பாம்போலிம்
பாம்போலிம் Bambolim | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கோவா |
மாவட்டம் | வடக்கு கோவா |
ஏற்றம் | 1 m (3 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 5,319 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | கொங்கணி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
பாம்போலிம் (Bambolim) என்பது இந்தியாவின் கோவா மாநிலத்தின் வடக்கு கோவா மாவட்டத்திலுள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊராகும். இம்மாநிலத்திலுள்ள ஒரேயொரு எதிர்முறை மருத்துவக் கல்லூரியான கோவா மருத்துவக் கல்லூரி இங்குதான் அமைந்துள்ளது.
புவியியல் அமைப்பு
[தொகு]15.45°வடக்கு மற்றும் 73.85°கிழக்கு [1] என்ற அடையாள ஆள்கூறுகளில் பாம்போலிம் நகரம் பரவியுள்ளது. மேலும் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 1 மீட்டர் உயரத்தில் இந்நகரம் உள்ளது.
மக்கள் தொகையியல்
[தொகு]இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [2] பாம்போலிம் நகரின் மொத்த மக்கள் தொகை 5,319 ஆகும். இம்மக்கள் தொகையில் 64% பேர் ஆண்கள் மற்றும் 36% பேர் பெண்கள் ஆவர். பாம்போலிம் நகரின் கல்வியறிவு சதவீதம் 82% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். கல்வியறிவு பெற்ற மக்களில் ஆண்கள் 69% எண்னிக்கையும் பெண்கள் 31% எண்ணிக்கையிலும் காணப்பட்டனர். மக்கள் தொகையில் 10% பேர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Falling Rain Genomics, Inc - Bambolim
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.