உள்ளடக்கத்துக்குச் செல்

கோரக்பூர் மகோற்சவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோரக்பூர் மகோற்சவம்
அமைவிடம்(கள்)கோரக்பூர், உத்திரப் பிரதேசம், இந்தியா
வலைத்தளம்
gorakhpurmahotsav.co.in

கோரக்பூர் மகோற்சவம் என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள கோரக்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் கலாச்சாரத் திருவிழாவாகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நடைபெறும். 2018 முதல், சுற்றுலாத் துறை, கலாச்சாரத் துறை மற்றும் கோரக்பூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இவ்விழாவானது ஏற்பாடு செய்யப்படுகிறது. முந்தைய பதிப்புகள் கோரக்பூர் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டன.

வரலாறு[தொகு]

1997[தொகு]

கோரக்பூர் மகோற்சவம் 1997 ஆம் ஆண்டு முதன்முறையாக, முக்கிய உள்ளூர் தொழிலதிபரும், பின்னர் உத்திரப் பிரதேசத்தின் சுற்றுலாத்துறையின் ஆலோசகருமான ப்ரோதுல் குமார் லஹரியின் முயற்சியால் ஒருங்கினைக்கப்பட்டது. "ஷஹர்நாமா கோரக்பூர்" என்ற புத்தகத்தில், எழுத்தாளர் டாக்டர் வேத் பிரகாஷ் பாண்டே கோரக்பூர் மகோற்சவம்1997 இன் நினைவுகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.[1]

2001[தொகு]

கோரக்பூர் மகோற்சவம் ஜனவரி 2001 இல் டவுன் ஹால் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவர்களுக்காக நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி மாதிரியான வினாடி வினா நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

2016[தொகு]

15 வருட இடைவெளிக்குப் பிறகு, 2016ம் ஆண்டில் கோரக்பூர் மகோற்சவம் தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் அப்போதைய வட்ட ஆணையர் திரு. பி. குருபிரசாத் அவர்களின் முயற்சியில் 29 ஜனவரி-1 பிப்ரவரி 2016 இல் ஏற்பாடு செய்யப்பட்டது. மகோற்சவத்தை தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தர் பேராசிரியர் அசோக் குமார் மற்றும் காவல் ஆய்வாணையர் எச்.ஆர்.சர்மா தொடங்கி வைத்தனர்.[2][3][4]

2018[தொகு]

இரண்டு வருட இடைவெளிக்குப் பின், 2018ம்ஆண்டில் கோரக்பூர் மகோற்சவம் ஜனவரி 11-13, 2018 வரை ஏற்பாடு செய்யப்பட்டது. தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகத்தின் திறப்பு விழா மற்றும் பெரும்பாலான கலாச்சார நிகழ்வுகள் இடம் பெற்றன.[5] பாடகர் ஷான் மற்றும் ஷங்கர் மகாதேவன் ஆகியோர் முறையே முதல் மற்றும் மூன்றாம் நாள் நிகழ்ச்சிகளை நடத்தினர்.[6] ஜனவரி 11 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் அப்போதைய உத்தரபிரதேச ஆளுநர் ராம் நாயக்கால் மகோற்சவம் க்ஹொடங்கிவைக்கப்பட்டது. மேலும் ஜனவரி 13 அன்று கோரக்நாத் கோயிலில் உள்ள ஸ்மிருதி பவனில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நிறைவு விழாவில் கலந்து கொண்டார்.

நிகழ்வு/நிகழ்ச்சியாளர் இடம்
மகோற்சவம் துவக்கம், விவாதம் (இந்தி/ஆங்கிலம்), கட்டுரை, வினாடி வினா, சதுரங்கப் போட்டிகள், அறிவியல் கண்காட்சி தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வசதிகள்
பூப்பந்து, கபடி, கைப்பந்து பிராந்திய விளையாட்டு அரங்கம், கோரக்பூர்
திறன்சார் விளையாட்டுகள், சப்ராங், கலாச்சார நிகழ்ச்சிகள், போஜ்புரி இரவு ( ரவி கிஷன், மாலினி அவஸ்தி ), பாலிவுட் இரவு ( ஷான், ஷங்கர் மகாதேவன், பூமி திரிவேதி, லலித் பண்டிட், அனுராதா பட்வால், ஜிம்மி ஜோசப்) முக்கிய மேடை, தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம்
பஜன் ( அனுப் ஜலோட்டா, அனுராதா பௌட்வால் ), பரிசு விநியோகம், நிறைவு விழா ஸ்மிருதி பவன், கோரக்நாத் கோவில்

2019[தொகு]

2019ம் ஆண்டில் கோரக்பூர் மகோற்சவம் ஜனவரி11 -13, 2019 வரை ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்விற்கான இடம் 2018 போன்றே, தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம் ஆகும்.[7][8]

நிகழ்வு/நிகழ்ச்சியாளர் இடம்
மகோற்சவம் துவக்கம் தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம்
கலாச்சார நிகழ்ச்சிகள், போஜ்புரி இரவு, பாலிவுட் இரவு ( சுக்விந்தர் சிங், மோஹித் சவுகான் ) முக்கிய மேடை, தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம்
பரிசு வழங்கல், நிறைவு விழா ஸ்மிருதி பவன், கோரக்நாத் கோவில்

2020[தொகு]

2020 கோரக்பூர் மகோற்சவம் 11-14 ஜனவரி 2020 ஆகிய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டது.[9] முதலில் இது 11-13 ஜனவரி 2020 எனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஓமன் சுல்தான் கபூஸ் பின் சைட் இறந்த பிறகு தேசிய துக்கம் அனுசரிப்பு காரணமாக 13 ஆம் தேதிக்கான அனைத்து நிகழ்ச்சிகளும் ஜனவரி 14ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.[10] உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மகோற்சவத்தைத் துவக்கி வைத்தார். நிறைவு விழாவில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.[11] மேலும் ஷில்ப் மேளா(பொறியியல் கைவினைக் கண்காட்சி), உள்ளூர் நாட்டுப்புற நடனங்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களைச் சிறப்பித்துக் காண்பிக்கும் வகையில் ஜனவரி 11-17 க்கு இடையில் ஏற்பாடு செய்யப்பட்டது.[12][13]

நிகழ்வு/நிகழ்ச்சியாளர் இடம்
மகோற்சவம் துவக்கம், விவாதம் (இந்தி/ஆங்கிலம்), கட்டுரை, வினாடி வினா, சதுரங்கப் போட்டிகள், அறிவியல் கண்காட்சி தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வசதிகள்
பூப்பந்து, கபடி, கைப்பந்து, அரை மாரத்தான் (ஆண்கள்/பெண்கள்) பிராந்திய விளையாட்டு அரங்கம், கோரக்பூர்
நாய் கண்காட்சி விளையாட்டு மைதானம், தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம்
டேலண்ட் ஹன்ட், சப்ராங், கலாச்சார நிகழ்ச்சிகள், போஜ்புரி இரவு, பாலிவுட் இரவு முக்கிய மேடை, தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம்
காதி ஆடைக் கண்காட்சி (ஷோஸ்டாப்பர் - மிஸ் குளோப் 2016 டிம்பிள் படேல் ) முக்கிய மேடை, தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம்
பஜன் சந்தியா ( அனுராதா பட்வால் ), பரிசு வழங்கல், நிறைவு விழா ஸ்மிருதி பவன், கோரக்நாத் கோவில்

பாடகர் சோனு நிகம் ஜனவரி 13 அன்று நிகழ்ச்சி நடத்துவதாகத் திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால் அவரது நிகழ்ச்சி ஜனவரி 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவர் அந்நிகழ்ச்சியிலிருந்து ஒதுங்கினாலும் ஜிஎஸ்டியுடன் கூடிய தனது கட்டணத்தைத் (4 மில்லியன் INR) திருப்பித் தரவில்லை. ஏற்பாட்டுக் குழுவுடனான கலந்துரையாடலுக்குப் பிறகு, கோரக்பூர் மகோற்சவம் 2022 இல் அதே கட்டணத்தில் நிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்டார்.[14][15]

2021[தொகு]

2021 கோரக்பூர் மகோற்சவம் 12-13 ஜனவரி 2021 வரை ஏற்பாடு செய்யப்பட்டது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக மகோற்சவம் மூன்று நாட்களுக்குப் பதிலாக இரண்டு நாட்கம்ளாகக் குறைக்கப்பட்டது. 12ஆம் திகதி உத்தரப் பிரதேச சுற்றுலாத் துறை அமைச்சர் நீலகந்த் திவாரியால் மகோற்சவம் தொடங்கி வைக்கப்பட்டது. 13ஆம் தேதி நிறைவு விழாவில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை வகித்தார். 2021ல் திறப்பு விழா மற்றும் நிறைவு விழா ராம்கர் தால் ஏரிக்கு அருகில் உள்ள சம்பா தேவி பூங்காவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. மகோற்சவத்தின் நேரடி ஒளிபரப்பு சாஸ்திரி சௌக், குட்சேரி சதுக்கம், மொஹதிபூர் சதுக்கம் மற்றும் ராம்கர் தால் ஆகிய இடங்களில் ஒளிமுனை மூலம் திரைகளில் ஒளிபரப்பப்பட்டது.மேலும் இணையதளம் மூலமாகவும் ஒளிபரப்பப்பட்டது. மகோற்சவத்தில் ஒரு பகுதியாக மஹந்த் திக்விஜய்நாத் பூங்காவில் நாய்கள் கண்காட்சி ஒரு நாள் ஏற்பாடு செய்யப்பட்டது மகோற்சவத்தின் இரண்டாவது நாளில் பாடகி மைதிலி தாக்கூர் நிகழ்வை நடத்தினார். குரு கோரக்நாத், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் பூர்வாஞ்சல் பகுதியில் உள்ள பிரபலங்கள் குறித்த நேரடிக் கண்காட்சி ஜனவரி 12 முதல் 16 வரை சம்பா தேவி பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இத்துடன் விவசாயம், தோட்டம், புத்தகம், சரஸ் கண்காட்சி மற்றும் அறிவியல் கண்காட்சி ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டது.[16][17]

நிறைவு விழாவில் பல்வேறு துறைகளைச் சார்ந்த திறமையாளர்களுக்கு 'கோரக்பூர் ரத்னா' விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்றவர்களில் பாடகர் நந்து மிஸ்ரா (கலை), டாக்டர் சஞ்சீவ் குலாட்டி (சமூக சேவை), டாக்டர் நரேந்திர மோகன் சேத் (சுகாதாரம்), டாக்டர் ராம் சேத் சவுத்ரி (வேளாண் அறிவியல்), ஜோதி மஸ்காரா (வணிகம்), எஸ்.எம். அலி சயீத், பிரேம் மாயா (விளையாட்டு), பேராசிரியர். டாக்டர். மீனாட்சி நரேன் (அறிவியல்) மற்றும் அமர்நாத் யாதவ் (மல்யுத்தம்) ஆகியோர் அடங்குவர்.[18] மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்கு மோட்டார் பொருத்தப்பட்ட முச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.

நிகழ்வு/நிகழ்ச்சியாளர் இடம்
மகோற்சவம் தொடக்க விழா, பரிசு வழங்கல், நிறைவு விழா சம்பா தேவி பூங்கா, ராம்கர் தால், கோரக்பூர்
பூப்பந்து, மல்யுத்தம், கபடி, கால்பந்து, கோ-கோ, மிசைப் பந்தாட்டம், திவ்யாங் முச்சக்கரவண்டி பந்தயம் பிராந்திய விளையாட்டு அரங்கம், கோரக்பூர்
சதுரங்கம் ஆர்பிஎம் அகாடமி, கிரீன் சிட்டி, கோரக்நாத், கோரக்பூர்
விவசாயம், தோட்டம், புத்தகம் மற்றும் சரஸ் கண்காட்சி, அறிவியல் கண்காட்சி (12-16 ஜனவரி 2021) சம்பா தேவி பூங்கா, ராம்கர் தால், கோரக்பூர்
நாய் கண்காட்சி, சூடான காற்று பலூனிங் மஹந்த் திக்விஜய்நாத் பூங்கா, கோரக்பூர்
பிப்ரவரி 4, 1922 (அபியான் தியேட்டர் குழுவின் சௌரி சௌரா சம்பவத்தின் மீதான நாடகம்), சஞ்சு ராஜ் கான் (சத்ய சாரதி சாந்தா), விதேஷியா (இந்தியாவின் போஜ்புரி அசோசியேஷன் ஆஃப் பிகாரி தாக்கூரின் கதையில் நாடகம்), மலாய் மிஸ்ராவின் நாடகம் முக்தா காஷி மஞ்ச், தாரமண்டல், கோரக்பூர்
ஆயத்த ஆடைகள் பற்றிய திட்டம் உத்யோக் பவன், GIDA, கோரக்பூர்
குரு கோரக்நாத்தின் வாழ்க்கை மற்றும் தத்துவம் பற்றிய கலந்துரையாடல், கோரக்பூர் பகுதியில் சுற்றுலாவின் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு, சுகாதாரத் துறையில் தடுப்பு பராமரிப்பு முக்கியத்துவம், பசுக்களைப் பாதுகாத்தல் மற்றும் சுயசார்ந்த பங்கு வளர்ப்பு இணைப்பு பவன், கோரக்பூர்
கவி சம்மேளன் ( சுனில் ஜோகி, தினேஷ் பாவ்ரா, விஷ்ணு சக்சேனா, அகிலேஷ் குமார் மிஸ்ரா, பத்மினி ஷர்மா, கஜேந்திர சோலங்கி, ரோஹித் ஷர்மா, சந்திர பிரகாஷ் அகர்வால்), கலாச்சார நிகழ்ச்சிகள், சப்ராங், பாடல் ( மைதிலி தாக்கூர், டாக்டர் பிரதிபா, ஆகாஷ் துபே), பஜன் (கிஷோர்) சதுர்வேதி, சுவாதி) சம்பா தேவி பூங்கா, ராம்கர் தால், கோரக்பூர்
கதக் (அனுஸ்ரீ பானர்ஜி, மரியதா குல்ஸ்ரேஸ்தா), படாய், ஃபருவாஹி, கூமர், பனிஹாரி & நௌரதா நடனம் சம்பா தேவி பூங்கா, ராம்கர் தால், கோரக்பூர்
காதி ஆடை கண்காட்சி (ஷோஸ்டாப்பர் - மிஸ் குளோப் 2016 டிம்பிள் படேல் ) சம்பா தேவி பூங்கா, ராம்கர் தால், கோரக்பூர்
டும்ரூ வடன் (காசி விஸ்வநாத் தும்ரூ குழு, வாரணாசி) சம்பா தேவி பூங்கா, ராம்கர் தால், கோரக்பூர்
பறவை கண்காணிப்பு, இயற்கை நடை, முத்திரை மற்றும் வனவிலங்கு புகைப்பட கண்காட்சி (ஹெரிடேஜ் அறக்கட்டளை, வனத்துறை கோரக்பூர் மற்றும் ஷஹீத் அஷ்பக் உல்லா கான் பிரானி உத்யன் கோரக்பூர் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டது) ராம்கர் தால் ஏரி, ஷஹீத் அஷ்பக் உல்லா கான் பிரானி உத்யன்
இளைஞர் சக்தி சங்கத்தின் நுக்கத் நாடகம் (தெரு நாடகம்). கோரக்பூர் நகரின் பல்வேறு இடங்கள்

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Protul kumar Lahiri - Service Provider from Gorakhpur, India | About Us".
 2. "Gorakhpur Mahotsav to be organized again". https://www.amarujala.com/uttar-pradesh/gorakhpur/191510931534-gorakhpur-news. 
 3. "Government plan Gorakhpur Mahotsav". https://timesofindia.indiatimes.com/city/lucknow/like-saifai-up-government-plans-gorakhpur-mahotsav/articleshow/62261716.cms. 
 4. "गोरखपुर महोत्सव कल से, यूनिवर्सिटी मेन गेट से होगी एंट्री".
 5. "Glimpses of Gorakhpur Mahotsav 2018 organized by U.P. Tourism at Gorakhpur from 11th-13th January, 2018" (in en). பிசினஸ் ஸ்டாண்டர்ட். 28 January 2019 இம் மூலத்தில் இருந்து 6 ஜனவரி 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200106223046/http://uptourism.gov.in/post/glimpses-of-gorakhpur-mahotsav-2018. பார்த்த நாள்: 20 January 2020. 
 6. "Gorakhpur festival will shine with the voice of Shankar Mahadevan and Shaan" (in hi). Navbharat Times. 13 December 2017. https://navbharattimes.indiatimes.com/gorakhpur-festival-will-shine-with-the-voice-of-shankar-mahadevan-and-shaan/articleshow/62045611.cms. பார்த்த நாள்: 6 January 2021. 
 7. "GorakhpurOnline.in & Gorakhpur Mahotsav 2019 Announce Tie-up for the 2nd Year". Uniindia.com. 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-20.
 8. "Gorakhpur Mahotsav will be from 11th Jan numaish ground will also shine - 11 जनवरी को गोरखपुर महोत्सव का आगाज, नुमाइश पार्क भी होगा गुलजार". Livehindustan.com. 2019-11-06. பார்க்கப்பட்ட நாள் 2020-01-20.
 9. "GorakhpurOnline.in and Gorakhpur Mahotsav 2020 Announce Tie-up for the 3rd Year" (in en). பிசினஸ் ஸ்டாண்டர்ட். 10 January 2020. https://www.business-standard.com/article/pti-stories/gorakhpuronline-in-and-gorakhpur-mahotsav-2020-announce-tie-up-for-the-3rd-year-120011000606_1.html. பார்த்த நாள்: 20 January 2020. 
 10. "गोरखपुर महोत्सव : अंतिम दिन के सभी कार्यक्रम स्थगित" (in hi). Dainik Jagran. 13 January 2020. https://www.jagran.com/uttar-pradesh/gorakhpur-city-all-programs-on-the-last-day-of-gorakhpur-festival-postponed-19931660.html. பார்த்த நாள்: 6 January 2021. 
 11. "CM, Guv to visit Gorakhpur Mahotsav" (in en). பிசினஸ் ஸ்டாண்டர்ட். 11 January 2020. https://timesofindia.indiatimes.com/city/varanasi/cm-guv-to-visit-gorakhpur-mahotsav/articleshow/73179297.cms. பார்த்த நாள்: 6 January 2021. 
 12. "Shilp Mela 2020" (in hi). Amar Ujala. 16 January 2020. https://www.amarujala.com/gorakhpur/cultural-events-at-shilp-mela-organized-under-gorakhpur-mahotsav. பார்த்த நாள்: 6 January 2021. 
 13. "detailed program of three days here". https://www.jagran.com/uttar-pradesh/gorakhpur-city-what-is-special-about-gorakhpur-festival-see-the-detailed-program-of-the-three-days-here-19924069.html. 
 14. "Sonu Nigam did not return 40 Lakh rupees" (in hi). Amar Ujala. 24 February 2020. https://www.amarujala.com/gorakhpur/sonu-nigam-did-not-return-40-lakh-rupees-fees-for-gorakhpur-mahotsav. பார்த்த நாள்: 6 January 2021. 
 15. "Sonu Nigam will not come this time agreement will be done for next year" (in hi). Dainik Jagran. 19 December 2020. https://www.jagran.com/uttar-pradesh/gorakhpur-city-sonu-nigam-will-not-come-this-time-agreement-will-be-done-for-next-year-21179955.html. பார்த்த நாள்: 6 January 2021. 
 16. "गोरखपुर महोत्‍सव : ताल के तट पर उमंग और उल्लास का मेला Gorakhpur News".
 17. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 14 January 2021. பார்க்கப்பட்ட நாள் 13 January 2021.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
 18. "ये हैं गोरखनाथ की नगरी के 'गौरव', गोरखपुर रत्न अवॉर्ड से सम्मानित करेंगे Cm योगी आदित्यनाथ".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரக்பூர்_மகோற்சவம்&oldid=3743662" இலிருந்து மீள்விக்கப்பட்டது