உள்ளடக்கத்துக்குச் செல்

பாலசினார்

ஆள்கூறுகள்: 22°57′N 73°20′E / 22.95°N 73.33°E / 22.95; 73.33
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலசினார்
vadasinor
Vadsol
நகரம்
அடைபெயர்(கள்): Land of Dinosaurs
பாலசினார் is located in குசராத்து
பாலசினார்
பாலசினார்
குசராத்தில் அமைவிடம்
பாலசினார் is located in இந்தியா
பாலசினார்
பாலசினார்
பாலசினார் (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°57′N 73°20′E / 22.95°N 73.33°E / 22.95; 73.33
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம் மகிசாகர்
ஏற்றம்
72 m (236 ft)
மக்கள்தொகை
 (2014)
 • மொத்தம்44,000
மொழிகள்
 • அதாகாரப்பூர்வமாககுசராத்தி, இந்தி, உருது, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
388255
தொலைபேசி குறியீடு02690
வாகனப் பதிவுGJ 07 to GJ35
இணையதளம்http://vadsol.org/

பாலசினார் (Balasinor[1] (also referred to as Vadasinor) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் மஹிசாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது  பஷ்டூன் பழங்கிடியைச் சேர்ந்த பாபி வம்சத்துக்கு உட்பட்ட முன்னாள் சுதேச அரசு பகுதி ஆகும். இது ஜூனாகத் இராச்சியத்தில் இருந்து 7156 செப்டம்பர் 28 அன்று வெளியேறி உருவாக்கப்பட்டது.[2] 

வரலாறு

[தொகு]

பாலசினார் அரசானது 18 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. அதன் ஆட்சியாளர்கள் நவாப் பாபி என அழைக்கப்பட்டனர்.[3]

நிலவியல்

[தொகு]

பாலசினாரானது 22°57′N 73°20′E / 22.95°N 73.33°E / 22.95; 73.33, தேசிய நெடுஞ்சாலை எண் 47 மற்றும் குசராத் மநில நெடுஞ்சாலை எண் 2இல் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2001 ஆண்டைய இந்திய  மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[4] பாலசினாரின் மக்கள் தொகை 33,704 ஆகும்.

கல்வியறிவு விகிதமானது 70.5% என்றுள்ளது. மேலும் இங்கு 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் என்ற எண்ணிக்கையில் உள்ளனர். மக்கள் தொகையில் 12.6% பேர் 0 முதல் 6 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்திய விடுதலைக்குப் பிறகு இப்பகுதி மக்களில் ஒரு பிரிவினர் மும்பை போன்ற பெரு நகரங்களுக்குச் சென்று குடியேறினர். இதற்கு அடையாளமாக நகரத்தின் பிரதான வோரா வர்த்தகர் தெருவில் உள்ள பல கட்டிடங்கள் காலியாக உள்ளன.

சேம்பர்ஸ் கான்சிஸ் விவர குறிப்பின்படி 1914 இல் பாலசினார் நகர மக்கள் தொகையானது சுமார் 9,000 ஆகும்.

இந்திய ஜுராசிக் பார்க்

[தொகு]

1980 களின் முற்பகுதியில், இப்பகுதியில் மண்ணின் தன்மை,  கனிம வளங்கள் போன்றவற்றை ஆராயவந்தபோது,  டைனோசர் எலும்புகள் மற்றும் புதைபடிவங்கள் கண்டறியப்பட்டன.[5] இதையடுத்து அண்டை கிராமான ரையோலியில் இருந்து ஏராளமான டைனோசர் படிமங்கள், ஆயிரக்கனக்கான முட்டைகள் கண்டறியப்பட்டன. 2003 ஆம் ஆண்டு சிகாகோ பல்கலைக் கழக ஆய்வாளர்கள் இங்கு நடத்திய ஆய்வில் இங்கு ஓரு புதியவகை டோனோசரஸ் வாழ்ந்தாக இண்டறிந்தனர். அதற்கு ராஜாசரஸ் நார்மடென்ஸ் என்று பெயர் சூட்டினர். இதற்கு நர்மதையின் ராஜ விலங்கு என்று பொருளாகும். இந்த இன டைனோசரஸ் 30 அடி உயரம் கொண்டது என்றும், அது சுமார் 8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது என்றனர். இந்தப் பகுதியில் இந்த விலங்கின் முழுமையான மண்டை ஓடுகள் கைப்பற்றப்பட்டு இணைக்கப்பட்டன. இந்தியாவில் கண்டறியப்பட்ட முழுமையான டைனோசரஸ் மண்டை ஓடு இதுவே ஆகும். இப்போது இந்த எலும்புக்கூடு கொல்கத்தா அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது.[6]

உலகில் டைனோர் படிமங்கள் மிகுதியாக உள்ள பகுதிகளில் ஒன்றாக குஜராத்தின் இப்பகுதி உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இங்கு குறைந்தது சுமார் 13 வகையான டைனோசர் இனங்கள் வாழ்ந்திருக்கின்றன, 100 மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்த  அவை சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்டன.

இந்த டைனோசர்களின் புதைபடிவங்களைக் காண  குஜராத் அரசின் சுற்றுலா துறையானது டைனோசரஸ் பூங்காவைக் காண டைனோசரஸ் சுற்றுலாவுக்கு  அழைக்கிறது. இந்த புதை படிமங்களைப் பாதுகாக்க இந்தப் பூங்காவானது டைனோசரஸ் இளவரசி என அழைக்கப்படும் நவாப் வம்சத்தைச் சேர்ந்த இளவரசி ஆலியாவின் வழிகாட்டுதலில்  உருவாக்கப்பட்டது.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Balasinor Updates". New Updates and Current Affairs of Balasinor city. http://www.facebook.com/balasinormycity. 
  2. http://www.worldstatesmen.org/India_princes_A-J.html
  3. http://rulers.org/indstat1.html
  4. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  5. The dinosaur wonders of India's Jurassic Park. BBC News. 11 May 2010.
  6. "டைனோசரஸ் இளவரசி". தினத் தந்தி. செப்டம்பர் 8 2018. 
  7. Mehta, Neha Dixit,Vishal. "Meet India's Dinosaur Princess" (in en). Smithsonian. http://www.smithsonianmag.com/travel/balasinor-dinosaur-fossil-park-raiyoli-gujarat-india-princess-aaliya-sultana-babi-180957798/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலசினார்&oldid=2574481" இலிருந்து மீள்விக்கப்பட்டது