பாட்டா நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாட்டா நிறுவனம்
வகைதனியார் நிறுவனம்
நிறுவனர்(கள்)தாமஸ் பாட்டா, அன்டோனின் பாட்டா (சகோதரர்) & அன்னா (சகோதரி)
தலைமையகம்லோசான், சுவிட்சர்லாந்து
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுவதும்
முக்கிய நபர்கள்கிரகம் அல்லன் (தலைவர்)[1][2] & சந்தீப் கட்டாரியா (தலைமை நிர்வாக அதிகாரி)[3]
தொழில்துறைகாலணிகள் உற்பத்தி & விற்பனை நிறுவனம்
உற்பத்திகள்காலணிகள், இடுப்புவார், விளையாட்டு வீரர்களுக்கான காலணிகள் முதலியன
உரிமையாளர்கள்பாட்டா குடும்பம்
இணையத்தளம்https://bata.com/ & https://thebatacompany.com/

பாட்டா நிறுவனம் (The Bata Corporation (சுருக்கமாக பாட்டா) பலவகையான காலணிகள் மற்றும் இடுப்புவார் போன்ற தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் சில்லறையாக விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனம் ஆகும். பாட்டா நிறுவனத்தை ஆத்திரியா-அங்கேரி (தற்போது செக் குடியரசு) நாட்டின் அன்டோனின் பாட்டா என்பவர் 21 செப்டம்பர் 1894 அன்று நிறுவினார். தற்போது இவரது குடும்பத்தினர் தொடர்ந்து இந்நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். பாட்டா நிறுவனத்தின் தலைமையகம் சுவிட்சர்லாந்து நாட்டின் லோசான் நகரத்தில் அமைந்துள்ளது. தற்போது பாட்டா நிறுவனத்தின் தலைவராக கிரகம் அல்லன் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக சந்தீப் கட்டாரியாவும் செயல்படுகின்றனர்.

உலகின் முன்னணி காலணி உற்பத்தி நிறுவங்களில் ஒன்றான பாட்டா நிறுவனம் ஆண்டிற்கு 150 மில்லியன் ஜோடி காலணிகளை விற்பனை செய்கிறது.[4] உலகம் முழுவதும் 18 நாடுகளில் காலணி உற்பத்தி தொழிற்சாலைகளும், 70 நாடுகளில் பாட்டாவின் 5,300க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களும் உள்ளது. உலகம் முழுவதும் பாட்டா நிறுவனத்தில் 32,000 பேர் பணியாற்றுகின்றனர்.

கடந்த 125 ஆண்டுகளுக்கும் மேலாக காலணி உற்பத்தி தொழில் செய்துவரும் பாட்டா குடும்பத்தினர், பாட்டா நிறுவனத்தை பாட்டா, பாட்டா தொழிற்சாலைகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான காலணிகள் & சட்டைகள்[5] என மூன்று அலகுகளாக பிரித்துள்ளனர். பாட்டா நிறுவனத்தில் பாட்டா, நார்த் ஸ்டார், பவர், பப்பிள்கம்மர் மற்றும் சாண்டக் என 20 வகையான பெயர்களில் காலணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

வரலாறு[தொகு]

தாமஸ், அன்டோனின் மற்றும் அன்னா பாட்டா

பாட்டா நிறுவனம் தாமஸ் பாட்டா, அன்டோனின் பாட்டா (சகோதரர்) & அன்னா பாட்டா (சகோதரி) ஆகியவர்களால் 21 செப்டம்பர் 1894 அன்று 10 தொழிலாளர்களுடன் காலணி உற்பத்தியை ஆத்திரியா-அங்கேரி (தற்போது செக் குடியரசு) நாட்டின் சுலீன் நகரத்தில் தொடங்கப்பட்டது.[6]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

பாட்டா நிறுவனம் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்டா_நிறுவனம்&oldid=3781791" இருந்து மீள்விக்கப்பட்டது