பாலப்பா ஹுக்கேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலப்பா ஹுக்கேரி
ಬಾಳಪ್ಪ ಹುಕ್ಕೇರಿ
பிறப்பு1911
பிறப்பிடம்முருகோடு, பெல்காம் மாவட்டம், கருநாடகம்
இறப்பு1992
இசை வடிவங்கள்பாவகீதம், சுகம சங்கீதம், நாட்டுப்புற பாடல்கள்
தொழில்(கள்)பாடகர், பாடலாசிரியர்

பாலப்பா ஹுக்கேரி (Balappa Hukkeri, கன்னடம்: ಬಾಳಪ್ಪ ಹುಕ್ಕೇರಿ) (1911-1992) கன்னட மொழியில் நாட்டுப்புற மற்றும் பாவகீதைகளின் பாடகர் மேலும் அவரது ஆரம்ப ஆண்டுகளில் ஒரு சுதந்திர போராட்ட வீரராக இருந்தார். தென் கர்நாடகாவில் கலை வடிவத்தை பிரபலப்படுத்திய பி. கலிங்க ராவைப் போலவே வட கர்நாடகாவில் சுகம சங்கீதத்தை பிரபலப்படுத்தியதற்காக கர்நாடகா முழுவதும் அறியப்பட்டு பாராட்டப்படுகிறார். [1] இந்திய அரசின் கலை விருதான சங்கீத நாடக அகாடமி விருது மற்றும் "கர்நாடக சங்கீத நாடக அகாடமி விருது" உட்பட பல மதிப்புமிக்க விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. பாலப்பா ‛சாவீர ஹாடுகள சாரதாரா ' (ஆயிரம் பாடல்களின் சாம்பியன்/பாதுகாவலர்') என்று இசைக்கலைஞர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பாலப்பா கர்நாடகாவில் பெலகாவி மாவட்டத்தின் சவடத்தியில் உள்ள முர்கோட் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். இசையமைப்பாளராக இருந்த அவரது மாமாவின் நினைவாக அவருக்கு பெயரிடப்பட்டது. நாடக நடிகர்கள் மிகுந்த குடும்பச் செல்வாக்கு காரணமாக சிறுவயதிலேயே நாடகத்துறையில் ஈர்க்கப்பட்ட பாலப்பா, நடிகர் மற்றும் பாடகராக உள்ளூர் நாடக நிறுவனங்களில் பங்கேற்கத் தொடங்கினார். சிவலிங்கையா கவாய் மூலம் ஹிந்துஸ்தானி இசையில் அவர் பயிற்சியைத் தொடங்கினாலும், நாடகப் பாடல்கள், மராத்தி அபாங்ஸ், வசனங்கள் மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள் போன்ற இசையின் இலகுவான வடிவங்களில் இருந்த அவரது ஆர்வம் [1] இக்கலைகளில் அவரை சிறந்து விளங்க செய்தது.

பாட்டுத் தொழில்[தொகு]

தனது முப்பது வயதுகளில், பாலப்பா இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். கர்நாடகாவின் அனைத்து கிராமங்களிலும் சென்று தேசபக்திப் பாடல்களைப் பாடி மக்களுக்கு சுதந்திர தாகத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தார். அதன் பொருட்டு அவர் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.    சீனாவுடனான இந்தியாவின் போரின் போது அவர் தனது குடும்பத்தின் தங்கம் மற்றும் வெள்ளியை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கினார். வேளாண்மைத் துறையில் களப்பணியாளராகப் பணிபுரிந்து, கிராமம் கிராமமாகச் சென்று, விவசாய முறைகள், குடும்பக் கட்டுப்பாடு குறித்த பாடல்களைப் பாடி வந்தார். [1] இந்த நேரத்தில் பாலப்பா கன்னடத்தில் நவோதயா எழுத்தாளர்களான டி.ஆர்.பெந்த்ரே, பெடகேரி கிருஷ்ணசர்மா மற்றும் ஆனந்தகந்தா போன்றவர்களின் எழுத்தில் ஈர்க்கப்பட்டு அவர்களின் கவிதைகளின் அடிப்படையில் பாவகீதைகளைப் பாடத் தொடங்கினார்.

பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற மரபுகள் இரண்டையும் இணைத்து பாடும் பாலப்பாவின் பாடும் பாணி அவரது காலத்தவரிடையே தனித்துவமாக காணப்பட்டது. கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கும் சென்று நாட்டுப்புற பாடல்களை சேகரிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். மேலும் அவர் ஒருபோதும் நாட்டுப்புற பாடல்களை எழுதவில்லை மற்றும் நூற்றுக்கணக்கானவற்றை வாய்மொழியாகவே  அறிந்திருந்தார். பாலப்பா தனது பாடும் வாழ்க்கையில் தபேலா மற்றும் ஹார்மோனியத்தைத் தவிர வேறு எதையும் பயன்படுத்தியதில்லை. [1]

விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • வீரண்ணா டாண்டே எழுதிய பாலப்பா ஹுக்கேரி .

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலப்பா_ஹுக்கேரி&oldid=3711237" இருந்து மீள்விக்கப்பட்டது