பிரதீப் காந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரதீப் காந்தி
Pradeep Gandhi
நாடாளுமன்ற உறுப்பினர்
முன்னையவர்ரமன் சிங்
பின்னவர்தேவ்ராத்து சிங்
தொகுதிஇராச்நந்தகாவுன் நாடாளுமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 திசம்பர் 1964 (1964-12-26) (அகவை 59)
தோங்கர்காவுன், சத்தீசுகர், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய சனதா சிங்
துணைவர்கீர்த்தி காந்தி
பிள்ளைகள்2 மகன் மற்றும் 1 மகள்
வாழிடம்(s)இராச்நந்தகாவுன், சத்தீசுகர்
As of 25 செப்டம்பர், 2006
மூலம்: [1]

பிரதீப் காந்தி (Pradeep Gandhi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1964 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக சத்தீசுகர் மாநில அரசியலில் செயல்பட்டார்.

இந்தியாவின் 14 ஆவது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். சத்தீசுகரின் இராச்நந்தகாவுன் நாடாளுமன்றத் தொகுதி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். 2004 ஆம் ஆண்டில் சத்தீசுகர் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

கீர்த்தி காந்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.[1]

வெளியேற்றம்[தொகு]

நொய்டாவைச் சேர்ந்த ஊடக நிறுவனமான கோப்ராபோசுட்டின் கொடுக்கு நடவடிக்கையான துரியோதனா நடவடிக்கை 2005 ஆம் ஆண்டு 12 திசம்பர் மாதம் 12 ஆம் தேதியன்று இந்திய இந்தி செய்தி தொலைக்காட்சியான ஆச்சு தக்கில் ஒளிபரப்பப்பட்டது. பிரதீப் காந்தி ரூ. 55000 கையூட்டு வாங்கும் காணொளியில் சிக்கினார். பாராளுமன்றத்தில் கற்பனையான கேள்விகளை முன்வைப்பதற்காக இத்தொகை பெறப்பட்டது.[2]

2005 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று நாடாளுமன்ற சிறப்புக் குழு, சபையை அவமதித்ததற்காக இவர் குற்றவாளி எனக் கண்டறிந்தது. இவருடன் காணொளியில் சிக்கிய 11 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வெளியேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தைத் தொடர்ந்து, இவர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Home Page on the Parliament of India's Website
  2. Aniruddha Bahal. "Operation Duryodhana". Archived from the original on 23 April 2012. Contains detailed description of the interaction with each MP.
  3. K.V. Prasad (Dec 24, 2005). "11 MPs expelled for cash-for-questions scam". தி இந்து. Archived from the original on May 8, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதீப்_காந்தி&oldid=3920298" இலிருந்து மீள்விக்கப்பட்டது