பார்குதியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்குதியா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பார்குதியா

அண்ணாந்தலே, 1917

பார்குதியா (Barkudia) என்பது இந்தியாவிலேயே அதிகம் அறியப்படாத அரணை பேரினம் ஆகும். பல்லி வகையினைச் சார்ந்த இந்த அரணைகள், பகுதி-புதைந்து வாழும் விலங்காகும். இது இந்தியாவின் கிழக்கு கடற்கரையின் கடலோரப் பகுதிகளில் வாழ்கின்றன என்று கருதப்படுகிறது. ஒரு சில பழமையான வகைப்பாட்டியல் நூல்களைத் தவிர, இந்த பேரினத்தின் இயற்கை வரலாறு பற்றி எதுவும் தெரியவில்லை.[1]

இந்தப் பேரினத்தின் கீழ் இரண்டு சிற்றினங்கள் உள்ளன:[2]

  • பார்குதியா இன்சுலாரிசு அன்னாண்டலே, 1917 — மதராசு புள்ளி அரணை, சர்கார் கடற்கரையில் காணப்படுகிறது (மாதிரி இனங்கள்)
  • பார்குதியா மெலனோசுடிக்டா (ஷ்னெய்டர், 1801) — விசாகப்பட்டினம் காலில்லா அரணை, ரஸ்ஸலின் கால் இல்லாத அரணை, சர்கார் கடற்கரையின் சில பகுதிகளில்

மேற்கோள்கள்[தொகு]

  1. Das, I. (1999). "Anguis melanostictus SCHNEIDER, 1801, a valid species of Barkudia (Sauria: Scincidae) from southeastern India.". Asiatic Herpetological Research 8: 13–17. 
  2. http://reptile-database.reptarium.cz/advanced_search?submit=Search&genus=Barkudia
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்குதியா&oldid=3753701" இலிருந்து மீள்விக்கப்பட்டது