உள்ளடக்கத்துக்குச் செல்

பழியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பளியர், அல்லது பழையர் அல்லது பழையரேர் (Paliyan, Palaiyar, Pazhaiyarare) எனப்படுபவர் தென்னிந்தியாவில், முக்கியமாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தென்னக காடுகளில் வாழும் திராவிட பழங்குடியினராவர். இவர்கள் பொதுவாக வேட்டைக்காரர்களாகவும், தேன் சேகரிப்பவர்களாகவும் உள்ளனர். சேனைக் கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு இவர்களது முதன்மை உணவாக உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவர்கள் அரைகுறை ஆடை அணிந்திருந்தும் குகைகளிலும் பாறை இடுக்குகளிலும் வாழ்ந்திருந்தனர். தற்காலத்தில் இவர்கள் மற்றவர்களைப் போலவே மாறி வனப்பொருட்களை விற்றும் விவசாயம் செய்தும் தேனீக்கள் வளர்த்தும் வாழ்ந்து வருகின்றனர். மலைப்புறத் தோட்டங்களில் தொழிலாளர்களாகவும் சிலர் பணி புரிகின்றனர். மேலும் இவர்கள் மலை கோயில்களில் பூசை செய்தும், கோயில் சுற்றுபுறத்தை தூய்மை செய்தும் வருகின்றனர். இவர்களுக்கு அரசு திட்டத்தின் முலம் வீட்டுமனை மற்றும் ஆரம்பக் கல்வி கூடங்களும் அமைத்து தரப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழியர்&oldid=3872454" இலிருந்து மீள்விக்கப்பட்டது