பிராம்பிள் கே
உள்ளூர் பெயர்: Maizab Kaur[1] | |
---|---|
புவியியல் | |
அமைவிடம் | டொரெஸ் நீரிணை/பவளக் கடல் |
ஆள்கூறுகள் | 9°8'23"S, 143°52'54"E |
தீவுக்கூட்டம் | டொரெஸ் நீரிணைத் தீவுகள் |
முக்கிய தீவுகள் | பிராம்பிள் கே, பிளாக் ராக்ஸ் |
பரப்பளவு | 0.0362 km2 (0.0140 sq mi) |
நீளம் | 0.251 km (0.156 mi) |
அகலம் | 0.104 km (0.0646 mi) |
உயர்ந்த ஏற்றம் | 3 m (10 ft) |
உயர்ந்த புள்ளி | சிகரன் மலை |
நிர்வாகம் | |
ஆதிரிரேலியா | |
மக்கள் | |
மக்கள்தொகை | 7 (சுற்றுலா பயணிகள்) |
அடர்த்தி | 0 /km2 (0 /sq mi) |
பிராம்பிள் கே (Bramble Cay), மைசாப் கவுர்[1], மசராம்கூர் அல்லது பரமகி என்றும் அழைக்கப்படுவது, குயின்ஸ்லாந்தின், டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுகளின் வடகிழக்கு விளிம்பிலும், பெருந் தடுப்புப் பவளத்திட்டு ரீப்பின் வடக்கு முனை ஆகும். இது ஆஸ்திரேலிய தீவின் தொலை வடக்குப் பகுதியாகும் . இதற்கும் பப்புவா நியூ கினியாவின் பிளை ஆற்றின் கழிமுகத்திற்கும் தென்கிழக்கு பக்கமாக 55 கிலோமீட்டர்கள் (34 mi) தொலைவே உள்ளது.
வரலாறு மற்றும் அம்சங்கள்
[தொகு]இந்தத் தீவின் பரப்பில் 3.62-எக்டேர் (8.9-ஏக்கர்) மணல் திட்டானது பெரும்பாலும் புல்வெளியாகவும், 1.72 எக்டேர்கள் (4.3 ஏக்கர்கள்) புற்களால் மூடப்பட்டுள்ளது. [3]
இந்த தீவானது "எரிமலைப்பாறை வெளிப்பாட்டால் உருவான பாறைகளாலும் ஃபோராமினிஃபெரல் மணலாலும் ஆனது. [4]
இத்தீவின் பெயரான பிராம்பிள் கே என்ற பெயரானது ஐரோப்பிய நில அளவையாளரான எச்.எம்.எஸ். பிரம்பிள் என்பவரின் பெயரைக் கொண்டு இடப்பட்டது. இவர் 1854 ஏப்ரலில் இத்தீவுக்கு வந்த்தார். [5]
1862 ஆம் ஆண்டில், ஆங்கிலோ-ஆஸ்திரேலிய குவானோ நிறுவனத்திற்கு ஒரு சுரங்க குத்தகை இங்கு வழங்கப்பட்டது. குறைந்த தர பாஸ்பேடிக் பாறை சுரங்கத்திற்கு அவ்வப்போது படகுகள் வரும். ஆனால் அதன் குறைந்த தரம் காரணமாக, இங்கு நிரந்தர தளம் உருவாக்கப்படவில்லை. [6]
இப்பகுதியியல் பல கப்பல் விபத்துக்கள் ஏற்பட்டப் பிறகு, 1924இல் இங்கு முதல் கலங்கரை விளக்கமானது, 42 அடிகள் (13 m) உயர பிரமிடல் எஃகு கோபுரத்தில் அமைக்கப்பட்டது. இது 1954 இல் இடிக்கப்பட்டு, அதற்கு பதிலாக துருபிடிக்காத எஃகில் 17 மீட்டர்கள் (56 அடி) உயர கலங்கரை விளக்கமாக மாற்றப்பட்டது. இதில் 1987 சனவரி 6 இல் சூரிய மின்னாற்றல் பொருத்தப்பட்டது. இங்கு ஒவ்வொரு மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஆஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் கப்பல்களின் வருகை உள்ளது.
பிராம்பிள் கே பகுதியானது தோணியாமைகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாகும். இதைச் சுற்றியுள்ள கடல் பகுதியானது அல்காவும், இந்த அல்காவை விரும்பும் மீன்கள் நிறைந்ததாகவும் உள்ளது. [7] இந்த தீவு பிராம்பிள் கே எலிகளின் தாயகமாகவும் இருந்தது, இந்த எலிகளானது ஒரு தனித்து வாழ்ந்த கொறிணி இனமாகும், இது மனிதனால் ஏற்பட்ட புவி வெப்படைதலின் விளைவாக அழிந்துபோனதாக அறிவிக்கப்பட்ட முதல் பாலூட்டி இனமாகும். [4] புவி வெப்படைதலின் விளைவாக ஏற்பட்ட கடல்மட்ட உயர்வால் இத்தீவின் பரப்பளவு 9.8 ஏக்கரில் இருந்து 6.2 ஏக்கராகக் குறைந்ததன் காரணமாக இந்த எலி இனம் அற்றுப்போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[8]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Map 8 Darnley Island and surrounds (PDF) (PDF map). CSIRO Marine Research, Australian Government. 1997. Archived from the original (PDF) on 2019-03-19.
- ↑ Area as of 1995
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 26 February 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-01-12.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ 4.0 4.1 Confirmation of the extinction of the Bramble Cay melomys Melomys rubicola on Bramble Cay, Torres Strait: results and conclusions from a comprehensive survey in August–September 2014 (PDF), Unpublished report to the Department of Environment and Heritage Protection, Queensland Government, Brisbane., June 2016, archived from the original (PDF) on 14 ஜூன் 2016, பார்க்கப்பட்ட நாள் 14 June 2016
{{citation}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Australian Mammal Society. பார்க்கப்பட்ட நாள் 2019-03-02.
- ↑ Ellison, Joanna (1998). "Natural History of Bramble Cay, Torres Strait". Atoll Research Bulletin. http://stevespages.org.uk/melomys/docs/ellison-natural-1998.pdf. பார்த்த நாள்: 2019-03-02.
- ↑ "Bramble Cay is a small sandy cay located on the edge of the Great Barrier Reef but with excellent diving". australia.greatestdivesites.com.
- ↑ https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/516647-creature-destruction-2.html%7Cஉயிரின அழிவு: பேசப்படாத இனப்படுகொலை]தி இந்து தமிழ் திசை - சனி, செப்டம்பர் 21 2019
வெளி இணைப்புகள்
[தொகு]- இப்பகுதியின் அதிகாரப்பூர்வ ஆஸ்திரேலிய வரைபடம் பரணிடப்பட்டது 2021-03-06 at the வந்தவழி இயந்திரம்