பாக்கித்தான் பிரதமர் அலுவலகம்
பிரதமர் அலுவலகம், பாக்கித்தான் பிரதமர் பிரதானமாக பணிபுரியும் இடம் | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1947 |
ஆட்சி எல்லை | பாக்கித்தான் |
அமைப்பு தலைமை |
|
வலைத்தளம் | Prime Minister's Office |
பாக்கித்தான் பிரதமர் அலுவலகம் (Prime Minister's Office) பாகித்தானின் பிரதமர் பணிபுரியும் முதன்மை பணியிடமாகும். பாக்கித்தான் பிரதமரின் முதன்மை செயலாளர் இவ்வலுவலகத்தின் தலைவராக உள்ளார். தற்போது அசம் கான் பாக்கித்தான் பிரதமரின் முதன்மை செயலாளராக பதவியில் உள்ளார். பிரதம மந்திரிசபைக்கான கொள்கைகளை வகுத்தல், அதன் அமைச்சரவை கூட்டங்களை நடத்துதல் மற்றும் அமைச்சரவையின் கொள்கையை செயல்படுத்துவதை மேற்பார்வையிடுதல் மற்றும் அலுவலகத்தை மேற்பார்வை செய்வது ஆகியவற்றுக்கு இந்த அலுவலகம் பொறுப்பாகும். கூடுதலாக, இது மற்ற அரசாங்க அமைப்புகளான நேரடியாக பிரதமருக்கு அறிக்கை அளிக்கும் துறைகளுக்கும் பொறுப்பு வகிக்கிறது. [1]
பிரதமர் அலுவலகம் பாக்கித்தானின் இசுலாமாபாத்து நகரத்தின் சிவப்பு மண்டலத்தில் அமைந்துள்ளது. [2] சிவப்பு மண்டலத்தில் அரசுத் துறை கட்டடங்களும் இராணுவ கட்டடங்களும் அமைந்துள்ளன
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ghumman, Khawar (March 26, 2013). "Jaura principal secretary to PM". DAWN.COM.
- ↑ "Prime Minister's Office, Islamabad, Pakistan". Pmo.gov.pk. பார்க்கப்பட்ட நாள் 1 August 2018.