பாகீரதி அம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாகீரதி அம்மா (Bhageerathi Amma) (பிறப்பு 1914கள்-23 சூலை, 2021) ) கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு இந்திய பெண்ணாவார். இவர் தனது 105 வயதில் கல்வியறிவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றபோது தேசிய அளவில் கவனத்திற்கு வந்தார். இவர் நாரி சக்தி விருதுடன் கௌரவிக்கப்பட்டார் மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இவரைப் பாராட்டினார்.

வாழ்க்கை[தொகு]

1914களில் பிறந்த இவர் தற்போது கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள பிரக்குளத்தில் வசிக்கிறார். ஒரு பிரசவத்தில் இவரது தாயார் இறந்தவுடன், தனது இளைய உடன்பிறப்புகளை கவனித்துக்கொண்டார். இவரது கணவர் 1930 களில் இறந்தார். இதனால் தனது குழந்தைகளை தனியாக வளர்த்தெடுத்தார். [1] இவருக்கு 5 அல்லது 6 குழந்தைகளும், 13 அல்லது 16 பேரப்பிள்ளைகளும், மேலும் 12 பெரிய-பேரக் குழந்தைகளும் இருப்பதாக தெரிகிறது. [2] இவர், இந்த வயதிலும் தொலைக்காட்சியில் துடுப்பாட்டம், நாடகத் தொடர் போன்றவற்றை பார்த்து ரசிக்கிறார். [3]

தேர்வு[தொகு]

தனது 105 வயதில், இவர் தனது கல்வியைத் தொடர முடிவு செய்து கணிதம், மலையாளம், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகியவற்றில் தேர்வுகள் எழுதினார். இவரது வயது காரணமாக, கேரள எழுத்தறிவுத் திட்ட இயக்ககம் மூன்று நாட்களுக்கு மேல் வீட்டிலேயே தேர்வு செய்ய அனுமதித்தது. [3] இவர் 275க்கு 205 மதிப்பெண்களைப் பெற்றார். மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்ற மிக வயதான நபரானார். [4]

விருதுகளும் அங்கீகாரமும்[தொகு]

இவர், 2019 நாரி சக்தி விருது வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி இவரை புகழ்ந்து பேசினார்: "நாம் வாழ்க்கையில் முன்னேற விரும்பினால், நம்மை நாமே வளர்த்துக் கொள்ள வேண்டும், வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க விரும்பினால், அதற்கான முதல் முன் நிபந்தனை நமக்குள் இருக்கும் மாணவப் பருவம் ஒருபோதும் இறக்கக்கூடாது ". [5] இவரைப் போன்றே கற்றல் தேர்வெழுதிய மற்றொரு வெற்றியாளர் கேரளாவைச் சேர்ந்த 98 வயதான கார்த்தியாயனி அம்மா என்பவராவார். <[6]

உடல்நலக்குறைவு காரணமாக அம்மா விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் விரைவில் இவர் ஓய்வூதியாமாக மாதத்திற்கு 1,500 ரூபாயைப் பெற்றார். ஓய்வூதியம் பெறுவதற்கு தனது ஆதார் அடையாள அட்டை தகவல்களை இவரால் கொடுக்க முடியவில்லை, ஆனால் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி இவருக்கு உதவியது. [5][7]

இறப்பு[தொகு]

வயது மூப்புகாரணமாக 23 சூலை 2021, அன்று தனது 107 வயதில் அம்மா இறந்தார்.[8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "105-year-old Bhageerathi Amma Sits for Fourth Standard Exams at Kerala's Kollam" (in en). News18. 20 November 2019. https://www.news18.com/news/india/105-year-old-bhageerathi-amma-sits-for-fourth-standard-exams-at-keralas-kollam-2393871.html. 
  2. "Meet Karthiyani & Bhageerathi Amma, They'll Get Nari Shakti Puraskar For Academic Excellence" (in en-IN). India Times. 5 March 2020. https://www.indiatimes.com/news/india/meet-karthiyani-bhageerathi-amma-theyll-get-nari-shakti-puraskar-for-academic-excellence-507753.html. 
  3. 3.0 3.1 "Kerala’s literacy history gets new ambassador: 105-year-old Bhageerathi Amma" (in en). The Indian Express. 20 November 2019. https://indianexpress.com/article/education/great-grandmother-appears-for-literacy-equivalency-exam-in-kerala-6128420/. 
  4. Staff Reporter (6 February 2020). "105-year-old student from Kerala clears all Class 4 papers" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/kerala/centenarian-clears-all-class-4-papers/article30746276.ece. 
  5. 5.0 5.1 "After PM's praise, oldest learner Bhageerathi Amma set to get Aadhaar" (in en). The Times of India. PTI. 27 February 2020. https://timesofindia.indiatimes.com/india/after-pms-praise-oldest-learner-bhageerathi-amma-set-to-get-aadhaar/articleshow/74333591.cms. 
  6. Staff (7 March 2020). "98 yrs old from Kerala to be presented Nari Shakti Puraskar, Here's Why?". The Dispatch. https://www.thedispatch.in/98-yrs-old-from-kerala-to-be-presented-nari-shakti-puraskar-heres-why/. 
  7. "Old-age pension for ‘grandmother of learning’ Bhageerathi Amma" (in en). Mathrubhumi. 12 March 2020. Archived from the original on 1 பிப்ரவரி 2021. https://web.archive.org/web/20210201055736/https://english.mathrubhumi.com/news/good-news/old-age-pension-for-grandmother-of-learning-bhageerathi-amma-1.4607829. 
  8. "Bhageerathi Amma passes away". The Week. 23 July 2021. 23 July 2021 அன்று பார்க்கப்பட்டது.
  9. "Kerala's 'oldest learner' Bhageerathi Amma no more - Times of India". The Times of India. 2021-07-23 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகீரதி_அம்மா&oldid=3428570" இருந்து மீள்விக்கப்பட்டது