புகைக் கறுப்பு நெடும்பாறைத் தகைவிலான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாறை தகைவிலான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புகைக் கறுப்பு நெடும்பாறைத் தகைவிலான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. concolor
இருசொற் பெயரீடு
Ptyonoprogne concolor
(Sykes, 1832)
      Approximate range
வேறு பெயர்கள்

Hirundo concolor
Cotyle concolor

புகைக் கறுப்பு நெடும்பாறைத் தகைவிலான் (Dusky Crag-Martin, Hirundo concolor) 13 செ.மீ. புகைப் பழுப்பான இதன் வால் பிற தகைவிலான்களைப் போல நீண்டிராததாக சதுரமாக இருக்கும். மேல் உடம்பை விடமார்பும் வயிறும் பழுப்புக் குறைந்து மெல்லிதான கருப்புக் கோடுகளுடன் காணப்படும்.

காணப்படும் பகுதிகள், உணவு[தொகு]

மலைகளில் உயர்ந்து நிற்கும் செங்குத்தான பாறைகள், கோட்டைகள், பழங்காலக் கட்டிடங்கள், அணைக்கட்டுச் சுவர்கள் ஆகியவற்றில் இணையாகவோ சிறு குழுவாகவோ அலைந்து பறந்து, பறக்கும் வண்டுகளையும் சிறகுடைய பூச்சிகளையும் பிடித்துத் தின்னும். பறக்கும் போதும் சுவர்கள் மீது அமர்ந்து ஓய்வு கொள்ளும் போதும் சிட், சிட்,. என மென்குரலில் கத்தும்.[2]

இனப்பெருக்கம்[தொகு]

பாறை தகைவிலான் குஞ்சுகள் புனே இந்தியா

கூடு கட்டச் சேற்று மண் கிடைக்கும் பருவத்தில் சேற்றைக் கொண்டு குகைகள், தொங்கும் பாறை இடுக்குகள், பால வளைவுகள் ஆகியவற்றில் கூடமைத்து 2 முதல் 4 முட்டைகள் இடும். இமயமலைச் சாரல்களைச் சார்ந்து இனப்பெருக்கம் செய்யும் பாறைத் தகைவிலான் குளிர்காலத்தில் நீலகிரி, கொடைக்கானல் மலைப்பகுதிகளிளுக்கு வலசை வரக்காணலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Species factsheet Hirundo concolor". பன்னாட்டு பறவை வாழ்க்கை. Retrieved 4 April 2010
  2. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:103