's daughter Priyanka Dutt marries director Nag Ashwin" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._அஸ்வினி_தத்&oldid=3819552" இலிருந்து மீள்விக்கப்பட்டது