பாம்புகளின் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாம்புகளின் தீவு என்றே பிரேசிலின் இல்காடா குயீமடா கிராண்டு அழைக்கப்படுகிறது. பிரேசிலின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள இந்த தீவு காடுகளும், பாறைகளும் நிறைந்தது. இங்குள்ள அரியவகைப் பாம்புகளைப் பார்ப்பதற்காக, தீவுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை பிரேசில் அரசு தடை செய்துள்ளது. இருப்பினும், ஓய்வு எடுப்பதற்காக இந்த தீவில் கரையொதுங்கும் மீனவர்கள் பலர், பாம்பு கடிக்குப் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. [1]

  1. https://en.wikipedia.org/wiki/Ilha_da_Queimada_Grande
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்புகளின்_தீவு&oldid=3512664" இலிருந்து மீள்விக்கப்பட்டது