உள்ளடக்கத்துக்குச் செல்

கெய்மாதா கிராண்டி தீவு

ஆள்கூறுகள்: 24°29′S 46°41′W / 24.483°S 46.683°W / -24.483; -46.683
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெய்மாதா கிராண்டி தீவு
Nickname: பாம்புத் தீவு
பாம்புத் தீவின் வான்வெளிக் காட்சி
கெய்மாதா கிராண்டி தீவு is located in பிரேசில்
கெய்மாதா கிராண்டி தீவு
கெய்மாதா கிராண்டி தீவு
பிரேசிலில் அமைவிடம்
புவியியல்
அமைவிடம்அத்திலாந்திக்குப் பெருங்கடல்
ஆள்கூறுகள்24°29′S 46°41′W / 24.483°S 46.683°W / -24.483; -46.683
பரப்பளவு430,000 m2 (4,600,000 sq ft)
உயர்ந்த ஏற்றம்206 m (676 ft)
நிர்வாகம்
மாநிலம்சாவோ பாவுலோ
மாநகரசபைஇத்தன்காயெம்
மக்கள்
மக்கள்தொகை0
மேலதிக தகவல்கள்
Administered by Chico Mendes Institute for Biodiversity Conservation (ICMBio)

கெய்மாதா கிராண்டி தீவு (Ilha da Queimada Grande) அல்லது பாம்புத் தீவு (Snake Island) ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஒரு பாம்பு எனும் வீதத்தில் கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த பாம்புகள் அதிகம் வாழுமிடமாகும். இது பிரேசிலின் சாவோ பாவுலோ மாநிலத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. பல்வேறு காலநிலைகளை கொண்ட இத்தீவில் பாறைகள் சூழ்ந்த மழைக்காடுகள் காணப்படுகின்றன. மனிதர்கள் வாழ தகுதியற்ற இத்தீவில் சில ஆராய்ச்சியாளர்களும் பிரேசில் ராணுவமும் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்[1][2][3]

அதிக பாறைகள் கொண்ட நிலப்பரப்பாகவும், வெப்ப மண்டல பகுதியாகவும் இருப்பதால் இந்த தீவில் மனிதனோ அல்லது வேறு பாலூட்டிகளோ வாழ முடியாத நிலை உள்ளது. இதனால் தன்னை வேட்டையாடவோ கொல்லவோ எந்த உயிரினமும் இல்லாத காரணத்தால் பாம்புகள் தங்கள் இனத்தை அந்த தீவில் பெருக்கி அதை தனக்கான தீவாக மாற்றியுள்ளன.

அந்த தீவுக்கு ஓய்வெடுக்க வரும் இடம்பெயரும் பறவைகளை அந்த பாம்புகள் உணவாக கொள்கின்றன. அந்த தீவுக்கே உரிய தனித்துவமான விஷயமாக ஒரு பாம்பு இனம் உள்ளது. அதன் பெயர் கோல்டன் லான்ஸ்ஹெட்ஸ். இந்த பாம்பு இனம் இல்ஹா தீவை தவிர உலகில் வேறு எங்கும் இல்லை. பூமியிலுள்ள முக்கியமான விஷ ஜந்துக்களில் இந்த பாம்பும் முக்கியமானதாக உள்ளது.

கோல்டன் லான்ஸ்ஹெட் என்பது லான்ஸ்ஹெட் என்னும் பாம்பு இனத்தின் ஒரு பகுதியாகும். உடலுக்குள் சென்று வேகமாக செயல்படும் விஷத்தை இந்த பாம்புகள் கொண்டுள்ளன. அதனுடன் தொடர்புடைய இனமான ஜரராகா என்னும் இனத்தை விட கோல்டன் லான்ஸ்ஹெட் ஐந்து மடங்கு சக்தி வாய்ந்த விஷத்தை கொண்டது.

இதனுடைய சக்தி வாய்ந்த விஷம் சதை பகுதியை தாண்டி சென்று ரத்தபோக்கில் கலந்து உடலுறுப்பை செயலிலக்க செய்கிறது. கோல்டன் லான்ஸ்ஹெட் 70 சென்டிமீட்டர் வரை வளர கூடியது. ஆனால் அவற்றில் சில ஒரு மீட்டருக்கு மேல் வளரும் என்றும் கூறப்படுகிறது.

மனிதர்கள் செல்ல தடை:[தொகு]

பாம்புகளால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்கிற காரணத்தால் பிரேசில் அரசாங்கம் அந்த தீவுக்கு மனிதர்கள் செல்ல தடை விதித்துள்ளது. கோல்டன் லான்ஸ்ஹெட் பாம்பானது கொடிய விஷ ஜந்துவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதே போல அரிதான பாம்பு இனங்களை மனிதர்கள் கைப்பற்ற நினைப்பார்கள் என்பதால் அந்த தீவுக்கு பாதுக்காப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் பாம்புகளை காப்பாற்ற இப்படியெல்லாம் முயற்சிகள் எடுத்தப்போதிலும் சில சட்ட விரோத வேட்டைக்காரர்கள் பாம்புகளை பிடித்து கறுப்பு சந்தையில் விற்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

புராண கதை:[தொகு]

தீவை பற்றியும் அங்கு குடியிருந்தவர்கள் குறித்தும் புராணங்களில் கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்த பாம்புகள் கூட்டமாக சென்று அங்கே கலங்கரை விளக்கத்தை பாராமரித்தவரையும் அவரது குடும்பத்தையும் மொத்தமாக துடைத்து எறிந்ததாக கூறப்படுகிறது. அதே போல மூன்று மீனவர்கள் அங்கே உள்ள குளத்தில் பாம்புகளால் தாக்கப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

கோல்டன் லான்ஸ்ஹெட் பாம்பானது மிகவும் விஷத்தன்மை வாய்ந்த பாம்பு என அழைக்கப்பட்டாலும், அதிகாரபூர்வமான அந்த பாம்பால் தாக்கப்பட்டு எந்த இறப்பும் பதிவாகவில்லை. பெரும்பாலும் அந்த பாம்பு அந்த தீவில் மட்டுமே உள்ள இனம் என்பதாலும் இதை பற்றி பூமியில் வேறு எங்கும் தகவல் கிடைக்கவில்லை என்பதாலுமே மக்களுக்கு அந்த தீவு தடை செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதம்:[தொகு]

இந்த தீவுக்கு வருவது சட்ட விரோதமான மற்றும் ஆபத்தான செயலாகும். இந்த தீவுக்குள் வரவேண்டும் என்றால் அதற்கு பிரேசிலின் கடற்படையின் அனுமதி வேண்டும். அந்த பாம்புகள் ஒரு வேளை கடித்துவிட்டால் அவற்றிற்கான மாற்று மருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாவோ பாலோவினில் உள்ள புட்டாண்டே என்னும் நிறுவனத்தில் உள்ளது.

எனவே அங்கே ஒரு சின்ன பாம்பின் கடி கூட ஆபத்தானது. புட்டாண்டே நிறுவனம் கோல்டன் லான்ஸ்ஹெட்ஸை குறித்த ஆராய்ச்சி நோக்கத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இவை தனிப்பட்ட இனமாக உள்ளன. இதனால் இல்ஹா டா குய்மாடா கிராண்டே உலகின் மிகவும் ஆபத்தான தீவுகளில் ஒன்றாகவும் மனிதர்கள் வாழவே தகுதியற்ற தீவாகவும் பார்க்கப்படுகிறது.

உலகில் பல தீவுகள் இப்படி மனிதர்கள் வாழ தகுதியற்றதாக இருந்தாலும் பாம்புகளின் ஆதிக்கத்தால் மனிதர்கள் வாழ முடியாமல் போன தீவாக இல்ஹா டா குய்மாடா கிராண்டே உள்ளது.

அமைவிடம்[தொகு]

சாவோபவுலோ மாகாண கடற்பரப்பில் இருந்து  தோராயமாக 31 கிமீ தொலைவில் 430,00 சகிமீ பரப்பளவில் அமைந்துள்ளது கடற்பரப்பிலிருந்து 206 மீட்டர் உயரத்தில் உள்ள இத்தீவின் 20 சகிமீ பரப்பில் மழைக்காடுகள் சூழ்ந்துள்ளது 18.38 செல்சியஸ் முதல் 27.28 செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் இத்தீவின் ஆண்டின் சராசரி  மழையளவு 135.4 மில்லிமீட்டராகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Marques, Otavio A. V.; Kasperoviczus, Karina; Almeida-Santos, Selma M. (2013). "Reproductive Ecology of the Threatened Pitviper Bothrops insularis from Queimada Grande Island, Southeast Brazil". Journal of Herpetology 47 (3): 393–399. doi:10.1670/11-267. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1511. 
  2. Thomas, Emily (July 4, 2014). "Brazil's 'Snake Island' Is The Place Of Nightmares, We're Pretty Sure". Huff Post Science. TheHuffingtonPost. பார்க்கப்பட்ட நாள் October 24, 2015.
  3. "Exposição traz história da ilha que abriga única espécie de cobra no mundo" (DOC) (in போர்ச்சுகீஸ்). Secretaria De Comunicação Social, Prefeitura Municipal De Itanhaém. 2007. பார்க்கப்பட்ட நாள் 2016-09-20.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெய்மாதா_கிராண்டி_தீவு&oldid=3360799" இலிருந்து மீள்விக்கப்பட்டது