பிரத்தியங்கிரா தேவி
பிரத்தியங்கிரா | |
---|---|
பிரத்யங்கிரா அம்மான் படம் | |
வேறு பெயர்கள் | நரசிம்மி, அதர்வண காளி |
தேவநாகரி | प्रत्यङ्गिरा |
சமசுகிருதம் | Pratyangira |
தமிழ் எழுத்து முறை | பிரத்யங்கிரா |
பாளி IAST | Pratyangira |
எழுத்து முறை | प्रत्यङ्गिरा |
வகை | தேவி, சப்தகன்னியர் |
ஆயுதம் | திரிசூலம், சங்கு (இசைக்கருவி), சக்கரம், கதை |
துணை | சம்ஹார பைரவர் |
நூல்கள் | அதர்வண வேதம் |

பிரத்தியங்கிரா (சமசுகிருதம்: प्रत्यङ्गिरा; Prātyangira, பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி: Pratyangira) பார்வதியின் வடிவமாக உள்ள ஒரு கடவுளாக இந்து சமயப் பெண் கடவுளாக ஆவார். பிரத்யங்கரா தேவி பார்வதியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாகும். இவர் சிம்ம முகமும், பெண் உடலும் கொண்டு காணப்படுகிறார். இந்து தொன்மவியலில் படி பிரத்தியங்கரா பார்வதியின் வடிவம் ஆவார். இந்த பிரத்யங்கரவுக்கு நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடும் எட்டு கைகளோடும், மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காணப்படுகிறாள்.
பெயரிலக்கணம்
[தொகு]காலகண்டி, பைரவ மஹிஷி என பிரத்தியங்கரா தேவி பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.[1]
வடிவம்
[தொகு]சிம்ம முகம், 18 கரம், கரிய நிறத்துடன் சூலம், பாசம், டமருகம் ஆகிய பல ஆயுதங்களை ஏந்திவாறு இருக்கிறாள் இவள்.
தோற்றக் காரணம்
[தொகு]இந்து தொன்மவியலின் படி விஷ்ணு நரசிம்மராக பிரகலாதனுக்காக இரணியனை (இரணியகசிபுவை) கொல்ல சிங்க உருவமெடுத்து, அவரை கொன்று விட்ட பிறகும் அடங்காத கோபத்துடனே இருந்தார். அதனால் உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் துன்பப்பட்டன. தேவர்களும், முனிவர்களும் சிவனை அடைந்து தங்களை காக்கும் படி வேண்டினர். சிவனும் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, நரசிம்மரை கொல்ல சரபாம் என்றும் சிங்கம் மற்றும் கழுகு மற்றும் கடவுள் வடிவினை (கழுகும், கடவுளும், சிங்கமும் கலந்த ஒரு புதிய வடிவை எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன) எடுத்து அவருடன் சண்டையிட்டார். அந்த வடிவுக்கு சரபார் என்று பெயர். அப்போது நரசிம்மர் கண்டபேருண்டர் என்ற தன்னுடைய இரு தலைகளை கொண்ட கழுகு உருவத்தை தோற்றுவித்தார். இந்த இரு தலைகளை கொண்ட கழுகானது, சரபாருக்கு எதிரியாவார். எனவே சரபர் தன்னுடைய நெற்றி கண்ணிலிருந்து அவரின் துணையான பார்வதியை பிரத்தியங்கிரா தேவி என்ற உருவத்தில் ஏற்கனவே வைத்திருந்ததால் வரவைத்தார்.[2] இத்தேவி கண்டபேருண்டரை விழுங்கினார். அதன் பின்பு சரபர் நரசிம்மரை விழுங்கினார் மற்றும் கண்டபேருண்டரும் நரசிம்மரும் அவர்களின் சக்திகளால் இருவரின் வயிற்றிலிருந்து வெளியே வந்து பிரத்யங்கிரா தேவியை குடல்களை பிடிங்கி கொன்றனர், மற்றும் இருவரும் சேர்ந்து சரபரை குடல்களை பிடிங்கி கொன்றனர். அந்த சரபா வடிவத்தின் இறக்கைகளின் பக்கம் காணப்படுபவளே இந்த பிரத்தியங்கிரா தேவி. இந்த நிகழ்வு குஞ்சிதாங்க்ரி ஸ்தவம் என்ற நூலில் உமாபதி சிவம் குறிப்பிட்டுள்ளார்.[3]
வழிபாட்டு முறை
[தொகு]மிளகாய் யாகம்
[தொகு]உளுந்தூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோயிலில் உள்ள பாதூர் பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் யாகம் ஒவ்வொரு அமாவாசையன்றும் நடத்தப்படுகிறது.[4] இந்த யாகத்தினை பிரத்தியங்கிரா யாகம் என்றும், நிகும்பலா யாகமென்றும் அழைக்கின்றார்கள்.[5] அய்யாவடி, நடுக்கரை பிரத்தியங்கிரா கோயில் ஆகியவற்றிலும் இந்த யாகம் நடத்தப்படுகிறது. சீர்காழி அடுத்த வரிசைபத்து என்ற கிராமத்தில் ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அமாவாசை, பௌர்ணமி, தேய்பிறை அஷ்டமி என மாதம் மூன்று நாள் யாகம் சிறப்பாக நடக்கிறது.
ஆலயங்கள்
[தொகு]- ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயில் - மானாமதுரை.
- அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி கோயில், கும்பகோணம்.
- பிரத்யங்கிரா தேவி கோயில், தூத்துக்குடி - ஒரே கல்லிலான சிலை.
- ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி கோயில் - திருவள்ளூர் (சிங்க ரதத்தில் ஆறு அடி உயரத்தில் பிரத்யங்கிரா தேவி சிலை).
- ஶ்ரீ பிரத்யங்கிரா தேவி கோயில், சோலிங்கநல்லூர், சென்னை.
- ஜெய் பிரத்யங்கிரா பீடம், மலையடிவாரம், 40, வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோயில் அருகில், செங்கல்பட்டு மாவட்டம்.
- ஸ்ரீ சுயம்பு ஆகாச பிரத்தியங்கரா தேவி - திருவெண்காடு (சீர்காழி வட்டம்).
- ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா கோயில் (PDD)-வரிசைபத்து, சீர்காழி.
- ஶ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி கோயில் - இரண்டாம் சிப்காட், ஒசூர்.
- ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி கோயில். பள்ளூர். வேலூர் மாவட்டம் 631051, ஸ்ரீ மஹா பிரத்யங்கரா தேவி கோயில். நடுநாலுமூலைக்கிணறு 628213, திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம்.
- ஸ்ரீ தர்ம சாஸ்தா மற்றும் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி கோயில், ஊழிக்கோடு, கோணம், விரிகோடு அஞ்சல், மார்த்ததாண்டம், கன்யாகுமரி மாவட்டம்.
- ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி கோயில், சீலையம்பட்டி, தேனி.
- ஶ்ரீ முத்துவிநாயகர் கோயிலில் தனி கோyiல் பட்டாச்சாரி தெரு, அயனாவரம், சென்னை - 600023.
இவற்றையும் காண்க
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ http://temple.dinamalar.com/Slogandetails.php?id=883 பிரத்தியங்கிரா வழிபாடு தினமலர் கோயில்கள்
- ↑ http://temple.dinamalar.com/Slogandetails.php?id=883 பிரத்தியங்கிரா வழிபாடு - தினமலர் கோயில்கள்
- ↑ http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=3110&Cat=3 பகைவர் தொல்லை தீர்க்கும் பிரத்யங்கிரா தேவி
- ↑ http://www.dailythanthi.com/2014-03-02-ulundurpettai-agastheeswarar-in-the-temple-padhur-pirattiyankara-devi-chilli-havan உளுந்தூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் பாதூர் பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் யாகம் தினத்தந்தி Mar 02
- ↑ http://www.maalaimalar.com/2013/02/13110746/Narayani-Pratyangira-Devi-Temp.html பரணிடப்பட்டது 2013-02-24 at the வந்தவழி இயந்திரம் நாராயணி பிரத்தியங்கிரா தேவி கோவில்