பாலிராஜா
பாலிராஜா | |
---|---|
நாதுல்லாவின் ஆட்சியாளர் | |
ஆட்சிக்காலம் | சுமார் 986–990 பொ.ச. |
முன்னையவர் | சோபிதா |
பின்னையவர் | விக்ரகபாலன் |
அரசமரபு | நாதுல்லாவின் சகமனாக்கள் |
தந்தை | சோபிதா |
பாலி-ராஜா (Baliraja) (ஆட்சி சுமார் 986-990 பொ.ச.) நாதுல்லாவின் சகமனா வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். இவர் நாதுல்லாவை (இன்றைய இராஜஸ்தானில் உள்ள நாதோல்) சுற்றியுள்ள பகுதியை ஆட்சி செய்தார். இவர் பரமார மன்னன் முன்ஜாவுடன் மோதலில் ஈடுபட்டார். இரு தரப்பினரும் வெற்றி பெற்றனர்.
ஆட்சி
[தொகு]பாலிராஜா அவரது முன்னோடி சோபிதாவின் மகனாவார்.[1]
தந்தையின் ஆட்சிக் காலத்தில் தொடங்கிய சகமான- பரமாரர் மோதல் இவரது ஆட்சியிலும் தொடர்ந்தது. [2] இவரது வழித்தோன்றலின் சுந்தா மலைக் கல்வெட்டின் படி, இவர் பரமார மன்னன் முன்ஜாவை தோற்கடித்தார். மறுபுறம், பரமார அரசவைக் கவிஞர் பரிமளா இந்தப் போரில் முஞ்சா வெற்றி பெற்றதாகக் கூறுகிறார். பரிமளாவின் கூற்றுப்படி, முஞ்சா கூர்ஜர ஆட்சியாளரையும் தோற்கடித்தார். அவர் மாருவின் ஆட்சியாளரிடம் தஞ்சம் அடைய வேண்டியிருந்தது. இங்கே, கூர்ஜர ஆட்சியாளர் சோலாங்கிய மன்னன் மூலராஜாவுடன் அடையாளம் காணலாம். மாருவின் ( மார்வார் பிரதேசம் ) ஆட்சியாளரின் அடையாளம் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் அவர் அநேகமாக பாலிராஜாவாக இருக்கலாம். [3]
பாலிராஜா வாரிசு இல்லாமல் இறந்துவிட்டதாகத் தெரிகிறது. இவருக்குப் பிறகு இவரது தந்தைவழி மாமா விக்ரகபாலன் ஆட்சிக்கு வந்தார். [2]
சான்றுகள்
[தொகு]- ↑ R. B. Singh 1964.
- ↑ 2.0 2.1 R. B. Singh 1964, ப. 239.
- ↑ Dasharatha Sharma 1959, ப. 122.
உசாத்துணை
[தொகு]- Dasharatha Sharma (1959). Early Chauhān Dynasties. S. Chand / Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780842606189.
- R. B. Singh (1964). History of the Chāhamānas. N. Kishore. இணையக் கணினி நூலக மைய எண் 11038728.