உள்ளடக்கத்துக்குச் செல்

பாரத் கலா பவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரத் கலா பவன்
भारत कला भवन
பாரத் கலா பவன் முதன்மைக்கட்டடம்
பாரத் கலா பவன் is located in Varanasi district
பாரத் கலா பவன்
வாரணாசி மாவட்டத்தில் அருங்காட்சியகத்தின் அமைவிடம்
நிறுவப்பட்டதுசனவரி 1, 1920 (1920-01-01)
அமைவிடம்பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி, இந்தியா India
ஆள்கூற்று25°16′17″N 82°59′46″E / 25.271490°N 82.995994°E / 25.271490; 82.995994
இயக்குனர்பேரா. அஜய் குமார் சிங்
மேற்பார்வையாளர்டாக்டர் அனில் சுமார் சிங்
வினோத் குமார்
டாக்டர் டி.பி. சிங்
டாக்டர் பிரியங்கா சந்திரா
தீபக் பரதன் ஆலத்தூர்
உரிமையாளர்பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
வலைத்தளம்Official website

பாரத் கலா பவன் (Bharat Kala Bhavan) (இந்தி: भारत कला भवन) என்பது இந்தியாவின் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழக அருங்காட்சியகம் ஆகும். இந்தியக் கலை மற்றும் பண்பாடு தொடர்பான அறிவைப் பரப்புவதில் இது ஒரு முக்கியமான கருவியாக இருந்து செயலாற்றி வருகிறது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் வாரணாசி நகரத்தில் இது ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக அமைந்தள்ளது.

வரலாறு

[தொகு]

பாரத் கலா பவன் என்ற அமைப்பிற்கான கருவானது, வாரணாசி நகரில் கோடோவ்லியா என்னும் இடத்தில் 1 ஜனவரி 1920 ஆம் நாளன்று பாரதிய லலித் கலா பரிஷத் என்ற ஒரு பிரிவாக நிறுவப்பெற்ற வகையில் உருப்பெற்றது. 1920 ஆம் ஆண்டுக்கும் 1962 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், ஜவஹர்லால் நேரு 1950 ஆம் ஆண்டில் தற்போதுள்ள அருங்காட்சியகத்திற்குரிய கட்டிடத்திற்கான அடித்தளம் அமைப்பதற்கு முன்பு வரை, அருங்காட்சியகத்தின் சேகரிப்புகள் வாரணாசி நகரில் பல இடங்களுக்கு மாற்றி அமைக்கப்பட்டது. 1962 ஆம் ஆண்டில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அருங்காட்சியகம் அதன் தற்போதைய இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. [1] [2] மகாத்மா காந்தி பாரத் கலா பவனுக்கு மூன்று முறை வருகை தந்துள்ளார். அவருடைய மூன்றாவது மற்றும் இறுதி வருகையின் போது அவர் "संग्रह बहुत अच्छा है" ("சேகரிப்பு மிகவும் நன்றாக உள்ளது") என்று தன் கருத்துகளை அங்கு பொறித்தார்.

மைல்கற்கள்

[தொகு]

பாரத் கலா பவனத்தின் மைல்கற்களாக பாரதிய லலித் கலா பரிஷத் நிறுவப்படல் (1920), பாரதிய லலித் கலா பரிஷத் கோடோவ்லியாவிலிருந்து மத்திய இந்து சிறுவர் பள்ளிக்கு மாற்றப்படல் (1926), ரவீந்திர நாத் தாகூர் (முதல் தலைவர்) கலை மற்றும் கைவினைகளில் கவனம் செலுத்த முடிவு செய்தல் (1929), பாரதிய லலித் கலா பரிஷத்தை காஷி நகரி பிரச்சாரினி சபாவுக்கு மாற்றம் செய்த வகையில் பாரதிய கலா பவன் (இந்திய கலை அருங்காட்சியகம்) என்று பெயர் மாற்றம் பெறல் (1929), காஷி நகரி பிரச்சாரினி சபாவில் பாரத் கலா பவனை பேராசிரியரான ஆர்தேந்திர கூமர் கங்கோலி முறையாக திறந்து வைத்தல் (1930), வெள்ளி விழா (1945), லண்டனில் நடைபெற்ற கண்காட்சிகளுக்கு கடன் அடிப்படையில் கலைப் பொருள்களை வழங்கல் (1947), நகரி பிரச்சாரினி சபாவிலிருந்து பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள மாளவியா பவனுக்கு சேகரிப்புகள் இடம் மாற்றம் பெறல் (1950), தற்போதைய கட்டிடத்திற்கான அடிக்கல்லை ஜவஹர்லால் நேரு நாட்டல் (1950), ஜவஹர்லால் நேருவால் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்படல் (1962), பொன் விழா (1970), பிரதாப் சந்திர சுந்தரால் மேற்குப் பகுதிக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்படல் (1977), பத்ம விபூஷன் ராய் கிருஷ்ணதாச காலமாதல் (1980), ஆலிஸ் போனர் கலைக்கூடம் திறப்பு விழா (1990), பவள விழா (1995), மகாமனா பண்டிதர் மதன் மோகன் மாளவியாவின் 150 வது பிறந்த நாளன்று, அருங்காட்சியகம் ஒரு ஆவணப்படத்தை தயாரித்து அவரைப் பற்றிய நூலை வெளியிடல் (2011) ஆகியவற்றைக் கூறலாம்.

சேகரிப்புகள்

[தொகு]

பாரத் கலா பவனில் கலைப்பொருட்கள், பௌத்த மற்றும் இந்து சிற்பங்கள், படங்கள், கையெழுத்துப் பிரதிகள், முகலாயர் கால சிறிய வடிவிலான கலைப்பொருள்கள், ஓவியங்கள், ப்ரோகேட் ஜவுளிகள், சமகால கலை வடிவங்கள் மற்றும் 1ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த வெண்கல சிலைகள் ஆகியவை உள்ளன. மேலும் மட்பாண்டங்கள், மனநல கைவினைப்பொருட்கள், தந்த பொருட்கள், நகைகள், சுடுமண் மணிகள் மற்றும் குஜராத்தி, ராஜஸ்தானி மற்றும் பஹாரி பாணியில் அமைந்த சிறிய வகையிலான ஓவியங்கள் ஆகியவையும் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பாரத் கலா பவனின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கலைப்பொருள்களின் மொத்த எண்ணிக்கை 1,04,376 ஆகும். [3] [4]

பாரத் கலா பவனில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள யானை மீது யக்ஷி சிற்பம்

காட்சிப் பொருள்கள்

[தொகு]

பிரிவுகளில் காட்சிப்பொருள்கள்

[தொகு]
பிரிவு கவுண்ட்
தொல்பொருள் பிரிவு 24.561
பனாரஸ் பிரிவு 705
அலங்காரக் கலை பிரிவு 1,169
பரிமாற்றம் 76
இலக்கியப் பிரிவு 27.336
இதர பிரிவுகள் 1,605
நாணயவியல் பிரிவு 33.236
ஓவியப் பிரிவு 10.625
தபால்தலை பிரிவு 2.941
ஜவுளிப் பிரிவு 1,747
கம்பளி ஜவுளித் தொகுதிகள் 375
மொத்தம் 104.376

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "History". Museum website. http://bhu.ac.in/kala/history.htm. பார்த்த நாள்: Jun 2015. 
  2. "Milestones". Museum website. http://bhu.ac.in/kala/Milestone_bkb.htm. பார்த்த நாள்: Jun 2015. 
  3. "Collection". Museum website. http://bhu.ac.in/kala/collection.htm. பார்த்த நாள்: Jun 2015. 
  4. "Bharat Kala Bhavan". Eastern Uttar Pradesh tourism website இம் மூலத்தில் இருந்து 2015-06-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150615061606/http://www.easternuptourism.com/Bharat-Kala-Bhawan.jsp. பார்த்த நாள்: Jun 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரத்_கலா_பவன்&oldid=3478584" இலிருந்து மீள்விக்கப்பட்டது