உள்ளடக்கத்துக்குச் செல்

பன்னாட்டு வணிக நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்னாட்டு வணிக நிறுவனம் (International business company) என்பது பல நாடுகளில் இயங்கி வரும் நிறுமங்கள் ஆகும்.எந்த நாட்டில் அது உருவாக்கப்பட்டதோ அதைவிட கூடுதலாகப் பல நாடுகளில் கூட்டுறுவாக்கப்படுவதாகும்.உலக அளவில் “பலமிக்கவன்” அல்லது “உலக வியாபாரம்” எனப்படும்.ஒரு நாட்டில் வியாபாரத்தை தொடங்கி இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட நாடுகளில் கூட்டுறுவாக்கப்பட்டு மேலாண்மை செய்யப்படும் நிறுமம், பன்னாட்டு நிறுமம் ஆகும்.[1]

சிறப்பியல்புகள்

[தொகு]

ஒரே சமயத்தில் பல நாடுகளில் செயல்படும். உலகளவில் பெரிய அளவில் செயல்படும். அந்தந்த நாடுகளிலுள்ள கச்சாப்பொருள், பணியாட்கள் மற்றும் சந்தையைப் பயன்படுத்திக் கொண்டு போக்குவரத்து செலவு குறைக்கப்படும்.

பிற செய்திகள்

[தொகு]

உலக அளவில் 500 முதல் 700 பன்னாட்டு நிறுமங்கள் உள்ளன. இதில் சரிபாதி அமெரிக்காவிலும் மீதி வெளியிலும் காணப்படுகின்றன. இவை அயல்நாட்டு முதலீட்டை நேரடியாக கொண்டுள்ளன. வளரும் நாடுகளில் வேலைவாய்ப்பை உருவாக்குகின்றன. வளரும் நாடுகள் இயற்கை வளங்களைப் பயன்படுத்த உதவுகின்றன.

உதாரணங்கள்

[தொகு]
  • யூனி லீவர் லிமிடெட்-பிரித்தானிய நிறுமம்.
  • யூனியன் கார்பைடு-அமெரிக்க நிறுமம்.
  • இன்டர் நேஷனல் பிசினஸ் மெசின்-அமெரிக்க நிறுமம்.
  • கோகோ கோலா கழகம்-அமெரிக்க நிறுமம்
  • பிலிப்ஸ்-டச்சு நிறுமம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "What Are the Implications of Belize's New IBC Legislation?". Biz Latin Hub (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-04-28. பார்க்கப்பட்ட நாள் 2020-05-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னாட்டு_வணிக_நிறுவனம்&oldid=3925339" இலிருந்து மீள்விக்கப்பட்டது