பழைய மாணவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பழைய மாணவர் அல்லது முன்னாள் மாணவர் (Alumnus, Alumni) என்பவர், முன்னாட்களில் பயின்ற கல்லூரி மாணவர்களையும், முன்னாட்களில் பயின்ற பள்ளி மாணவர்களையும் குறிக்கும் சொல். பல மாணவர்கள் கல்லூரி முடிந்த பின்பும் தொடர்பில் இருப்பர். பலர் அமைப்பு நோக்கிலும் செயற்படுவர்.

தமிழகத்தில் பல பள்ளி, கல்லூரிகளில் முன்னாள் மாணவர் சங்கம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது.[1] இவ்வமைப்புகள் தம்முடைய முன்னாள் மாணவர்களையும் இந்நாள் மாணவர்களையும் இணைக்கும் பொருட்டு செயல்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது தேவைப்படும்போதோ இவ்வமைப்புகளின் கூட்டம் கூட்டப்பெற்று, அந்த ஆண்டில் நடைபெற்ற பணிகள், அடுத்த ஆண்டு செயல்படுத்த வேண்டிய மாணவர்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் போன்றவற்றைப் பற்றிய கலந்துரையாடல் நடைபெறும்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழைய_மாணவர்&oldid=1900273" இருந்து மீள்விக்கப்பட்டது