விக்ரகபாலன் (சகமான வம்சம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்ரகபாலன்
நாதுல்லாவின் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்சுமார் 990–994 பொ.ச.
முன்னையவர்பாலிராஜா
பின்னையவர்மகிந்து
அரசமரபுநாதுல்லாவின் சகமனாக்கள்
தந்தைஇலட்சுமணன்

விக்ரக-பாலன் ( Vigrahapala ) (ஆட்சி சுமார் 990-994 பொ.ச.) நாதுல்லாவின் சகமனா வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். இவர் நாதுல்லாவை (இன்றைய இராஜஸ்தானில் உள்ள நாதோல்) சுற்றியுள்ள பகுதியை ஆட்சி செய்தார்.

ஆட்சி[தொகு]

விக்ரகபாலன் சகமான மன்னன் இலட்சுமணனின் மகனாவார். இவரது சகோதரர் சோபிதாவும் அவரது மருமகன் பாலிராஜா ஆகியோர் இலட்சுமணனுக்குப் பிறகு பதவியேற்றனர். பாலிராஜா வாரிசு இல்லாமல் இறந்திருக்கலாம். இதன் காரணமாக விக்ரகபாலன் புதிய மன்னரானார். [1]

விக்ரகபாலனின் குறுகிய ஆட்சிக்காலம் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் எதுவுமின்றி கடந்துவிட்டது. [1] சுந்தா மலைக் கல்வெட்டு சகமான அரசர்களின் பட்டியலில் இவரது பெயரைத் தவிர்க்கிறது. இருப்பினும், சகஜபாலனின் மண்டோர் கல்வெட்டு, கீர்த்திபாலனின் நாதோல் கல்வெட்டு மற்றும் அல்கனதேவனின் நாதோல் கல்வெட்டு உள்ளிட்ட பிற கல்வெட்டுகளால் இவர் ஆட்சியாளராக சான்றளிக்கப்பட்டார். [2]

இவருக்குப் பின் இவரது மகன் மகிந்து ஆட்சிக்கு வந்தார் . [1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 R. B. Singh 1964, ப. 239.
  2. Dasharatha Sharma 1959, ப. 122.

உசாத்துணை[தொகு]