பாக்கித்தான் உச்ச நீதிமன்ற கட்டடம்

ஆள்கூறுகள்: 33°43′33″N 73°06′01″E / 33.7257°N 73.1002°E / 33.7257; 73.1002
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்கித்தான் உச்ச நீதிமன்ற கட்டடம்
Supreme Court Building
Map
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிநியோகிளாசிக்கல் கட்டிடக்கலை, நவீன கட்டிடக்கலை
இடம்44000 பாக்கித்தான், இசுலாமாபாத்து, அரசியலமைப்பு அவென்யூ
ஆள்கூற்று33°43′33″N 73°06′01″E / 33.7257°N 73.1002°E / 33.7257; 73.1002
கட்டுமான ஆரம்பம்1960s
நிறைவுற்றது1993
செலவுரூ. 170 மில்லியன்
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)கென்சோ தாங்கே
பொறியாளர்தலைநகர மேம்பாட்டு ஆணையம், இசுலாமபாத்து
பாக்கித்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம்
சிமென்சு பொறியியல் நிறுவனம்.

பாக்கித்தான் உச்ச நீதிமன்ற கட்டடம் (Supreme Court of Pakistan Building) பாக்கித்தான் நாட்டு நீதித்துறையின் முக்கிய கட்டடமாகும். பாக்கித்தான் நாட்டின் இசுலாமாபாத்து நகரத்தின் 44000 அரசியலமைப்பு அவென்யூ என்ற முகவரியில் அமைந்துள்ளது.[1] 1993 ஆம் ஆண்டு இக்கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. தெற்கில் பிரதமர் அலுவலகம் மற்றும் வடக்கே சனாதிபதி மாளிகை மற்றும் நாடாளுமன்ற மாளிகை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

பிரபலமான சப்பானிய கட்டட வடிவமைப்பாளர் கென்சோ தாங்கே வின் [2] ஆலோசனையுடன் கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தலைநகர மேம்பாட்டு ஆணையமும் சிமன்சு பொறியியல் நிறுவனமும் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டன.[3] முக்கியமான அரசாங்க கட்டிடங்களின் கட்டிடக்கலையில் நவீனத்துவத்தை இணைப்பதற்கான பாக்கித்தான் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த கட்டிடம் இருந்தது. இதற்காக பல உலகப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர்கள் அழைக்கப்பட்டனர். தாங்கே, முதலில் அழைப்பை நிராகரித்த பிறகு, இறுதியில் பங்கேற்க ஒப்புக்கொண்டார்.[2]

புகைப்பட காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Google. "The address and location of the Supreme Court of Pakistan". Google. Google map inc. பார்க்கப்பட்ட நாள் 5 January 2014. {{cite web}}: |last= has generic name (help)
  2. 2.0 2.1 Goran Therborn, Cities of Power: The Urban, The National, The Popular, The Global (2017), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1784785474.
  3. Govt. Pakistan. "Supreme Court Building". Govt. Pakistan. Supreme Court of Pakistan press. Archived from the original on 1 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 5 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

புற இணைப்புகள்[தொகு]