பாலுகான்
பாலுகான் Balugaon | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 20°10′N 85°06′E / 20.17°N 85.1°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
மாவட்டம் | கோர்த்தா |
அரசு | |
• சட்டமன்ற உறுப்பினர் | பிரசாந்த் குமார் இயக்தேபு |
ஏற்றம் | 76 m (249 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 15,824 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | ஒடியா |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 752030 |
தொலைபேசிக் குறியீடு | 06756 |
வாகனப் பதிவு | OD-02 |
இணையதளம் | odisha |
பாலுகான் (Balugaon) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள கோர்தா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது சிலிகா ஏரிக்கு மிக அருகில், மாநிலத் தலைநகரம் புவனேசுவரில் இருந்து 90 கிலோமீட்டர்கள் (56 mi) தொலைவிலும் கஞ்சாம் மாவட்டத்தின் பெர்காம்பூர் நகரிலிருந்து 76 கிலோமீட்டர்கள் (47 mi) தொலைவிலும் அமைந்துள்ளது. இறால் மற்றும் மீன் வணிகம் காரணமாக கோர்தா மாவட்டத்தின் முக்கிய பொருளாதார மையமாக பாலுகான நகரம் திகழ்கிறது.
நிலவியல்
[தொகு]பாலுகான் நகரம் 20°06′N 85°30′E / 20.10°N 85.5°E என்ற அடையாள அள்கூறுகளில் கடல்மட்டத்திலிருந்து 76 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.[1]
தொடர்பு
[தொகு]பாலுகான் மாநில தலைநகர் புவனேசுவர் மற்றும் பெர்காம்பூருடன் சாலை ( தேசிய நெடுஞ்சாலை16 ) மற்றும் இரயில் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. அவுரா-சென்னை பிரதான பாதையில் உள்ள பாலுகான் இரயில் நிலையம் பாலுகானை கொல்கத்தா, சென்னை மற்றும் விசாகப்பட்டினம் போன்ற முக்கிய இந்திய நகரங்களுடன் இணைக்கிறது. இந்த வழித்தடத்தில் செல்லும் அனைத்து முக்கிய இரயில்களும் பாலுகானில் நின்று செல்லும். புதிய இயகநாத்து சதக்கு வழியாக இயகன்னாத் தாம் பூரியை அடையலாம்.
சுற்றுலா
[தொகு]காளிசாய் கோயில் மற்றும் நளபானா போன்ற சிலிகா ஏரியில் உள்ள சுற்றுலாத் தலங்களை பாலுகானிலிருந்து அரசு அல்லது தனியார் படகு மற்றும் ஏவுதள சேவைகள் மூலம் அடையலாம். நாராயணி கோயில் பாலுகானிலிருந்து சில மைல்கள் தொலைவில் உள்ளது
மக்கள்தொகையியல்
[தொகு]2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி [2] பாலுகான் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 17,645 ஆகும். இதில் ஆண்கள் 9,150 பேரும் பெண்கள் 8495 பேரும் இருந்தனர். இங்கு 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 1956 ஆகும். இது பாலுகான் மொத்த மக்கள்தொகையில் 11.09 % ஆகும். பாலுகான் அறிவிக்கப்பட்ட பகுதிக் குழுவில், மாநில சராசரியான 979 என்ற எண்ணிக்கைக்கு எதிராக பெண் பாலின விகிதம் 928 ஆக இருந்தது. பாலுகான் நகரத்தின் எழுத்தறிவு விகிதம் மாநில சராசரியான 72.87% என்பதைவிட அதிமாக 81.73 % என்றும் பாலுகானில் ஆண்களின் கல்வியறிவு 87.96% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 75.08% ஆகவும் இருந்தது என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Falling Rain Genomics, Inc - Balugaon
- ↑ "Balugaon Village Population - Nayagarh Sadar - Nayagarh, Orissa", www.census2011.co.in, பார்க்கப்பட்ட நாள் 2024-01-25
புற இணைப்புகள்
[தொகு]விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Chilka Lake