பாஞ்சாலங்குறிச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பாஞ்சாலங்குறிச்சி தமிழ் நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராகும்.

வரலாறு[தொகு]

ஆதியில் தூத்துக்குடி மாவட்டம் சாலிக்குளத்தை அடுத்துள்ள காட்டில் வேட்டையாடச் சென்றனர் கட்டபொம்மனின் மூதாதையர். அங்கு குறிப்பிட்ட இடத்தில் முயல் திடீரென்று வேட்டை நாய்களை எதிர்த்து விரட்டத் துவங்கியது.[சான்று தேவை] வீரமூட்டும் சக்தி அந்த நிலத்திற்கு இருப்பதை அறிந்து வியந்து, தமது பாட்டன் பாஞ்சாலன் நினைவாக பாஞ்சாலக்குறிச்சி கோட்டை என்று பெயரிட்டு கோட்டை கொத்தளங்களுடன் தலைநகர் அங்கு அமைக்கப்பட்டது.

பாஞ்சாலக்குறிச்சி மன்னர் வீரபாண்டிய கட்டபொம்முக்கு தலைமை அமைச்சராக இருந்தவர் தானாபதியா பிள்ளை., பிள்ளைவாள் அவர்களின் சொந்த ஊர் வீரப்பாண்டியபுரம் என்று அழைக்கப்படும் ஒட்டப்பிடாரம் ஆகும்,

இவர் சைவ வெள்ளாளர் குலத்தை சார்ந்தவர். தானாபதியா பிள்ளை அவர்களின் வம்சாவளிதான் தற்பொழுது ஒட்டப்பிடாரத்தில் குடியிருக்கும் சைவ பிள்ளைமார் எனப்படும் சைவ வெள்ளாளர்கள்

ஒட்டப்பிடாரத்தில் உள்ள ஸ்ரீஉலகாண்டீஸ்வரி அம்மன் கோவில் ஆனது இந்த சைவ வெள்ளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்டதாகும்

தானாபதியா பிள்ளை அவர்களின் வம்சாவழியினருக்கும் மற்றும் வ.உ.சிதம்பரம் பிள்ளை வம்சாவளியினருக்கும் சொந்தமானது மற்றும் குலத்தெய்வம் இந்த ஒட்டப்பிடாரத்தில் குடியிருக்கும் ஸ்ரீஉலகாண்டீஸ்வரி அம்மன்


பாஞ்சாலங்குறிச்சி ஊருக்கு மிக அருகாமையில்தான் கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் பிறந்த ஒட்டப்பிடாரம் உள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஞ்சாலங்குறிச்சி&oldid=2514236" இருந்து மீள்விக்கப்பட்டது