பாஸ்கர் ஒரு ராஸ்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

'பாஸ்கர் ஒரு ராஸ்கல் (Bhaskar Oru Rascal) 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எழுத்து மற்றும் இயக்கம் சித்திக். மலயாளத்தில் 2015 ஆம் ஆண்டு சித்திக் இயக்கத்தில் வெளிவந்தது. மலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடித்த 'பாஸ்கர் தி ராஸ்கல்' படம் தமிழில் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் மறுஆக்கம் ஆகியுள்ளது. இப்படத்தில் அரவிந்த்சாமி மற்றும் அமலா பால் முன்னணி நட்சத்திரங்களாக நடித்துள்ளனர். படத்தயாரிப்பு பிப்ரவரி 2017 யில் துவங்கியது.[1][2] இந்தத் திரைப்படம் 17 மே 2018 ஆம் தேதி வெளியானது.[3]

நடிகர்கள்[தொகு]

படக்குழுவினர்[தொகு]

இயக்கம் - சித்திக்

இசை - அம்ரேஷ் கணேஷ்

தயாரிப்பு - ஹர்ஷினி மூவீஸ்

ஒளிப்பதிவு - விஜய் உலகநாத்

தொகுப்பு - கே.ஆர். கௌரிஷங்கர்

வசனம் - சித்திக், ரமேஷ் கண்ணா

கதைச்சுருக்கம்[தொகு]

பாஸ்கர் (அரவிந்த்சாமி) மனைவியை இழந்த வணீக வியாபாரி. தந்தை(நாசர்) மற்றும் மகன் ஆகாஸூடன்(மாஸ்டர் ராகவன்) வழ்ந்து வருகிறார். அவர் நடந்துகொள்ளும் விதத்தால் ராஸ்க்ல் என்று அழைக்கப்படுகிறார். அனு(அமலா பால்) கணவனை இழந்து மகள் ஸ்வானியுடன்(பேபி நைநிகா) வாழ்கிறார். இருவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில் படித்து நண்பர்களாகின்றனர். தன் தகப்பன் இல்லையே என்ற ஏக்கத்தில் இருக்கும் நைனிகா, ஒருநாள் கராத்தே வகுப்பில் நடக்கும் பிரச்சனையின் போது பாஸ்கரின் சண்டையை பார்த்து வியக்கிறார். மேலும், எதிலும் தைரியமாக இருக்கும் பாஸ்கரை அப்பா எனஅழைக்க ஆரம்பிக்கிறார். அதேபோல எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையுடன் செய்வதால் அனுவை ஆகாஷுக்கு பிடிக்கிறது. அது முதல் அனுவை அம்மா என்றே அழைக்கிறான். பாஸ்கர், அனு இருவரையும் சேர்த்து வைத்தால் அனைவரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வசிக்கலாம் என முடிவெடுக்கிறார்கள். இருவரும் அதற்கு சம்மதிக்கும் நிலையில் இறந்துவிட்டதாக நினைத்த அனுவின் கணவர் உயிருடன் வந்து நிற்கிறார். அனுவிடம் அவருக்கு தேவைப்படும் ஒரு ரகசிய பொருள் உள்ளது. அதை தீவிரவாதிகளிடம் கொடுக்கவே அவர் வந்திருக்கிறார் என்பது தெரிகிறது. அதன்பிறகு பிரச்சனைகளை சமாளித்து இருவரும் சேர்கின்றனர்.

இசை[தொகு]

பா. விஜய், கருணாகரன், விவேகா மற்றும் மதன் கார்க்கி எழுதிய பாடல்களுக்கு அம்ரேஷ் கணேஷ் இசை அமைத்துள்ளார்.[4][5] இப்பாடத்ததில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளன. இந்தத் திரைப்படத்தின் பின்னணி இசை நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றது.[6][7]

பாடல்களின் பட்டியல்
ட்ராக் பாடல் பாடியவர் நீளம்
1 அம்மா ஐ லவ் யு ஷ்ரேயா கோஷல், பேபி ஷ்ரேயா 4.46
2 பாஸ்கர் ஈஸ் எ ராஸ்கல் அம்ரேஷ் கணேஷ் 3.58
3 தூக்கணங்கூடு க்ரிஷ், வந்தனா ஸ்ரீநிவாசன் 4.08
4 இப்போது ஏன் கார்த்திக் 4.20
5 பாஸ்கர் தீம் அம்ரேஷ் கணேஷ் 1.10

வெளியீடு[தொகு]

ஜனவரி 14, ஏப்ரல் 27, மே 11 ஆகிய தேதிகளில் வெளியாகி இருக்கவேண்டிய இப்படம், இறுதியாக மே 18 ஆம் தேதி வெளியானது.[8][9]

விமர்சனம்[தொகு]

தினமலர்:பாஸ்கர் ஒரு ராஸ்கல் - ஜஸ்ட் பாஸ்.

சமயம்:'கோடை விடுமுறையில் சிறுவர்களை சிரிக்க ,சிலிர்க்க வைக்கிறார்!

வெளி-இணைப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "timesofindia.indiatimes.com".
  2. "http://www.bbfc.co.uk".
  3. "https://moviegalleri.net".
  4. "gaana.com".
  5. "www.saavn.com".
  6. "https://timesofindia.indiatimes.com".
  7. "https://top10cinema.com".
  8. "https://www.behindwoods.com".
  9. "http://www.sify.com".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஸ்கர்_ஒரு_ராஸ்கல்&oldid=2701553" இருந்து மீள்விக்கப்பட்டது