சோபிதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோபிதா
நாதுல்லாவின் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்சுமார் 982–986 பொ.ச.
முன்னையவர்இலட்சுமணன்
பின்னையவர்பாலிராஜா
அரசமரபுநாதுல்லாவின் சகமனாக்கள்

சோபிதா (Shobhita) (ஆட்சி 982–986 பொ.ச.) நாதுல்லாவின் சகமனா வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். இவர் நாதுல்லாவை (இன்றைய இராஜஸ்தானில் உள்ள நாதோல்) சுற்றியுள்ள பகுதியை ஆட்சி செய்தார். மேலும் சந்திரவதியின் பரமாரார்களுக்கு எதிராக இராணுவ வெற்றிகளைப் பெற்றார்.

ஆட்சி[தொகு]

சோபிதா நாதுல்லாவின் ஆட்சியாளர் இலட்சுமணனின் மகனாவார். [1] இவர் சோகிதா அல்லது சோகியா என்றும் அழைக்கப்படுகிறார். [2]

சுந்தா மலைக் கல்வெட்டின் படி, சோபிதா அர்புடாவை ( அபு மலையை ) ஆண்ட மன்னனின் மகிமையை "அகற்றினார்" அன அறியப்படுகிறது. வரலாற்றாசிரியர் ஆர்.பி. சிங், இந்த அர்புடா ஆட்சியாளர் அநேகமாக அபுவின் பரமாரா கிளையின் ஆட்சியாளரான ஆரண்யராஜாவாக இருக்கலாம் என்று கருதுகிறார். [1] சோலாங்கிய மன்னன் மூலராஜாவால் தாக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்ட தரணிவராகன் என்ற மற்றொரு பரமார ஆட்சியாளருடன்வரலாற்றாசிரியர் தசரத சர்மா இவரை அடையாளம் காட்டுகிறார். சோபிதா இந்த மோதலில் மூலராஜாவின் பக்கம் நின்றதாக சர்மா கருதுகிறார். [2]

சோபிதாவின் வழித்தோன்றலான ரத்னபாலனின் சேவாரி கல்வெட்டில் தார் நகரின் ஆட்சியாளர் என்று விவரிக்கப்படுகிறார். மால்வாவின் ஏகாதிபத்திய பரமார வம்சத்தின் தலைநகராக தார் இருந்தது. [1] வரலாற்றாசிரியர் டி.சி. கங்குலி, "தாரா" என்பது 12 ஆம் நூற்றாண்டின் மேவார் பகுதியில் உள்ள ஒரு நகரமாக இருந்த "தாரா" என்பதற்கான தவறு என்று ஊகித்தார். [3] இருப்பினும், தசரத சர்மாவின் கூற்றுப்படி, சோபிதா மால்வாவின் பரமாரர்களை எதிர்த்துப் போரிட்டு, அவர்களின் தலைநகரான தாராவை ஆக்கிரமித்தார். [2] சோபிதாவின் வாரிசான பாலிராஜா, பரமாரா மன்னன் முன்ஜாவின் படையைத் தோற்கடித்ததாகக் கூறப்படுவதை ஆர். பி. சிங் குறிப்பிடுகிறார். சோபிதா சிறிது காலத்திற்கு தார் நகரைக் கைப்பற்றியிருக்கலாம் என்று சிங் கருதுகிறார். அதே சமயம் மேலைச் சாளுக்கியர்களுக்கு எதிரான தெற்குப் போர்களில் முஞ்சா மும்முரமாக இருந்தார். [3]

சோபிதாவுக்குப் பிறகு இவரது மகன் பாலிராஜா பதவியேற்றார். அபு மலையின் கல்வெட்டு பலிராஜாவை சோபிதாவின் முன்னோடி என்று தவறாகக் குறிப்பிடுகிறது: இது குடும்பத்தின் மற்ற கல்வெட்டுகளால் நேரடியாக முரண்படுகிறது. [1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 R. B. Singh 1964, ப. 238.
  2. 2.0 2.1 2.2 Dasharatha Sharma 1959, ப. 122.
  3. 3.0 3.1 R. B. Singh 1964, ப. 239.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபிதா&oldid=3446544" இலிருந்து மீள்விக்கப்பட்டது