பாரவி
பாரவி (Bharavi) (IAST: Bhāravi, சமக்கிருதம்: भारवि) கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமஸ்கிருத மொழி கவிஞர் ஆவார். கிபி 634ம் ஆண்டின் சாளுக்கிய கல்வெட்டுக் குறிப்பில், கவி பாரவி கிராதார்ஜுனியம் எனும் காவியத்தை படைத்தவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[1] பாரவி, தென்னிந்தியாவின் மேலைக் கங்கர் மன்னர் கொங்கணி வர்மன்-I மற்றும் பல்லவ மன்னர் சிம்மவிஷ்ணு காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற சமஸ்கிருத மொழி கவிஞர் ஆவார்.
பெயர்க் காரணம்
[தொகு]கவிஞர் பாரவி தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் எனக்கருதப்படுகிறது.[2] சமசுகிருத மொழியில் பாரவி என்பதற்கு சூரிய ஒளி எனப்பொருளாகும்.[3]
கிராதார்ஜுனியம்
[தொகு]மகாபாரத்தின் வன பருவத்தில், அத்தியாயம் 38 முதல் 41 முடிய [4], சிவனிடமிருந்து பாசுபதம் எனும் ஆயுதம் பெற, அருச்சுனன் செய்த கடும் தவம், வேடன் வேடம் பூண்ட சிவனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையே நடந்த போர்கள், உரையாடல்கள், வரங்கள் குறித்து, கவிஞர் பாரவி, 18 காண்டங்கள் கொண்ட கிராதார்ஜுனியம் [5] எனும் சமஸ்கிருத காவியத்தில் சிறப்பாக விளக்குகிறார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gaurīnātha Śāstrī 1987, ப. 80
- ↑ Encyclopædia Britannica
- ↑ D. D. (Dhruv Dev). Sharma (2005), Panorama of Indian anthroponomy, Mittal Publications, p. 117, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8324-078-9
- ↑ அர்ஜுனனின் கடும் தவம் - வனபர்வம் பகுதி 38
- ↑ 5.0 5.1 M.P. Singh (2002), Encyclopaedia of teaching history, Anmol <Publications Pvt. Ltd., p. 297, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-261-1243-2