பஸ்தி மகோற்சவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஸ்தி பெருவிழா
அமைவிடம்(கள்)பஸ்தி மாவட்டம், உத்திரப்பிரதேசம், இந்தியா

பஸ்தி மகோற்சவம் என்பது இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் பஸ்தியில் ஆண்டுதோறும் நடைபெறும் கலாச்சாரத் திருவிழாவாகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடைபெறும். இந்த பஸ்தி பெருவிழா மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது.

வரலாறு[தொகு]

பஸ்தி மகோற்சவம் எனும் இக்கலாச்சாரப் பெருவிழாமுதன்முதலில் 2019 ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டு பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படுகிறது.

2021[தொகு]

2021 ஆம் ஆண்டுக்கான பஸ்தி மகோற்சவம், பிப்ரவரி 19 முதல் 21 வரை நடைபெற்றது. இப்பெரு விழாவை பாஜக உத்தரப் பிரதேச மாநிலத் தலைவர் சுதந்திர தேவ் சிங் நிகழ்த்தினார். 20ம் தேதி லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நடிகர் மற்றும் அரசியல்வாதியான ரவி கிஷன், பாடகர் மனோஜ் திவாரி, ஹிமான்ஷு சக்சேனா, கவிஞர் அனாமிகா அம்பர், சுனில் ஜோகி மற்றும் நகைச்சுவை நடிகர் சுனில் பால் ஆகியோர் மஹோத்சவ் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அனைத்து நிகழ்ச்சிகளும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆடிட்டோரியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. [1] [2] [3]

2020[தொகு]

2020 ஆம் ஆண்டுக்கான பஸ்தி மகோற்சவம் ஜனவரி 28 தொடங்கி, பிப்ரவரி 1 வரை நடைபெற்றது. [4], விழாவை உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தலைவர் ஹிருதய் நாராயண் தீட்சித் கடந்த 28ஆம் தேதி தொடங்கி வைத்தார். [5] அனுப் ஜலோட்டா, மைதிலி தாக்கூர், பிரிஜேஷ் சாண்டில்யா, பெனாஸ் மசானி மற்றும் குமார் விஸ்வாஸ் போன்ற பல்வேறு கலைஞர்கள் இந்த மகோற்சவத்தில் பங்கிபெற்றனர். [6] [7] நிகழ்ச்சி நடைபெற்ற இடம் கடேஷ்வர் பூர், பஸ்தியில் உள்ள அரசு இடைக் கல்லூரியாகும். [8]

2019[தொகு]

2019 ஆம் ஆண்டுக்கான ஜனவரி 28 தொடங்கி 1 பிப்ரவரி 2019 வரை நடைபெற்றது. [9] நிகழ்ச்சி நடைபெற்ற இடம் அரசு இடைக் கல்லூரி, கடேஷ்வர் பூர், பஸ்தி.

மேலும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Veteran Artist will perform in Basti Mahotsav". https://www.amarujala.com/uttar-pradesh/basti/basti-mahotsav-veteran-artists-of-the-country-will-perform-basti-news-gkp3846314180/. 
  2. "Basti Mahotsav Schedule". https://bhartiyabastiportal.com/uttar-pradesh-news-in-hindi/up-basti-news/basti-mahotsav-2021-dates-time-schedule-harish-dwivedi-news/25944/. 
  3. "BJP State President Swatantra Dev Singh to visit Basti Mahotsav". https://www.amarujala.com/gorakhpur/bjp-state-president-swatantra-dev-singh-visit-in-basti-mahotsav-basti. 
  4. "बस्ती महोत्सव 28 से, कला-संस्‍कृति का होगा संगम". https://www.livehindustan.com/uttar-pradesh/gorakhpur/story-basti-mahotsav-will-be-held-on-28th-jan-2365997.html. 
  5. Pioneer, The. "Assembly Speaker to kick-off Basti Mahotsav today". https://www.dailypioneer.com/2020/state-editions/assembly-speaker-to-kick-off-basti-mahotsav-today.html. 
  6. "28 जनवरी से 1 फरवरी तक होगा बस्ती महोत्सव, कुमार विश्वास, अनूप जलोटा और मैथिली के गीतों से सजेगी महफिल". https://www.patrika.com/basti-news/basti-mahotsav-2020-kumar-vishwas-and-anup-jalota-will-main-attraction-5674349/. 
  7. "बस्ती महोत्सव में हुनर दिखा सकते हैं स्थानीय युवा, 28 जनवरी से एक फरवरी तक होगा आयोजन". https://www.amarujala.com/uttar-pradesh/basti/basti-mahotsav-local-youth-will-get-a-chance-to-show-their-skills-basti-news-gkp3376240185. 
  8. "बस्ती महोत्सव आज से, सजा जीआइसी मैदान". https://www.jagran.com/uttar-pradesh/basti-basti-festival-begins-today-gic-grounds-decorated-19974728.html. 
  9. "बस्ती महोत्सव का भव्य आगाज 28 जनवरी से". https://www.livehindustan.com/uttar-pradesh/basti/story-the-grand-opening-of-basti-festival-from-28-january-2927935.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஸ்தி_மகோற்சவம்&oldid=3668058" இருந்து மீள்விக்கப்பட்டது