பாங்குரா மாவட்ட சாரதாமணி மகிளா மகாவித்யாபீடம்

ஆள்கூறுகள்: 23°14′25″N 87°03′12″E / 23.2403954°N 87.0533101°E / 23.2403954; 87.0533101
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாங்குரா மாவட்ட சாரதாமணி மகிளா மகாவித்யாபீடம்
வகைஇளங்கலைக்கான பொதுக்கல்லூரி
உருவாக்கம்1973; 51 ஆண்டுகளுக்கு முன்னர் (1973)
சார்புபாங்குரா பல்கலைக்கழகம்
தலைவர்திரு அரூப் கான்
முதல்வர்முனைவர்.சித்தார்த்தா குப்தா
அமைவிடம்
நூட்டன்சாட்டி சாலை
, , ,
722201
,
23°14′25″N 87°03′12″E / 23.2403954°N 87.0533101°E / 23.2403954; 87.0533101
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்https://portal.bzsmcollege.org/index.php
பாங்குரா மாவட்ட சாரதாமணி மகிளா மகாவித்யாபீடம் is located in மேற்கு வங்காளம்
பாங்குரா மாவட்ட சாரதாமணி மகிளா மகாவித்யாபீடம்
Location in மேற்கு வங்காளம்
பாங்குரா மாவட்ட சாரதாமணி மகிளா மகாவித்யாபீடம் is located in இந்தியா
பாங்குரா மாவட்ட சாரதாமணி மகிளா மகாவித்யாபீடம்
பாங்குரா மாவட்ட சாரதாமணி மகிளா மகாவித்யாபீடம் (இந்தியா)


பாங்குரா மாவட்ட சாரதாமணி மகிளா மகாவித்யாபீடம், [1] என்பது இந்தியாவின் மேற்கு வங்கத்தின் பாங்குரா மாவட்டத்தில் 1973 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு மகளிர் கல்லூரி ஆகும். பாங்குரா மாவட்டத்தில் உள்ள ஒரே மகளிர் கல்லூரியான[2] இதில் கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் இளங்கலை படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இக்கல்லூரி பாங்குரா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

பாங்குரா மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இளம் பெண்களின் உயர் கல்வி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்ட இக்கல்லூரி தொடக்கத்தில்பர்த்வான் பல்கலைக்கழகத்தின் கீழ் அரசு நிதியுதவி பெறும் கல்லூரியாக நிறுவப்பட்டது. கொல்கத்தாவைச் சார்ந்த அன்னை சாரதா தேவியின் பெயரை பெருமைப்படத்தும் வகையில் கல்லூரிக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. [3]

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரி, 2007 ஆம் ஆண்டில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் (NAAC) பி+ தரத்தை பெற்றாலும், 2015 ஆம் ஆண்டில் 'ஏ' தகுதியைப் பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளது. [4] மேலும் இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்டுள்ள தன்னாட்சி அமைப்பாகும்.[5]

துறைகள்[தொகு]

அறிவியல் பிரிவு[தொகு]

  • கணிதம்
  • இயற்பியல்
  • வேதியியல்

கலைப்பிரிவு[தொகு]

  • பெங்காலி
  • ஆங்கிலம்
  • சமஸ்கிருதம்
  • வரலாறு
  • நிலவியல்
  • அரசியல் அறிவியல்
  • தத்துவம்
  • பொருளாதாரம்
  • இசை
  • கல்வி

நூலகம்[தொகு]

இக்கல்லூரியில், நல்ல காற்றோட்டத்துடனும், வெளிச்சத்துடனும், வசதியான இருக்கைகளுடன் 2000 சதுர அடி பரப்பளவில் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட நூலகம் உள்ளது. இந்த நூலகத்தில் 27,376 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்படுள்ளன, மேலும் 100 க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் மற்றும் பத்திரிகைகளுக்கு சந்தா செலுத்துகின்றன. இந்த நூலகம் திறந்த அணுகல் முறையைப் பின்பற்றுகிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Colleges in West Bengal, University Grants Commission பரணிடப்பட்டது 16 நவம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்
  2. "Bankura Zilla Saradamani Mahila Mahavidyapith, Bankura". Archived from the original on 20 June 2012. பார்க்கப்பட்ட நாள் 18 September 2012.
  3. {{cite web}}: Empty citation (help)
  4. "Institutions Accredited / Re-accredited by NAAC with validity" (PDF). Archived from the original (PDF) on 12 May 2012. பார்க்கப்பட்ட நாள் 22 February 2012.
  5. "NAAC அங்கீகாரம் பெற்ற 'A' கிரேடு கல்லூரி".
  6. "Bankura Zilla Saradamani Mahila Mahavidyapith, Bankura". Archived from the original on 20 June 2012. பார்க்கப்பட்ட நாள் 18 September 2012.