பியர்ரே பிரெடெரிக் சாரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பியர்ரே பிரெடெரிக் சாரசு (Pierre Frédéric Sarrus) (மார்ச் 10, 1798 – நவம்பர் 20, 1861) இவர் நேரியல் இயற்கணிதத்தில் ஒரு 3 x 3 அணியின் அணிக்கோவையின் மதிப்பு காணும் முறையை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளும் விதமாக சாரசு நினைவு விதியைக் கண்டுபிடித்த பிரெஞ்சு நாட்டின் கணிதவியலாளர் ஆவார். இவர் ஸ்ட்ராஸ்பேர்க்கில் பல்கலைக்கழகத்தில் 1826 முதல் 1856 ஆம் ஆண்டு வரை பேராசிரியராக இருந்தார். மேலும் 1842 ஆம் ஆண்டில் பிரஞ்சு அறிவியல் அகாடமியில் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். இவரின் தொகையீட்டுக் கொள்கையின் மூலம் வால்வெள்ளியின் வட்டப் பாதை உறுதியீட்டு கொள்கைக்குள் கொண்டுவர முடிந்தது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]