பியடோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியடோன்

பியடோன் (Fiadone) (கோர்சு மொழி : பியடோனி) என்பது கோர்சிகா தீவில் பாரம்பரியமாக கீழ் அடுக்கு இல்லாமல் சமைக்கப்படும் பாலாடைக்கட்டி அணிச்சல் ஆகும்.

இந்த அணிச்சல் கோர்சிய பாலாடைக்கட்டி, சர்க்கரை, எலுமிச்சைச்சாறு மற்றும் முட்டை ஆகியவை கலந்து உருவாக்கப்படுகிறது.[1] பியடோன் வட்டம் அல்லது செவ்வக வடிவத்தைக் கொண்டிருக்கலாம். இவை அடுப்பில் சுடப்பட்டு குளிர்ச்சியாக பரிமாறப்படுகிறது.

இத்தாலி நாட்டின் அப்ருசோ பிராந்தியம் மற்றும் மோலிசு பிராந்திய பகுதிகளில், பெரிய இனிப்பு ரிகோட்டா எனப்படும் கொழுப்பு மற்றும் ரவியோலி எனப்படும் பாசுதா அடைத்து பியடோன் முக்கியமாக உயிர்ப்பு ஞாயிறு திருவிழாவில் பரிமாறப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. சாபிரா (1994 ஆம் ஆண்டு) பக்கம். 121

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியடோன்&oldid=3722903" இருந்து மீள்விக்கப்பட்டது