பாலஸ்தீன இசுலாமிய ஜிகாத் இயக்கம்
இசுலாமிய ஜிகாத் இயக்கம் حركة الجهاد الإسلامي في فلسطين | |
---|---|
நிறுவனர் | அப்து அல் அஜீஸ் அவ்தா |
தலைவர்(கள்) | பாத்தி சகாகி (1981–1995) ரமதான் சல்லா (1995–2018) சையது அல்-நகால்லா (2018–தற்போது வரை) |
செயல்பாட்டுக் காலம் | அக்டோபர் 1981 – தற்போது வரை |
செயல்பாட்டுப் பகுதி(கள்) | காசாக்கரை |
சித்தாந்தம் | பாலஸ்தீன தேசியம் இசுலாமிய தேசியம் யூத எதிர்ப்புவாதம் ஜிகாத் |
நிலை | ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல், ஜப்பான், நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவைகளால் தடை செய்யப்பட்ட அமைப்பு |
அளவு | 8,000 (2011)[1] |
இணையதளம் | == http://www.saraya.ps/ |
'இசுலாமிய ஜிகாத் இயக்கம் (Islamic Jihad Movement in Palestine (அரபு மொழி: حركة الجهاد الإسلامي في فلسطين, (சுருக்கமாக:PIJ), மேற்காசியாவில் உள்ள பாலத்தீன நாட்டின் காசாக்கரை பகுதியில் வாழும் அரேபிய இசுலாமியர்களால் 1981ல் நிறுவப்பட்ட அரசியல் கட்சி ஆகும். 8,000 போராளிகள் கொண்ட இதன் ஆயுதப் பிரிவின் பெயர் அல் குட்ஸ் பிரிகேட் (Al-Quds Brigades). இதன் கருத்தியல் பாலஸ்தீன தேசியம், இசுலாமிய தேசியம் மற்றும் யூத எதிர்ப்புக்காக ஜிகாத் நடத்துவதாகும். ஹமாஸ் போன்று இந்த அமைப்பும் பாலஸ்தீன போராளிகளின் கூட்டமைப்பில் உள்ளது. இந்த அமைப்பை ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல், ஜப்பான், நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவைகளால் தடை செய்யப்பட்டுள்ளது. [2]
காசா மருத்துவ மனை மீதான தாக்குதல்
[தொகு]வடக்கு காசாவில் உள்ள அல் அஹ்லி அரபு மருத்துவமனை மீது 17 அக்டோபர் 2023 அன்று குறி தவறி தாக்கிய ஏவுகணைகளால், மருத்துவமனை பெரும் அழிவுக்கு உள்ளாகி, 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் இறந்தனர். இந்த தாக்குதல்களுக்கு பாலஸ்தீன இசுலாமிய ஜிகாத் இயக்கமே காரணம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ben Gedalyahu, Ben (7 November 2011). "Iran Backs Islamic Jihad's 8,000-Man Army in Gaza". Israel National News. Arutz Sheva. Archived from the original on 8 November 2011. பார்க்கப்பட்ட நாள் 7 November 2011.
- ↑ What is Palestinian Islamic Jihad and what is its relationship with Hamas?
- ↑ What is Islamic Jihad, group blamed for Gaza hospital attack?
வெளி இணைப்புகள்
[தொகு]- Palestinian Terror Groups: Palestine Islamic Jihad
- https://ecfr.eu/special/mapping_palestinian_politics/palestinian_islamic_jihad/
மேலும் படிக்க
[தொகு]- Islamic Jihad Movement in Palestine official website பரணிடப்பட்டது 19 நவம்பர் 2012 at the வந்தவழி இயந்திரம்
- BBC: Israel and the Palestinians
- Hatina, Meir (2001). Islam and Salvation in Palestine: The Islamic Jihad Movement. Syracuse University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9652240486.
- Fletcher, Holly (10 April 2008). "Palestinian Islamic Jihad". Council on Foreign Relations. Archived from the original on 11 May 2017. பார்க்கப்பட்ட நாள் 22 August 2012.
- Quartet to Syria: Block 'Jihad' 5 December 2005