பானி மஜூம்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பானி மஜூம்தார்
பிறப்பு(1911-12-28)28 திசம்பர் 1911
பரீத்பூர், கிழக்கு வங்காளம்
இறப்பு16 மே 1994(1994-05-16) (அகவை 82)
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1938-1986

பானி மஜும்தார் (Phani Majumdar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு முன்னோடி திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளருமாவார். இவர் பாலிவுட்டில் பணியாற்றினார். [1] கே. எல். சைகல் நடித்த ஸ்ட்ரீட் சிங்கர் (1938) திரைப்படத்தில் இடம்பெற்ற பபூல் மோரா நைஹர் சூட்டோ ஜெயே என்ற பிரபலாமன பாடலுக்காக மிகவும் பிரபலமானவர். நடிகை மீனாகுமாரியின் ஆர்த்தி (1962), ஓன்ச் லோக் (1965) போன்ற படங்களுக்காகவும் இவர் அறியப்பட்டார். இவர் சிங்கப்பூரிலும் பணியாற்றினார். அங்கு இவர் மலாய் மொழியில் ஹாங்க் துவா (1955) என்ற படத்தை இயக்கியிருந்தார். இது 7வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தங்க கரடி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. [2]

தொழில்[தொகு]

1930களில் பிரேந்திரநாத் சிர்கார், கொல்கத்தாவில் நியூ தியேட்டர்ஸ் என்ற நிறுவனத்தை முன்னணி திரைப்பட இயக்குனர் பி.சி.பருவாவுடன் சேர்ந்து நிறுவியிருந்தார். அவர்களுடன் சேர்ந்து இந்த காலகட்டத்தில் தேவதாஸ் (1935) போன்ற படங்களை உருவாக்கினார். பின்னர், 1941இல் மும்பை சென்று பாம்பே டாக்கீஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அங்கு இவர் சுரையா, மொஹபத் (1943) சாந்தா ஆப்தே, அந்தோலன் (1951) ஆகியோரைக் கொண்டு தமன்னா (1942) என்ற படத்தை இயக்கினார். பஞ்சாபி மொழியில், மகதி (1961),மைதிலி மொழியில் கன்யாதான் (1965) ஆகிய படங்ளை இயக்கினார். [3] இவரது ஓன்ச் லோக் நடிகர் பெரோஸ் கானின் முதல் வெற்றியாகும். மேலும் இரண்டாவது சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.

பம்பாய் டாக்கீஸில் பணியாற்றுவதற்கு முன் பிரபல திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான சக்தி சமந்தாவுக்கு தமாஷா, பாத்பான், தோபி டாக்டர் போன்ற படங்களில் உதையாக பணிபுரிந்தார் . [4]

நடிகை லீலா தேசாயின் சகோதரி மோனிகா தேசாயை மணந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பானி_மஜூம்தார்&oldid=3112399" இலிருந்து மீள்விக்கப்பட்டது