மனோஜ் திவாரி (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனோஜ் திவாரி
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்
வடகிழக்கு
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2014
முன்னையவர்ஜெய் பிரகாஷ் அகர்வால்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 பெப்ரவரி 1971 (1971-02-01) (அகவை 53)
கைமுர் மாவட்டம், பீகார், இந்தியா
தேசியம்இந்தியாn
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ராணி திவாரி (m. 1999–2012; மணமுறிவு)
பிள்ளைகள்1[1]
பெற்றோர்(s)சந்திரதேவ் திவாரி, லலிதா தேவி [2]
வாழிடம்(s)புது தில்லி, இந்தியா
முன்னாள் கல்லூரிபனாரசு இந்து பல்கலைக்கழகம்[3]
வேலைநடிகர், பாடகர், இயக்குநர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், அரசியல்வாதி

மனோஜ் திவாரி (ஆங்கில மொழி: Manoj Tiwari) (பிறப்பு: 1 பிப்ரவரி 1971)[1] என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் கலைஞராவார். தொடக்கத்தில் சமாஜ்வாதி கட்சியில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினாலும் 2014, 2019 பொதுத்தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார். இவர் தலைமையில் 2017 டெல்லி உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் வென்றது.[4] இவர் போஜ்பூரி திரைப்படங்களில் நடிகராகவும் பாடகராகவும் பிரபலமானவர். இந்தி பிஸ் பாஸ் தொடர் உட்பட சில தொகைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டவராவார்.

குடும்பம்[தொகு]

1971 இல் பிகார் கைமுர் மாவட்டத்தில் அதர்வாலியா என்ற சிறிய கிராமத்தில் சந்திரதேவ் மற்றும் லலிதாதேவி தம்பதியினர்க்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு ஐந்து உடன் பிறந்தவர்கள் உள்ளனர்.[1][5] இவரின் பதினொரு ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பின் 2011 இல் மணமுறிவு பெற்றார்.[6]

அரசியல் வாழ்க்கை[தொகு]

2009 பொதுத் தேர்தலில் கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பாகப் போட்டியிட்டார் ஆனால் யோகி ஆதித்தியநாத்திடம் தோல்வியடைந்தார்.[7] சிவ சேனா கட்சி தொடர்பாக இவர் கூறிய கருத்திற்கு 2009 நவம்பரில் இவரின் மும்பை வீடு தாக்குதலுக்குள்ளானது. ஆனால் அதை அவர் மறுத்தார்[8]

2011 இல் அப்போதைய பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சத்ருகன் பிரசாத் சின்காவின் நிகழ்ச்சியில் நெருங்கிக் காணப்பட்டார்.[9] பாபா ராம்தாவ் நடத்திய லஞ்ச ஒழிப்பு இயக்கத்தை ஆதரித்தார்[10] மேலும் அண்ணா அசாரே கைதையும் எதிர்த்தார்.[11] பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து 2014 பொதுத் தேர்தலில் வடகிழக்கு தில்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஆனந்த் குமாரை 1,44,084 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். 2019 பொதுத் தேர்தலில் மீண்டும் அதே வடகிழக்கு தில்லி தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் சீலா தீக்‌சித்தைவிட 3.63 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார்[12][13]


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Biography". Manoj Tiwari Official Website. Archived from the original on 2020-02-13. பார்க்கப்பட்ட நாள் 2012-01-05.
  2. "My Neta Info". myneta.info. http://www.myneta.info/ls2014/candidate.php?candidate_id=66. 
  3. "Manoj Tiwari is new Delhi BJP chief". The Hindu. http://www.thehindu.com/news/cities/Delhi/Manoj-Tiwari-is-new-Delhi-BJP-chief/article16732719.ece/amp/#xxri=15. பார்த்த நாள்: 2016-12-01. 
  4. "Delhi MCD Election 2017 Results". Elections.in. 26 May 2017. http://www.elections.in/delhi/mcd-elections/. 
  5. "Actor Manoj Tiwari to build temple for Tendulkar and Dhoni". Indian Express. 8 July 2011. http://indianexpress.com/article/entertainment/entertainment-others/actor-manoj-tiwari-to-build-temple-for-tendulkar-and-dhoni/. பார்த்த நாள்: 2017-03-30. 
  6. Jha, Giridhar (11 July 2011). "Manoj Tiwari appeals for help to persuade wife to drop divorce plan". India Today. http://indiatoday.intoday.in/story/manoj-tiwari-appeals-for-help-to-persuade-wife-to-drop-divorce-plan/1/144394.html. பார்த்த நாள்: 2012-01-05. 
  7. "Manoj Tiwari,Samajwadi party, Gorakhpur, UP, Key Contenders for India Election 2009". Archived from the original on 2018-09-11. பார்க்கப்பட்ட நாள் 2019-05-28.
  8. "Manoj Tiwari's residence attacked in Mumbai". The Times of India. PTI. 17 November 2009 இம் மூலத்தில் இருந்து 2012-07-15 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120715003755/http://articles.timesofindia.indiatimes.com/2009-11-17/mumbai/28110529_1_manoj-tiwari-residence-of-bhojpuri-singer-sachin-tendulkar. பார்த்த நாள்: 2012-01-05. 
  9. Singh, Varun (29 January 2011). "Manoj Tiwari sees saffron". Mid-Day. http://www.mid-day.com/news/2011/jan/290111-Manoj-Tiwari-BJP-ticket-elections-North-Indian-population.htm. பார்த்த நாள்: 2012-01-05. 
  10. "Bhojpuri superstar Manoj Tiwari joins Ramdev's campaign against black money". PTI. The Hindu Business Line. 4 June 2011. http://www.thehindubusinessline.com/industry-and-economy/economy/article2076332.ece. பார்த்த நாள்: 2011-01-05. 
  11. Jha, Giridhar (16 August 2011). "Bhojpuri film stars rally round Anna; Nitish decries arrest as 'rehearsal of Emergency'". India Today. 
  12. "Deve Gowda, Sheila Dikshit, Mehbooba: Saffron Wave Swept Away a Dozen Ex-CMs, 8 of Them From Cong". News18. பார்க்கப்பட்ட நாள் 2019-05-24.
  13. "Buoyed after winning all seven Lok Sabha seats in Delhi, BJP expresses confidence in wresting power from AAP in Assembly polls". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 2019-05-24.

வெளியிணைப்புகள்[தொகு]