பிரம்மன் கோயில், தாய்லாந்து
இறைவன் கோவில் Erawan Shrine தாவோ மகா புரொம் கோவில் Thao Maha Phrom Shrine | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
புவியியல் ஆள்கூறுகள் | 13°26′38″N 100°19′21″E / 13.44397°N 100.32256°E |
சமயம் | பௌத்தம் |
மாகாணம் | பேங்காக் |
மாவட்டம் | பத்தும் வான் மாவட்டம் |
பிரம்மன் கோயில்அல்லது இறைவன் கோவில் (Erawan Shrine) அல்லது ஐராவதம் கோயில் (Airavata Shrine அல்லது Shrine of Lord Brahma the Great), தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் நகரத்தில் அமைந்த இந்து சமயக் கடவுளர்களில் திருமூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவிற்கு[1] அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.
17 ஆகத்து 2015இல் இக்கோயிலின் அருகே நடந்த குண்டு வெடிப்பில் 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 125 பேர் படுகாயமடைந்தனர்.[2]
அமைவிடம்
[தொகு]தாய்லாந்து நாட்டின் பதும் மாவட்டத்தின், இரட்சதர்மி சாலையின், இரட்சபிரசாங் சந்திப்பில் அமைந்த கிராண்ட் அயத் எரவான் விடுதி அருகே அமைந்துள்ளது. இப்பகுதியில் பல வணிக வளாகங்கள் அமைந்துள்ளது. திருமூர்த்தி, இலக்குமி, விநாயகர், இந்திரன், திருமால் மற்றும் கருடனுக்கான கோயில்கள் இதனருகே அமைந்துள்ளது.[3][4][5]
வரலாறு
[தொகு]எராவான் பிரம்மன் கோயில், 1956இல் தாய்லாந்து அரசின் எரவான் விடுதி அருகே, இத்தாலி நாட்டின் பளிங்கு கற்களால் கட்டப்பட்டது.
படக்காட்சியகம்
[தொகு]-
குழு நாட்டியம்
-
கோயிலைச் சுற்றி பூக்களும், நறுமண பத்திகளும்
-
யானைச் சிலைகள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Brahma
- ↑ "Bangkok bomb horror: At least 20 die, 125 hurt in Erawan shrine blast". Bangkok Post. 18 August 2015. http://www.bangkokpost.com/news/politics/658808/city-bomb-horror. பார்த்த நாள்: 19 August 2015.
- ↑ Lim, Eric. "Lakshmi Shrine – guardian angel of Ratchaprasong". Tour Bangkok Legacies. பார்க்கப்பட்ட நாள் 19 August 2015.
- ↑ "Thailand's World: Hindu Shrines at Ratchaprasong". thailandsworld.com. Archived from the original on 21 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 19 August 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Shirls (16 November 2007). "Life's Indulgences". lifes-indulgences.blogspot.ch. பார்க்கப்பட்ட நாள் 19 August 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]- Bangkok Metropolitan Administration | Erawan Shrine பரணிடப்பட்டது 2006-05-10 at the வந்தவழி இயந்திரம்
- பிரம்மா கோவில் குண்டுவெடிப்பு: தாய்லாந்து ராணுவ நீதிமன்றத்தில் 2 சீனர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு பரணிடப்பட்டது 2015-11-27 at the வந்தவழி இயந்திரம்
- பாங்காக்கில் அருளும் ப்ரா ப்ரோம் தி இந்து (தமிழ்) 28 சூன் 2018